பட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!**

அன்பார்ந்த அறுசுவை ரசிகர்களே! ரசிகைகளே!

அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, நீங்கள் ஆவலோடு ஒருவாரகாலமாக எதிர்பார்த்த நமது பட்டி இனிதே துவங்கி விட்டது. என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டு... சென்ற வாரம் போலவே இந்த வாரமும் நாம் பேச விருக்கும் தலைப்பும் பயனுள்ளதுதான்...அது அடுத்து வரும் கோடைவிடுமுறையை முன்னிறுத்தி...

அறுசுவை தோழி உதிராவின்

***விடுமுறைக் கால பயணங்களால் வருவது
அலுப்பும் , அலைச்சலும், பணவிரயமும்! (வருத்தமே)
அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும்!(ஆனந்தமே)***

என்ற தலைப்பின் கீழ் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!!!

உங்களது பொன்னான நேரத்தை அறுசுவைக்காக கொஞ்சம் ஒதுக்கி..அறுசுவையின் பட்டியை இம்முறையும் வெற்றிப் பட்டியாக்க .... அனைவரும் வருக ஆதரவு தருக என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்;-) நன்றி வணக்கம்_()_

பின்குறிப்பு: முதற்கட்ட அறிவிப்பு ஒவ்வொரு பதிவுக்கு பிறகும் சோடா வழங்கப்படும்.

முக்கியக்குறிப்பு: பட்டியின் விதிமுறைகளை மனதில் கொண்டு...பதிவுகளை பதிய வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரவர் கட்சி தரப்பு வாதத்தை ஆணித்தரமாக வலியுறுத்த அனைவருக்கும் மேடை, மைக் தயார் நிலையில் உள்ளது...அனைவரும் வருக வருக!

Don't Worry Be Happy.

பலமுறை எங்களுக்கு அல்வா தந்ததோடல்லாமல் நடுவர் நாற்காலிக்கு நீண்ட காலம் அல்வாவை ஊட்டி கொண்டிருந்து, தற்போது அது சாத்தியப்படாமல் சரண்டர் ஆன எங்கள் அன்பு தோழி மற்றும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நடுவர் அவர்களே உங்களுக்கு என் முதற்கண் வணக்கங்களும். வாழ்த்துக்களும். அப்படியே இந்த காங்கோவில் விளைஞ்ச ப்ரெஸ் பழ ஜூஸை கபால்னு பல்லுல படாம குடிச்சு தெம்பாய்க்குங்க.

தலைப்பை தந்த தோழிக்கு நன்றிகள். நடுவரே, நல்ல தலைப்பு, இதுவரை யாரும் விவாதிக்கப்படாத தலைப்பு. விடுமுறை பயணங்களால் வருவது அனுபவமும்,ஆனந்தமும், மனநிறையும் என்ற அணியில் இருந்து என் வாதத்தை தொடங்க விரும்பிகிறேன்.

நடுவரே, கரும்பு தின்ன யாருக்காச்சும் கசக்குமா? விடுமுறைன்னாலே கொண்டாட்டம் தான் கொண்டாட்டம்னாலே பயணம் தானே. இதை பிடிக்காத மனித ஜென்மமும் உண்டா? அப்படி இருந்தால் அவர் மனிதரே இல்லை. தெய்வத்திற்கு சமம்னு சொல்ல வர்றேன். விடுமுறை பயணத்தை பத்தி பேசினாலே அந்த அனுபவத்தை ருசித்த அனுபவம் கிடைத்துவிடுகிறது. இன்னும் அதுக்கு ப்ளான் பண்ணி, அதை நிறைவேத்தினா.. அய்யோடா. கேக்கவே வேணாம். அத்தனை சந்தோஷம் போங்க. விடுமுறை கொண்டாட்டம்னாலே வயசு வித்யாசம் இல்லாம ஆறிலிருந்து அறுபது வரை துள்ளி குதிச்சுடுவோம்.

