கிடைக்காத பொருட்கள்

அன்பார்ந்த தோழிகளே (முக்கியமாக வெளிநாட்டில்)! நம் ஊரில் எளிதில் கிடைக்கும் வெளிநாடுகளில் கிடைக்காமல் நீங்கள் விரும்பும் பொருட்கள் என்ன என்ன? இந்த இழையில் பகிர்ந்து கொள்ளுங்கள்! (ஒரு சின்ன பொது அறிவு சர்வே)

கசகசா சிங்கப்பூரில் எங்க தேடினாலும் கிடைக்காது. நாமும் கொண்டு வர முடியாது. கொண்டு வந்து மாட்டிக்கிட்டா போதை பொருள் கொண்டு வந்தோம்னு கம்பி எண்ண வேண்டியதுதான். கருப்பட்டி(பனை வெல்லம்) இதுவும் இதுவரை என் கண்ணில் பட்டதில்லை. யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் இருக்கும் இந்தோனேஷிய தீவில் பொன்னி அரிசி, இட்லி அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சன்னா, பொட்டுக்கடலை, பெருங்காயம், நல்லெண்ணெய், மொச்சை கொள்ளு... சுருக்கமா சொன்னா இந்திய மளிகை சாமான் எதுவும் கிடைக்காது :(. எல்லாம் சிங்க்கப்பூர் போய்தான் வாங்கி வரணும். காய்கறிகளில் முருங்கைக்காய், முருங்கைக் கீரை, இந்திய கீரை வகைகள், வாழைத் தண்டு, அவரைக்காய், கோவைக்காய், பீர்க்கங்காய், நூல்கோல், வாழைக்காய் (பழம் கிடைக்கும் காய் கிடைக்காது), புடலங்காய்ன்னு எதுவும் கிடைக்காது. இதுவும் சிங்கப்பூர் உபயம்தான். சிங்கை போயிட்டு திரும்பி வரும் போது பை நிறைய மளிகை சாமான்களும் காய்கறிகளும்தான் நிறைந்து இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் வசிப்பது அபுதாபியில். இங்கு கவிசிவா சொன்னது போல கசகசா கிடைப்பதில்லை. நாம ஊரிலிருந்து கொண்டு வந்தாலும் இமிகிரேசனில் அனுமதிக்கமாட்டார்க்ள் (அது கொஞ்சம் போதை கலந்த பொருளாம்). அடுத்து துணி துவைக்கிர பிரஸ் இங்கு நான் பார்த்ததே இல்லை. இன்னும் ஞாபகம் வரும் போது வந்து சொல்றேன்.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

ஹாய் நாகராணி பஹ்ரைன்ல நீங்க எங்க இருக்கீங்க நான் குதேபியால இருக்கேன்.இங்க எனக்கு தெரிஞ்சு இந்தியால
இருக்க எல்லா பொருளும் கிடைக்குதுனுதான் நினைக்கிரேன்.

காங்கோவில் புழுங்கலரிசி கிடைக்காது. நான் இங்கு வந்து 2 முறை அதிசயமாக கிடைத்தது. இட்லி அரிசி. அதன்பிறகு பார்க்கவில்லை. தோழிகள் சொன்னது போல கசகசாவுக்கு பஞ்சமில்லை. கிடைக்கும் ஆனால் நம்ம ஊர் மாதிரி வெள்ளை வெளேர்னு இருக்காது. ஜிகிடு வாசனையோடு கிடைக்கும். வாழைக்காய் கிடைக்காது.முருங்கை கீரை அற்புதமாக கிடைக்கும். இந்த ஊர் மக்களுக்கு நாம் உண்ணும் பொருள் பற்றிய ஞானம் இல்லாததால், பலபொருட்களை நம்ம அறிவுக்கு எட்டாமலேயே வைத்து விடுகிறார்கள். வாழை மற்றபடி நம்ம ஊர் மளிகைக்கு தட்டுப்பாடே இல்லை. கடலை எண்ணெய்,நல்லெண்ணெய், நம்ம ஊர் நெய் கிடைக்காது. ராகி கிடைக்காது. வந்த புதிதில் இட்லி சோடா கிடைக்காது. இப்போது அதுவும் வந்துவிட்டது. கொத்தவரங்காய்,பாகற்காய்,பீர்க்கங்காய் அத்தி பூத்தாற்போல் கிடைக்கும். அநாவசியமாக கிடைக்காது. பீட்ரூட் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் கிடைக்கும். மசாலா பொருள் மராட்டி மொக்கு பார்க்கவே முடியாது. சின்ன வெங்காயம்,வேப்ப மரம் மருந்துக்கும் தெரியாது. கிடையவும் கிடையாது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கருப்பட்டி இங்கே சிங்கப்பூரில் கிடைக்கும் ,ஆனால் சிலிண்டர் சைசில் இருக்கும்.,வேப்ப இலையும் கிடையாது.ஒரே ஒரு பார்மில் மட்டும் உண்டு.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

