பரங்கிக்காய் தோசை

தேதி: March 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

1. பச்சரிசி - 2 கப்
2. உளுந்து - 1/4 கப்
3. வெந்தயம் - 1 தேக்கரண்டி
4. பரங்கிக்காய் - 1 கப்
5. உப்பு, எண்ணெய்


 

பரங்கிக்காயை தோல் நீக்கி துருவி 1 கப் எடுக்கவும்.
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஊற வைக்கவும். பின் வழக்கமாக தோசை மாவு அரைப்பது போல் அரைத்து விடவும்.
பரங்கிக்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்து அதையும் மாவுடன் சேர்த்து கலந்து உப்பு போட்டு கலந்து விடவும்.
இதை 8 மணி நேரம் அப்படியே வைத்து புளிக்க விடவும்.
அடுத்த நாள் வழக்கம் போல தோசை ஊற்றலாம். ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
மிக சாஃப்ட்டான சுவையான பரங்கிக்காய் தோசை தயார்.


நல்ல கலரோடு இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அட...செஞ்சுடுவோம்...!!!!வனி..உங்க அம்மாகிட்ட பரங்கிக்காய் ஏன் அதிகமா சேர்க்க கூடாதுன்னு கேட்டு சொல்லுங்க...எங்க அம்மா gas problem வரும் நு சொல்றாங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நன்றி. செய்து பாருங்க. கேட்டு சொல்றேங்க... நான் இதுவரை கேட்டதில்லை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, பரங்கிக்காய் தோசை இப்பதான் கேள்விபடுறேன். அவ்வளவா வாங்கினதில்லை. இந்த குறிப்புக்காக நிச்சயம் வாங்கி செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி