தேதி: March 20, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ப்ரெட் துண்டுகள் - 10
பச்சை பட்டாணி வேக வைத்தது - சிறிது
வெங்காயம் - ஒன்று
கோஸ் - சிறிது
கேரட் துருவியது - சிறிது
உப்பு
பச்சை மிளகாய் - 4
தேங்காய பால் - தேவைக்கு
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி








இது மாலத்தீவு உணவு வகை. கார வகைகளை குல்லி (Kulhi என்றால் Spicy) என சொல்வார்கள். பொதுவாக அவர்கள் மீனில் தான் குல்லி போகிபா செய்வார்கள். இது சைவ வகை. இன்னும் எந்த காய்கள் சேர்க்க விரும்பினாலும் சேர்க்கலாம். இதில் விரும்பினால் டூனா மீன் துண்டுகள் அல்லது வேக வைத்த எலும்பில்லாத சிக்கன் துண்டுகளும் சேர்க்கலாம். சிறிது சீஸ் கூட துருவி சேர்க்கலாம். இதையே சாண்ட்விச் போலவும் செய்யலாம். முதலில் சிறிது வெறும் ப்ரெட் தேங்காய பால் கலவையை பரப்பி அதன் மேல் காய்கறி கலவை வைத்து அதன் மேல் மீண்டும் வெறும் ப்ரெட் தேங்காய் பால் கலவை வைத்து மூடி சமைக்கலாம். குழந்தைகள் விரும்புவார்கள்.
Comments
வனி
வித்யாசமான பெயரை பார்த்ததுமே வனியா தான் இருக்கும்னு நினைத்தேன். நல்ல வெஜ் ரெசிபி. வாழ்த்துகள் வனி
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
வனி சூப்பர் டா...
எப்படி இப்படியெல்லாம் வித்தியாசமா செஞ்சு அனுப்பறீங்க? உங்கள நெனச்சா எனக்கு அவ்வளவு பிரமிப்பா இருக்கு. குறிப்பு ரொம்ப புடிச்சிருக்கு. விருப்ப பட்டியல்ல சேர்த்துட்டேன். கண்டிப்பா செஞ்சு பார்க்குறேன் டா. வாழ்த்துக்கள் வனி.
என்றும் அன்புடன்,
சுபா ராம்.
குல்லி பான் போகிபா
அன்பு வனிதா,
பெயரைப் பார்த்ததுமே தெரிஞ்சிடுச்சு, இது உங்க குறிப்புதான் என்று.
காய்கறி ப்ரெட் கலவையுடன் வித்தியாசமாக இருக்கு. பாராட்டுக்கள்!
அன்புடன்
சீதாலஷ்மி
குல்லி பான் போகிபா
ஆஹா! வனி...எனக்கே எனக்கா செஞ்ச மாதிரி இருக்கே;) தேங்க்யூ சோ மச்;-)
Don't Worry Be Happy.
வனி
ரொம்ப நல்ல இருக்கு வனி பிரட் வச்சு இது வரை இனிப்பு பான் போகியா குடுத்திங்க இப்போ காரம் அசத்துங்க வனி கண்டிப்பா நான் ட்ரை பண்றேன் அதுக்கு முன்னாடி இப்பவே சாப்பிடனும் போல இருக்கு அந்த கடைசி plate எனக்கு மட்டும் அனுப்பி வச்சுருங்க ஓகே
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)
கூடவே 1 போட்டா அன்பு தோழிக்கும் மிக்க நன்றி ;) இப்படி முதல் ஆளாக போடாதீங்கோ... அட்மின் உங்களை கப்புன்னு அமுக்கிட போறார்!!!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி
மஞ்சுளா... மிக்க நன்றி :)
சுபா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. :)
சீதாலஷ்மி... மிக்க நன்றி. இப்போலாம் குறிப்புகள் பக்கம் அடிக்கடி விசிட் வருவது போல் தெரியுதே ;)
ஜெய்... மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :)
தனா... தாராளமா எடுத்துக்கங்க. மிக்க நன்றி. அவசியம் ட்ரை பண்ணுங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா 1 போட்டவங்கள அட்மின்
வனிதா 1 போட்டவங்கள அட்மின் கண்டுபிடிகிரதுக்கு முன்னாடி நாம முட்டைய மந்திரிச்சு வச்சு கண்டு பிடிசிரலாமா?