துபையில் எனக்கு பிடித்த ஜவ்வரிசி வத்தல் பார்த்ததே இல்ல,,கசகசா இங்கு அனுமதி இல்ல,

ஃபாத்திமா சிலின்டர் ஷேப்பில் கிடைப்பது "gula melaka" தானே! அது தென்னை மரத்தின் பதநீரில் இருந்து கிடைப்பது. நான் கருப்பட்டின்னு சொல்றது பனை மரத்தின் பதனீரில் இருந்து கிடைப்பது. ரெண்டோட டேஸ்டும் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். வேப்ப இலை இப்போ தேக்காவில் பூக்கடைகளில் கிடைக்குதே! என்ன விலைதான் கொஞ்சம் அதிகம். இப்போ சில கோவில்களிலும் வீடுகளிலும் வளர்க்கறாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நம்ம ஊரில் கிடைச்சு வெளிநாட்டில் கிடைக்காதது எல்லாமே ஏறக்குறைய கவிசிவா கவர் பண்ணிட்டாங்க ;)

சிரியாவில்:

நம்ம ஊர் கீரை
முருங்கை வகை - கீரை, காய்
அவரை
நல்லெண்ணெய்
புழுங்கல் அரிசி

மாலே:

கார்ன் கிடைக்காது. நம்ம ஊர் பழங்கள், காய் எல்லாமே ஓரளவு கிடைக்கும்... ஆனா விலை தான் தாங்காது. மாங்காய் 1 கிலோ நம்ம ஊர் காசுக்கு 750 ரூபாய் வருது. மாதுளை எல்லாமும் அப்படி தான். பஞ்சமில்லாம கிடைப்பது இளனீர், வாழைகாய், வாழைப்பழம், தர்பூசணி, பான்புகியோ ;)

நம்ம ஊரில்:

சிரியாவில் கிடைச்ச ஸ்ட்ரா பெரி, செரீஸ், ஃப்ரூட்ஸ் எல்லாமே சிரியாவில் ரொம்ப சீப்... ஆரஞ்சு கூட நம்ம ஊர் பணம் 10 ரூபாய் கிலோ... ஆனா சுவை... ஆகா... அப்படி இதுவரை நம்ம ஊரில் கிடைக்கலங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சவுதியில் கிடைக்காத பொருட்கள்...
ரோஜாவை தவிர்த்து எந்த பூக்களையும் நான் இங்க பார்த்ததில்லை.கசகசா,வேப்பிலை,துளசி,அகத்தி கீரை,பொன்னாங்கண்ணி கீரை,அப்ப அப்ப முருங்கை கீரை அதிசயமா கிடைக்கும்.பனை வெல்லம்,கருப்பட்டி,மஞ்சள்,மஞ்சள்கயிறு,கருப்பு கயிறு,குங்குமம்,சாமி படங்கள்(சாமி படங்கள் இருக்கக்கூடிய புத்தகங்களில் சாமியை ஸ்கெட்ச் வைச்சு அழிச்சுட்டு தான் இங்கே விற்பனை செய்யனும்..)இனைய தளத்தில் இருந்து டவுன்லோட் பண்ணினால் உடனே வைரஸ் ஏறிரும் அது மாதிரி செட் பண்ணி வைச்சுருக்காங்க பா. திரிநீர்,வேப்ப எண்னெய்,விளக்கெண்ணெய்,சூடம் இது மாதிரி நிறைய பொருட்கள் சொல்லிக்கிட்டே போகலாம் நேரம் இருக்கும் போது வந்து சொல்கிறேன் தோழிகளே......
கருணை கிழங்கும் கிடைக்காது....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்