7 வார கர்ப்பம் அடிவயிற்றில் வலி

நான் இப்ப 7 வார கர்ப்பம்.இது இரண்டாவது குழந்தை.போன் மாதம் (பிப்ரவரி) ஃபாலிக்யூலர் ஸ்டடி பண்ணியபோது ஒரு சிஸ்ட் (13mm) இருப்பதாக சொன்னார்கள். டாக்டர் அதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.
இப்ப 4, 5 நாளா இடது பக்கம் அடிவயிற்றில் லேசாக வலி அப்பப்போ வருது. இதனால குழந்தை வளர்ச்சில ஏதாவது பிரச்சனை வருமா?
முதல் பிரசவம் சிசேரியன்.அதனால் வயிறு ஏற்கனவே ரொம்ப பெருசாதான் இருக்கும். இனி குழந்தை வளர வளர என்னாகுமோன்னு வேற பயமா இருக்கு. ஸ்டிச்ல வலி வரும்னு வேற ஒரு இழைல படிச்சேன். தோழிகள் ஆலோசனை சொல்லுங்களேன்பா..

தோழிகளே.. பதிலளியுங்கள் ப்ளீஸ்...

anbe sivam

கவிதா இங்கே ஆலோசனை கேட்பதைவிட உங்கள் டாக்டரை கன்ச்ல்ட் பண்ணீனா சரியான தகவல்ம்ற்றும் ஆலோசனை கிடைக்கும். அத்துடன் கர்பத்தின் போது சிஸ்ட் இருந்தால் சிசேரியன் செயும் போதே அதையும் அகற்றிவிடுவார்கல் என்று கேள்விப்பட்டிருக்கேன் சரியாக தெரியாது,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பதிலளித்ததற்கு நன்றி தோழி..
இன்னும் 3 வாரம் கழித்துதான் டாக்டரை பாக்கணும்.இது பற்றி தோழிகள் யாருக்கேனும் தெரிந்தால் சொல்வார்களே என்று கேட்டேன்.இப்ப வலி இல்ல.ஆனா சிஸ்ட்னால ஏதாவது பிரச்சினை வருமோன்னு கேட்டேன்.
என்றாலும் பதில் சொன்னதுக்கு நன்றி தோழி பூங்காற்று..
அன்புடன்,
கவிதா

anbe sivam

நான் இப்பொழுது 11 வாரம் கர்ப்பமாக இருக்கிறேன். நேற்று இரவு நடக்கும் போது வலது புற மேல் வயிற்றில் இருந்து கீழ் நோக்கி ஒரு அசைவு தெரிந்தது. எதோ உள்ளேயுள்ள உறுப்பு அசைத்தார் போன்று இருந்தது. (மேலிருந்து ஒரு பந்து உருளுவது போன்று ஒரு வினாடி இருந்து) கொஞ்சம் பயமாக இருக்கிறது.

மேலும் சில பதிவுகள்