உங்களின் பான்போகிபா செய்து பார்த்திருக்கிறேன் நன்றாக வந்தது. இதையும் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
கார்த்திகா
அச்சசோ... முட்டை எல்லாம் இந்த முட்டா மக்களுக்கு எதுக்குங்க ;) நம்ம அட்மின் மக்களே பிடி பிடின்னி பிடிச்சுடுவாங்க.
அவசியம் செய்து பாருங்க... மிக்க நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
வனி, எங்கேடா கொஞ்ச நாளா போகிபா வை காணோமேன்னு ஏங்கி தான் போனேன். ஏக்கத்தை தீர்க்க அனுப்பிட்டீங்க. நல்லவேலை ப்ரெட் ப்ரூட் கலந்து அனுப்பல. இல்லைனா காங்கோ ஜூஸை அனுப்பியிருப்பேன். இந்த குறிப்பு ஈசியா இருக்கு வனி. நான் இன்றோ நாளையோ செய்து பார்த்து உங்களை தேடி எப்படி இருந்ததுன்னு நிச்சயம் சொல்லிடறேன். வாழ்த்துக்கள் வனி :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
வனி
போகிபான்னா வனி வனின்னா போகிபான்னு ஆகிப்போச்சி :-)
அருமையான குறிப்பு வனி கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஹாய் வனி உங்க குறிப்பு ரெம்ப
ஹாய் வனி உங்க குறிப்பு ரெம்ப நல்லா இருக்கு . இதுக்கு சைடு டிஷ் எதுவும் தேவை இல்லையா
வனி
அப்படிங்க போடுங்க அருவாவே! இதை இதை தான் நான் எதிர்ப்பார்த்தேன். நமக்கும் இந்த இனிப்புக்கும் கொஞ்சம் தூரம். காரம் என்றால் வெட்டு ஹ்ம்ம்........
//ஒன்னு போட்டாச்சா?// ஒருவேளை அவங்க உங்களுக்கு நெருங்கின தோழியா இருப்பாங்களோ....நீங்க அவங்களை கண்டுக்காம விட்டிருப்பீங்க....அதான் ஒரு பப்ளிகுட்டிக்காக இப்படி பண்றாங்களோ என்னவோ!
பின் குறிப்பு : என்னது இது கேட்ட பழக்கம்.....குள்ளி ஹைட்டுன்னு பேர் வைக்குறீங்க. ரேசிஸ்ட் ;)
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
குல்லி பான்போகியா
வனிதா,
ப்ரெட்டில் இன்னொரு ரெசிப்பி.அதுவும் பார்க்கவே அழகா பீட்சா ரேஞ்சுக்கு இருக்கு.கண்டிப்பா செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்.
ஒன்னு விட்ட சொந்தகாரங்க மாதிரி...இந்த ஒன்னு போட்ட ஆசாமி,ஒன்னு போட்ட உடனே உங்க கிட்ட வசமா மாட்டிக்கிறாங்க. :-)
நன்றி
கல்பனா... எனக்கு காங்கோ ஜூஸ் அனுப்பவே மாட்டேன்னுஎ ந்க்கையோ வாக்குறுதியெல்லாம் தந்ததா நியாபகம் ;) அவசியம் தேடி வந்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்கோ !!! மிக்க நன்றி.
