tamil

tamizhil type seivathu eppadi

//வனி டேன் அட்மின் பிச்சாரா அப்பா அப்பா அக்கு திட மெங்ஙெர்த்தி. செக்கராங் இபு இமா ஜூகா உமுங் பஹாசா லைன். கெப்பால்லாக்கு புஸ்ஸிங்லா!//

உண்மையச் சொல்லுங்க.. இது "நான் ஈ" படத்துல வர்ற மந்திரவாதி கத்துவானே.. அதுதானே..

சிங்களம் சந்தியாவந்தனம், பஹாசா இந்தோனேஷியா மந்திரவாதி கத்தறதா. எப்படீல்லாம் யோசிக்கறாங்கப்பா :) நீங்க சொன்னது சுந்தர தெலுகுதானா???? :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னாலா வாயில போட்ட சாப்பாட்டை முழுங்க முடியல... இப்படியா சிரிப்பு காட்டுறது??? ;) ஹஹஹஹ... படிச்சு படிச்சு சிரிக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

"ஹய்யோப்பா".... இது என்ன பாஷை வனி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இமா தமிழ் இலக்கணத்தில் புணர்ச்சி விதியில் இச்சொல் விகாரப்புணர்ச்சியின் கீழ் வரும் . அதாவது நிலை மொழியும் வருமொழியும் இணையும் போது நடுவே உள்ள எழுத்துக்கள் திரிந்தோ மறைந்தோ போகும். அதனடிப்படையில் ஓரெழுத்து ஒருசொல் ( மா, பூ, தீ ) உரிச்சொல்லுடன் இணையும் போது ஏற்படும் விகாரத்திற்கு இலக்கணம் உண்டு.

இந்த ஓரெழுத்து ஒருசொல்லுடன் இணைவது வல்லின, மெல்லின , இடையினமா அல்ல்து குற்றியலுகரம் குற்றியலிகரம் போன்ற சார்பெழுத்துக்களா என்பதை பொருத்து இலக்கணம் மாறும்

பொதுவாக ஓரெழுத்து ஒருமொழி சொல் வேறு சொல்லுடன் இணையும் போது அதன் நிலைத்தன்மை மாறாதென்று நினைக்கிறேன்

இதெல்லாம் பாருங்க

மாம்பூ
தீங்காற்று
பூஞ்சோலை
மாங்கனி

இன்னும் தெளிவாக வேண்டுமென்றால் பிறகு சொல்கிறேன்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஹஹா... ஹாஹா... :-) :D 'தமிழ் இலக்கணம்'னு தலைப்பை பார்த்துட்டு உள்ளே வந்தா... மல்டி லிங்குவ‌ல் காமெடி இல்ல‌ போய்ட்டிருக்கு?!!... கடவுளே, கிட்டத்தட்ட ஒரு 10 நிமிஷம் சிரிச்சி சிரிச்சி வாய் வலிக்குது, (பின்னே ஆபிஸ்ல உட்கார்ந்திட்டு அக்கம் பக்கம் கேட்காம வாயைப்பொத்தி சிரிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா!!)... வீட்டுக்கு போய் ஒரு முறை நிதானமா படிச்சி, வாய்விட்டு சிரிக்கனும்! :‍D

ஜெயந்தி,

நல்லா சொல்லி இருக்கிங்க... கொஞ்சம் புரியறமாதிரி இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு! தமிழ் பிடிக்கும், ஆனால் இவ்வளவு ஆழம் எல்லாம் தெரியாது. தோழிகள் பேசிக்கோங்க, பக்கத்தில இருந்து நானும் கொஞ்சம் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஜெயந்தி, அப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க? :) "சிறுந்தீ" கரெக்ட்டா, தப்பா? :) :)

சிறு - (ஒரு) சொல்
தீ - ஓரெழுத்து ஒரு மொழி

இவ்ளோதாங்க என் மூளைக்கு புரியுது, ஒரு சொல், ஓரெழுத்து ஒருமொழி சொல்லுடன் இணையுது, இப்ப ரெண்டையும் சேர்த்து எழுதுங்களேன், பார்ப்போம்? :)

அன்புடன்,
மகி

//தமிழ் பண்டித்தோட கூத்ரு தப்பு சேயதானுக்கி சான்ஸ் லேதண்டி.. நாக்கு தமிழ் அந்தா பாஹ ராதண்டி..// கர்ர்ர்.. இப்பிடில்லாம் என்னை கிண்டல் பண்ணா... சீரியஸா அமைதியாகிருவேன். ம். எனக்குன்னு பதில் சொல்லி இருக்கிறீங்க. திட்டுறதை எல்லாருக்கும் புரியுற பாஷைல திட்டியிருக்கலாம்ல! கர்ர்ர்.. ;(((