நடுவரே, சேரை பிடிக்க தான் ஓடிவந்தேன். நான் போய் நல்லா ரோசனை பண்ணிட்டு வர்றேன். அதுவரை எங்கேயும் போகாம.. வாசப்படியையே பார்த்துட்டு இருங்க. நாங்க எப்ப வருவோம்னு..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு நடுவருக்கு வணக்கம்!! அறுசுவையின் பட்டிமன்றங்களை படித்தேன். சூப்பரா இருக்கு. புதுமையா இருக்கு. எனக்கும் ஆர்வம் வந்துடிச்சி.
நான் மிக கொஞ்சமான சுற்றுலாவே சென்றிருக்கிறேன். ஆனாலும் ஊர் சுற்றுவதில் ஆர்வம் அதிகம். எனவே என் ஓட்டு, விடுமுறை கால பயணங்களால் வருவது அனுபவமும், ஆனந்தமும், மனநிறைவுமே என்ற அணிக்கே!!

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... அருமையான தலைப்போடு துவங்கி இருக்கீங்க. வெற்றியடைய வாழ்த்துக்கள்!!! :)

தலைப்பை தந்த தோழி உத்ராவிற்கு நன்றிகள் பல.

நடுவரே... இதில் என்ன சந்தேகம்?? “அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும்” தான்.

ஏன்னா... நீங்க விடுமுறைக்கால பயணம்னு அழுத்தமா சொல்லிபோட்டீங்க!!! அப்படின்னா வெல் ப்லாண்ட் ட்ரிப்னு தான் அர்த்தம். அவசரத்தில் போகும் பயணங்களாக இருப்பது ரொம்ப ரேர். எப்போ ஒரு விஷயத்தை நல்லா யோசிச்சு நிதானமா ப்ளான் பண்ணி பண்றோமோ அது எப்பவுமே வெற்றி தான்... அந்த வெற்றி நமக்கு எப்பவும் ஆனந்தம் தான். அப்படியே சின்ன சின்ன சொதப்பல் இருந்தாலும் அது அனுபவமே... அனுபவம் தானே ஒரு மனிதனுக்கு நல்ல வாதியார்!!! அதையும் ஏத்துக்க தான் வேணும். எவ்வளவு புது விஷயங்களை கத்துக்கறோம்??? அது மனநிறைவை அளவில்லாம தருமே!!!

வாதங்களோடு நாளை வருகிறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே நானும் வந்துட்டேன்! சுற்றுலா என்றாலே கொண்டாட்டம்தானே! துண்டு போட்டு இடம் பிடிக்கத்தான் வந்தேன். நாளை இரவுக்குள் விரிவான வாதங்களுடன் வருகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கூட்டணி அமைச்சுட்டோம்ல ;) ஸ்ட்ராங்கா!!! எங்கே... கை கொடுக்கும் பலம் கூட்டும் தோழிகள் எல்லாம்... வாங்க வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கூட்டணி ராசி எப்படி வொர்க் அவுட் ஆகுதுன்னு பார்ப்போம் :) எழுத்துதவி டைப்பிங் அதனால் ஊர் திரும்பியதும் வாதங்களோடு வருகிறேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்ன இது எல்லாம் ஒரே கட்சியா. இருக்கு...டூர் னா..ஜாலி தான்...இத oppose பண்ணி பேசினா மனசாட்சி ஒத்துக்குமா...நோ வே...ஆனந்தமே...ஆனந்தமே...(அப்பா...ஜெயிக்கற கட்சிக்கு வந்தாச்சு)...ஆனா நான் இப்போ ஒரு மினி டூர் ல இருப்பதால அடிக்கடி வர முடியாது...இருந்தாலும் மேல பல ஜாம்பவான்கள் இருப்பதால நான் கவலை இல்லாம டூர் எ என்ஜாய் பண்ண போறேன்....டாட்டா..bye ..bye ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நடுவர் தோழிக்கு வணக்கம். விடுமுறைகால பயணங்களால் வருவது அலுப்பும், அலைச்சலும், பணவிரயமும்தான்.
எல்லோராலும் விடுமுறை காலத்தை பயணங்களால் நிரப்ப முடியாது. அனைவரது பொருளாதாரமும் அதற்கு இடமும் தராது. அதனால் விடுமுறை கால பயணங்கள் பணவிரயம்தான்.
சிறியவர்களுக்கு வேண்டுமானால் விடுமுறை கால பயணங்கள் குதூகலத்தை தரலாம். ஆனால் பெரியவர்களுக்கு வீட்டில் இருப்பதை காட்டிலும் பயணங்களின் போது அதிக அக்கரையும், பொறுப்பும் தேவைப்படுகிறது. அதனால் அவர்களால் பயணங்களை அனுபவிக்கவோ, ஆனந்தமடையவோ, மனநிறைவோடவோ நிச்சயம் திரும்ப முடியாது. வீடு வந்து சேர்ந்ததும் மிஞ்சியிருப்பது அலுப்பும், அலைச்சலும்தான்.
வாதங்கள் தொடரும்.........

