முட்டை குழம்பு

முட்டை குழம்பு

தேதி: August 1, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

அவசரத்திற்கு செய்யக்கூடிய முட்டைக் குழம்பு. செய்வதற்கு மிகவும் எளிதானது. சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியான குழம்பு.

 

முட்டை - 3
குழம்பு பொடி - 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 6 பல்
தேங்காய் துருவல் - கால் கப்
முருங்கைக்காய் - ஒன்று
உருளைக்கிழங்கு - 2
கடுகு - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
கல் உப்பு - ஒரு மேசைக்கரண்டி


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்துக் கொண்டு அதில் உருளைக்கிழங்குகளை இரண்டாக வெட்டிப் போடவும். அதிலேயே நறுக்கின முருங்கைக்காய் மற்றும் முட்டைகளைப் போட்டு வேக விடவும். சுமார் 10 நிமிடங்கள் வெந்த பிறகு இறக்கி, முட்டையை ஓடு நீக்கி வைக்கவும். உருளையை மேலும் இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வேக வைத்த முட்டை
ஒரு வாணலி அல்லது பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு, அதில் குழம்பு மிளகாய்த்தூளைப் (மிளகாய், மல்லி, மஞ்சள் சேர்த்து அரைத்தப் பொடி) போட்டு கொதிக்க விடவும்.
கொதித்தல்
அது நன்கு கொதித்து பொங்கி வரும்போது, ஓடு நீக்கி வைத்துள்ள அவித்த முட்டை, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அதில் போடவும்.
குழம்பு
சற்று கிளறிவிட்டு வேக விடவும். நன்கு கொதித்து குழம்பு சற்று சுண்டினாற்போல் வரவேண்டும்.
முட்டை குழம்பு
ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, சோம்பு போட்டு தாளித்து, அத்துடன் நறுக்கின வெங்காயம், மற்றும் பூண்டு சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.
தாளித்தல்
வதக்கியவற்றைக் கொதிக்கும் குழம்பில் கொட்டி கிளறிவிடவும். அரைத்து வைத்துள்ள தேங்காயையும், உப்பையும் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
முட்டை குழம்பு
5 நிமிடங்கள் கழித்து குழம்பு கொதித்து அடங்கியதும் இறக்கி, கொத்தமல்லி, கறிவேப்பிலை இலைகளை சிறிது கிள்ளிப் போட்டு பரிமாறவும்.
முட்டை குழம்பு


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப ஈஸியா அதிக நேரம் எடுக்காமல் செய்தாச்சு!!! குறிப்புக்கு நன்றி!!

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

today i prepared this recipe..it was very nice...