வேண்டுமென்றே தான் சிங்களத்தில் பதில் போட்டேன். மன்னிக்க வேண்டும்.
//மகே ப்ரஸ்னயட்ட உத்தர துண்ணாட்ட பொஹொம ஸ்துத்தி.
தென்னாம மட்ட தேரென்னத்தி பாசாவென் கதாகறனவா நேத!
ம். கமன் நா. தனுத் தவ டிகக் மாறு கறண்ட தியனவா அட்மின் ஐயே. கருணாகரலா ஏவாத் பொட்டக் பலன்ன. ;))// இது சம்பந்தமே இல்லாத சந்தியாவந்தனம். ;) திரும்ப வாசிக்க - உச்சரிப்பு... எனக்கே சிரிப்பா இருக்கு. ;))

இதோ சம்பந்தம் உள்ள இமாவந்தனம் -
என் கேள்விக்குப் பதில் சொன்னதற்கு மிக்க நன்றி.
இருவரும் எனக்குத் தெரியாத பாஷையில் பேசுகிறீர்கள் இல்லையா!
ம். பரவாயில்லை. இப்போதும் சில இடங்களில் மாற்றவேண்டி இருக்கிறது அட்மின் அண்ணா.
கருணைகூர்ந்து அவற்றையும் கவனிக்கவும்.

‍- இமா க்றிஸ்

இந்த உரையாடலில் கலந்து சிற(ரி)ப்பித்த அனைவருக்கும் என் அன்பு நன்றிகள். ;))

கர்ர்ர்... நீங்க இதை பர்சனலாக எடுத்து இருக்கவே வேண்டாம் வனி. :)

//யாரையும் குழப்பபுடாது. ;)// அவ்வ்! யார் யாரைக் குழப்பினது! அறுசுவைதான் என்னை அடிக்கடி குழப்புது. தமிழுக்காகத்தான் இங்கே வர ஆரம்பித்ததே. இப்போ குழம்புகிறேன். 'கீபோர்டில்' எழுத்துப்பிழை எப்படி வேண்டுமானாலும் வரும். அது பார்க்கவே புரியும்.

எலுமிச்சை, எழுமிச்சையாவது கருத்துப் பிழையானாலும் பொறுக்கலாம். வாணலி, வானொலியாகினால்!! படிக்க வேடிக்கையாக இருக்கும் அதே சமயம், குறிப்பின் நம்பகத்தன்மையையும் காணாமற்போய் விடுகிறது அல்லவா? இப்படி அங்கங்கே கண்ணில் படும்போது சம்பந்தப்பட்டவர்களோடு ரகசியமாகப் பகிர்ந்துகொள்வது உண்டு. சிலர் திருத்துவாங்க. சிலர் கடுப்பாகுவாங்க. சிலர் கண்டுக்கவே மாட்டாங்க. திருத்தாமல் அப்படியே விடப்படும் சில சமயங்களில் அது வட்டார வழக்கு என்று புரிந்துகொள்கிறேன்; கற்றுக் கொள்கிறேன். சில குழப்படி புத்திசாலிங்க ;)) சட்டென்று மாத்திட்டு.... 'இல்லையே! சரியாத்தானே இருக்கு!' என்பாங்க.

எப்படி எழுதினால் என்ன! தப்பாக இருந்தால் படிக்க ஆசை வருவது இல்லை; நம்பவும் முடிவது இல்லை, அவ்வளவுதான்.

'யாரும் சமைக்கலாம்' பகுதியில் பிடித்த தீ மெதுவாக அறுசுவை முழுவதும் பரவ ஆரம்பிக்க, 'நமக்குத்தான் தெரியாம இருக்கோ! வட்டார வழக்கோ!" என்றெல்லாம் யோசிச்சு கூகுள் தேடலின் பின்புதான் இங்கே வந்தேன்.

பதில்கள் பார்த்து சிரிச்சு முடியல இன்னும். ;))))))

‍- இமா க்றிஸ்

கௌரி வேறு எங்கேயாவது பதில் தேடிப்பிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~
இப்போதான் மஹியின் பதிவு கண்ணில் பட்டது. ம்.
~~~~~~~~~~~~~~~~~~
தகவலுக்கு என் அன்பு நன்றிகள் ஜெயந்தி. :-) குறிப்பிட்ட அந்த ஒரு சொல் மட்டும்தான் எனக்கு வேண்டியிருந்தது. 'ந்' வரும்கறீங்களா? வராதுங்கறீங்களா?

ஆஹா! //சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.// அவ்வ்வ்!!!!!!! சரிங்க, அப்படியே ஆகட்டும். மிக்க நன்றி. கிளம்புறேன்ன்ன். ;)))))))

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்