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

விடுமுறை காலமானால் கட்டாயம் பயணம் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. அதே சமயம் விடுமுறை பயணத்தை அனுபவித்தவர்களை தான் அது அலுப்பா?சளிப்பா?பண விரயமா?அனுபவமா?ஆனந்தமா?மனநிறைவான்னு தலைப்பில் இருக்கு. அவரவர் பொருளாதாரத்துக்கு தக்கப்படி பயணத்தை மேற்கொள்ளலாமே நடுவரே. ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குபவர் சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் ஆசைப்பட முடியுமா? நடுவரே, அப்படி ஆசைப்பட முடியாதவர்கள் கூட, இது போன்ற இன்பசுற்றுலாவுக்கென தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை சேர்த்து வைத்து வருகிறார்கள். நாணய விகடன் படிப்பீர்களா? அதில் நேற்று...இன்று..நாளை படியுங்க.. அப்ப தெரியும். எதிரணிக்கும் அப்படியே என்ன படிச்சீங்கன்னு மறக்காம சொல்லிடுங்க.

நடுவர் அவர்களே, விடுமுறை பயணத்தை கொண்டாட யாரும் சரியான நோயாளி பெரியவர்களை அழைத்து போக மாட்டார்கள். அதற்குரிய முன்னேற்ப்பாட்டோடு கையில் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தான் செல்வார்கள். பெரும்பாலும் உடம்பு முடியவில்லையென்றால் யாருக்கும் பயணப்படவே பிடிக்காது. அப்படி இருந்தும் விடுமுறை மகிழ்ச்சியை அனுபவிக்க ஏன் செல்கிறார்கள்? யோசிச்சு சொல்லுங்க நடுவரே. வருஷக்கணக்கா மருந்து சாப்ட்டு குணமாகாத நோய் கூட, இதுபோன்ற பயணங்களால் மனதிற்கு மருந்தளித்தது போல இருக்கும். அதிலேயே பாதி நோய் குணமாகி விடும். மனக்கஷ்டம்,பணக்கஷ்டம்,பொருள்கஷ்டம்,மனுஷாள் கஷ்டம்னு சொல்லிட்டு நீங்க 4 சுவத்துக்குள்ளேயே 1 வாரம் அடைஞ்சிருந்து வெளியே வாங்க பார்க்கலாம். 1 மாசம் கழிச்சு ஓபன் பண்ணாலும் பிரியாணி கெடாம இருக்குங்க நடுவரே.. ஆனா இந்த பாழா போன மனசிருக்கு பாருங்க.. இப்படி புழுங்கி கிடந்தா ஒருவாரம் என்ன ஒருநாள்லயே அழுகி நாசமா போய்டுங்க. அதுக்கு தான் இப்படி குட்டி குட்டி பயணங்களை மேற்கொண்டோம்னு வச்சுக்கோங்க மனசு அன்னைக்கு பறிச்ச ரோசா மாதிர் ப்ரெஸ்ஸா இருக்கும். இதெல்லாம் எங்கிருந்து எதிரணிக்கு தெரிய போவுது ;( நடுவரே, பணச்செலவில்லாமல், இன்றைக்கு ஒரு அணுவையும் நகர்த்த முடியாது. அப்படியிருக்க, என்னவோ பயணங்களால் மட்டும் தான் செலவு, மனகஷ்டம், விரையம் அது இதுன்னு சொம்மா பேசக்கூடாது. ஏங்க நடுவரே, செலவாகுதுன்னு நாம சாப்பிடாம