சுவர்ணா... ரொம்ப நன்றிங்க. செய்துட்டு மறக்காம சொல்லிடுங்கோ. :)
ஜெயலக்ஷ்மி... மிக்க நன்றி. இதுக்கு கெட்சப் போதும். :)
லாவி கண்ணா... //அப்படிங்க போடுங்க அருவாவே// - மரியாதை எல்லாம் பலமா இருக்கே ;) //அதான் ஒரு பப்ளிகுட்டிக்காக இப்படி பண்றாங்களோ என்னவோ!// - அதான் இப்போ நிறைய கொடுத்துட்டோமே :) குறிப்பு கொடுத்து பப்ளிகுட்டி வாங்க முடியாட்டா இப்படி தான் வாங்கனும் போல. //குள்ளி ஹைட்டுன்னு பேர் வைக்குறீங்க. ரேசிஸ்ட் // - இங்க்லிபீஸில் திட்டினா செல்லாது செல்லாது.
ஹர்ஷா... மிக்க நன்றி.செய்து குட்டீஸ்கு கொடுத்து பாருங்க... நிச்சயம் பிடிக்கும். என் மகன் விடாது கேட்டான். //ஒன்னு போட்ட உடனே உங்க கிட்ட வசமா மாட்டிக்கிறாங்க.// - ஒன்னு தான் அவங்களுக்கு பிடிச்ச நம்பர் !! ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
போகிபான்னா வனி வனின்னா போகிபான்னு ஆகிப்போச்சி :-),ரிப்பீட்.சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
குல்லி பான் போகியோ
குல்லி பான் போகியோ சூப்பர்.இன்று காலை செய்தேன்.எங்க வீட்டு சோதனை எலி வழமையாகவே இதிலிருந்தெல்லாம் தப்பித்து விடுவார் ஒவ்வொரு புதிய காரணங்களை கூறி(அவரது தொழில் யுக்தியை அப்பப்போ வீட்டிலும் காட்டுவார்) ஆனாலும் இன்று மடக்கிட்டோமில்ல!!! மிக்க நன்றி வனி அது சரி நேற்று இரவுதான் பார்த்தேன். உங்களின் மகனுக்கு இப்போது எப்படி? பரவாயில்லையா?.
எல்லாப் புகழும் இறைவனுக்கே
நன்றி
ஆசியா... மிக்க நன்றி :)
ராதியா... செய்துட்டீங்களா?? ஆஹா... ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க. மிக்க நன்றி ராதியா. மகன் நலம். நன்றி மீண்டும். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா, மிகவும் விதியசாமான
வனிதா, மிகவும் விதியசாமான குறிப்பு. என் அம்மாவுக்கு கால் போட்டு குறிப்பு சொல்லிவிட்டேன்.
கவிதா
வனிதா,
வனிதா,
அசத்தலான குல்லி போகிபா..
தேங்காய் பாலுக்கு மட்டும் மாற்று சொல்லுங்க..
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
நன்றி
newmom கவிதா... மிக்க நன்றி. எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்க :)
uk5mca கவிதா... மிக்க நன்றி. ஒரு முட்டை சேர்க்கலாம். தேவைக்கு வெது வெதுப்பான நீர் சேர்க்கலாம். இல்லன்னா வழக்கமான பால் சேர்க்கலாம். :) செய்து பார்த்து சொல்லுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
super
intha dish parkave sapidanum pola thonuthu....it's so different!!!!!!!
சாந்தி
மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி,
இன்று செய்து பார்த்தேன்..டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு...thanks for the wonderful recipe..
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
recipe supera iruku..na try
recipe supera iruku..na try panipakuren..but oru doubt iruku..indha dish oven la vekkamudiuma?
அன்பு ராஜி
செய்து பார்த்து மறக்காம பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அன்பு பெட்சி
நிச்சயம் செய்யலாம். எனக்கு சரியா நேரம் எல்லாம் சொல்ல தெரியல... 200C’ல் வைத்து 10 நிமிடத்துக்கு மேல் அடிக்கடி செக் பண்ணி எடுங்க. மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
குல்லி பான் போகிபா
குல்லி பான் போகிபா நல்ல சுவையாஇருந்தது