இருக்கோமா? உயிரை காப்பாத்த வேளா வேளைக்கு பார்த்து பார்த்து சாப்ட்டுட்டு தானே இருக்கோம். அதுபோல இதுவும் ஒரு செலவு என்று நினைத்தால் இதை சங்கடமாகவோ,விரையமாகவோ நினைக்கவே தோன்றாது. நீங்க ஊரைச் சுத்தி கடனை வச்சுட்டு இதுபோன்ற பயணத்தை மேற்கொண்டாலும், அங்கே நம்ம குட்டி பசங்களோட சந்தோஷத்தையும், ஆட்டத்தையும் பார்க்கும் போது நாமும் குழந்தைகளாகி நம்ம பணக்கஷ்டத்தையும் மறந்து ஆட்டம் போடுவோம் நடுவரே. அந்த நிமிஷம் நினைப்போம். சே.. நம்ம கஷ்டமெல்லாம் ஒரு கஷ்டமா? இது போன்ற சந்தோஷத்திற்கு எத்தனை காசு தந்தாலும் ஈடாகாது என்று அடுத்தடுத்து அந்த சந்தோஷம், மகிழ்ச்சிக்காகவே கடன் வாங்குவீர்கள்.

கடன் வாங்கி எஞ்சாய் பண்ன வேண்டியது தான். கடன்காரன் வந்து கேட்டா ஹார்ட் அட்டாக்னு படுத்துக்க வேண்டியது தான். கடனை வசூல் பண்ணவாச்சும் உங்களை காப்பாத்தி எழுப்பி உக்கார வைப்பார் கடன்காரர். எப்படி ஐடியா? ;))

நடுவர் அவர்களே இந்த கேள்வியை இப்ப ஸ்கூலுக்கு போய்ட்டிருக்கிற பசங்க கிட்ட கேட்டீங்கன்னா ஆனந்தம்னு மட்டும் தான் சொல்ல தெரியும். மனநிறைவு, அனுபவத்தை பத்தி உணர்ந்திருந்தாலும் அதை விவரிக்க தெரியாது. அதனால பள்ளிக்கால சந்தோஷத்தை சொல்லாமல், எனக்கு நினைவு தெரிந்து, நான் பணிக்கு செல்லும் காலத்தில் விடுமுறை எடுத்து கொண்டாடிய பயணக் கொண்டாட்டத்தை இங்கே சொல்கிறேன். எங்கள் வீட்டில் அவ்வளவாக எங்கும் வெளியே அழைத்துச் செல்ல மாட்டார்கள். நாங்கள் அந்தளவிற்கு வற்புறுத்தி (கடை வைக்காததும்) கேட்காததும் காரணமே. இதனால் பயணங்களை பற்றியோ,வெளியுலகை பற்றியோ அந்தளவிற்கு ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. என் மாமி தட்டச்சுமையத்தில் ஆசிரியையாக பணிபுரிகிறார். அங்கு 3 நாள் டூராக ஒகேனக்கல்,ஊட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு லீவு கிடைக்காததாலும், அந்த சமயம் எனக்கு வேறொரு காரணத்தினாலும் போக விருப்பம் இல்லாமல் இருந்தேன். இருந்தாலும் வற்புறுத்தி என்னையும், என் தங்கையையும் அழைத்து சென்றார். வீட்டை தாண்டும் வரை ஆர்வமில்லாதமாதிரித்தான் இருந்தது. அன்று இரவு பஸ்ஸில் அமர்ந்து பயணப்படும்போது தான் அந்த பயணத்தின் ஆனந்ததை அணுஅணுவாக உணர்ந்தேன். இத்தனைக்கும் நான் ஒரு தனிமை விரும்பி. எங்கு சென்றாலும் தன்மையை விரும்பி, இயற்கை தோழியை துணைக்கு அழைத்து என் உலகத்தில் சஞ்சரித்து லயித்திருப்பேன்.

சாதாரணமாக, இதுபோன்ற கொண்டாட்டங்களில் கூட்டமாக இருந்தால் குதுகலம் இருக்கும் என்று சொல்வார்கள். நான் தனிமையிலேயே இத்தனை சந்தோஷங்களையும், கொண்டாட்டத்தையும் உணர்ந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பயணம் போக போக மனதில் இருந்த சுமைகளை எல்லாம் காற்றில் பறக்க செய்து மனதை லேசாக வைத்தது. இது பயணத்தினால் கிடைத்த அனுபவமே.

முதலில் ஒகேனக்கல்லில் இறங்கினோம். இறங்கினதும் பரிசல் பயணம். அடாடா.. அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. அப்படி வர்ணிக்க நான் கவிஞராக இருக்க வேண்டும். இத்தனைக்கும் எனக்கு தண்ணீரை பார்த்தாலே பயம். அதனாலேயே கன்னியாகுமரிவரை சென்றும் அங்கே விவேகானந்தர் பாறைக்கு போகாமலே திரும்பிவிட்டேன். ஒரு சங்கமமே நமக்கு ஆகாது. முக்கடல் சங்கமமாகும் இடத்தில் இறங்கவும் ஆசை இருக்குமா என்ன? பரிசிலில் போகவும் பயம் அதே சமயம் அந்த சந்தோஷத்தை விடவும் மனசில்லை. ஒரு வித த்ரில் சந்தோஷத்துடனே சென்றேன். தண்ணீரில் போக போக பயமும் விட்டு போனது. மனதில் ஆனந்தமும்,ஆர்ப்பரிப்பும் சூழ்ந்து நின்றது. அந்த நிமிடங்கள் இன்றும் என் நினைவுகளில் பசுமையாக உரசி செல்லும். பரிசிலிலேயே அங்கே பிடித்த மீன்களை சமைத்து நமக்கு தருவார்கள். அடாடா.. என்னா ருசி..என்னா ருசி. நீங்க வேற வெறும் மட்டன்,சிக்கன் சாப்பிடும் சுத்த சைவம் வேற உங்ககிட போய் மீனை பத்தி பேசி கடுப்பேத்திட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்க நடுவரே ;) ம்ம்ம்... பரிசில் பயணம் இனிதே முடிந்து, பர்சேசிங் பயணம் ஆரம்பமானது. மூங்கிலில் செய்த ஹேண்பேக், இன்னும் நிறைய மூங்கில் கைவேலைப்பாடுகள். காண கண் கோடி போதாது. ஒவ்வொன்றும் அத்தனை அழகு. நாங்கள் அங்கே இறங்கியது விடிகாலை 5 மணி. ஒருபக்கம் அருவி நீர் சலசலப்புக்கு இடையே செடி, கொடிகளின் பசுமையான வாசத்தோடு காலாற நடந்து சென்றதை மறக்கவே முடியாது நடுவர் அவர்களே.

ஊட்டி பயணம் அடுத்த வாதத்தில் வைக்கிறேன் நடுவரே..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்