முழங்கால் வலி

முழங்கால் வலி

முழங்கால் வலி ஒரு உலகளாவிய நோய். எல்லா வயதினரையும், ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் நோய்.

இந்நோய்க்கு காரணங்கள்
• அலுவலகத்தில் பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது;
• வேலையில் ஏற்படும் மன அழுத்தம்;
• உடல் பருமன்;
• போதுமான உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை.

இந்நோய்க்கு மருந்து என்று சொன்னால் வலி நிவாரணிகளும், வலியினால் உண்டாகும் வீக்கம் குறைய கொடுக்கப்படும் மருந்துகளும் தான். இவைகள் ஆரம்பத்தில் வலி, வீக்கம் குறைய உதவினாலும் நீண்ட காலத் தீர்வு கொடுப்பதில்லை.

இந்த முழங்கால் வலி வராமல் தடுக்கவும், வந்து விட்டால் இது தரும் தாங்க முடியாத வலியிலிருந்தும் காத்துக் கொள்ள முடியாதா? முடங்கின முழங்கால்களை மறுபடி செயல் பட வைக்க முடியாதா? இந்த நோயினால் அவதிப் படும் ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வி இது. சரியான கேள்வி தான். ஆனால் இந்நோய் வந்தவுடன் பெரும்பாலோர் செய்வது என்ன தெரியுமா?
“முட்டி வலி தாங்க முடியவேயில்லை. மாடிப்படி ஏறுவது இறங்குவது பெரிய பாடாக இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டு ஒரேயடியாக இவற்றை செய்வதை தவிர்த்துவிடுகிறார்கள். இது மட்டுமல்ல; கால்களை மடக்கி தரையில் உட்கார்ந்து கொள்ளுவதையும் விட்டு விடுகிறார்கள். தங்கள் வீட்டில் இருக்கும் இந்திய பாணி கழிப்பறையை மேற்கத்திய பாணிக்கு மாற்றிவிடுகிறார்கள். இன்றைய கால கட்டத்தில் நாம் நம் கைகளையும் கால்களையும், இதர மூட்டுக்களையும் மிக மிக கொஞ்சமே பயன் படுத்துகிறோம். வலி என்று சொல்லி அதையும் தவிர்க்கப் பார்க்கிறோம். இது தவறு அல்லவா? சரி இப்படி செய்வதால் வலி இல்லாத வாழ்வு கிடைக்கிறதா இவர்களுக்கு என்றால், அதுவும் இல்லை. சரி இதற்கு என்ன தீர்வு?

ஒரு விஷயம் நாம் நினைவில் கொள்ளவேண்டும். நமக்கு வலி வருவதே நம் உறுப்புகளை நாம் சரிவர பயன் படுத்தாததுதான்.

அதனால் நன்றாக திட்டமிடப்பட்ட உடற்பயிற்சி; அதை விடாமல் செய்யக் கூடிய உறுதியான மனம் இரண்டும் தான் இந்த வலியிலிருந்து விடுதலை கொடுக்கும்.

முதலில் நம் முழங்கால்களின் அமைப்பைப் பார்க்கலாம்: உள் தொடை, முன் தொடை, பின் தொடை வெளித் தொடை என்ற நான்கு தசைகள்; முழங்கால் மூட்டுக்களின் பின் புறமிருந்து ஆரம்பமாகும் ஆடுதசை ஆகிய ஐந்து ‍வகையான பெரிய தசைகளினால் தாங்கப் படும் ஒரு கூட்டமைப்பு தான் நம் முழங்கால்கள்.
இந்த தசைகளின் நெகிழ்வுத் தன்மையையும், செயல் திறனையும் உறுதிப் படுத்தும் வகையில் ஒரு ஒட்டு மொத்த அணுகு முறையுடன் கூடிய பயிற்சிகளை ஒரு நிபுணரின் மேற்பார்வையில் செய்ய வேண்டும். இதற்கு 4 முக்கியமான பயிற்சிகள் தேவை:

• Stretching எனப்படும் நீட்சி பயிற்சிகள்;
• Flexibility: பாதிக்கப்பட்ட தசைகளின் நெகிழ்வுத் தன்மையை மறுபடி மீட்டு எடுப்பதற்கான பயிற்சிகள்;
• Strengthening: இழந்து போன வலுவை மீண்டும் பெற உதவும் பயிற்சிகள்;
• Functionality: செயல் திறனை மீட்கச் செய்யப்படும் பயிற்சிகள் – வலியினால் நிறுத்தி வைத்திருந்த வேலைகளை நிதானமாக செய்ய ஆரம்பிப்பது தான் இப் பயிற்சி;

முதலில் இந்த தசைகளை நன்றாக நீட்டி (stretching) பழக்க வேண்டும். நீங்களாகவே முடிந்த அளவு நீட்டி மடக்கி பழக வேண்டும். நீட்சி பயிற்சியிலேயே நெகிழ்வுத் தன்மையும் வந்து விடும். ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பியபின் உறுதிப் பாட்டுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிறிது காலம் ஆனபின் முழங்கால் வலி வருவதற்கு முன் என்னென்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்களோ மெல்ல மெல்ல அவைகளை செய்யத் தொடங்குங்கள்.
நாம் சின்ன வயசில் கற்றுக் கொண்ட நர்சரி பாடல்கள் நமக்கு இன்றைக்கும் மறப்பதில்லை, அல்லவா? அது போலத்தான் நாம் ஏற்கனவே செய்து வந்த வேலைகள் நம் உடலுக்கும் நினைவிருக்கும். அதனால் தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி வைத்திருந்த வேலைகளை செய்ய ஆரம்பியுங்கள்.

முதலில் 5 நிமிட நடைப் பயிற்சி; பிறகு 10 நிமிடங்கள்; அதே போல ஒரு நாளைக்கு 5 நிமிடம் தரையில் உட்காருங்கள்; டீ.வி. பார்க்கும்போது சாப்பிடும்போது என்று கீழே உட்கார்ந்து பழகுங்கள். நிதானமாக நேரத்தைக் கூட்டுங்கள். தினமும் ஒரு முறை மாடிப் படி ஏறுங்கள். அல்லது இறங்குங்கள். நாட்கள் செல்லச்செல்ல உங்களையும் அறியாமல் பழைய நிலைக்கு வந்து விடுவீர்கள்.
சில சமயங்களில் கீழ் முதுகில் ஏற்படும் விறைப்பு (stiffness) முதலியவற்றாலும் கூட முழங்கால்கள் பாதிக்கக் கூடும். அப்போது கீழ் முதுகு உறுதிப் படத் தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

மிக முக்கியமான விஷயம்: ஒரு நாள் உடற்பயிற்சி செய்துவிட்டு ஒன்பது நாள் சும்மா இருக்கக் கூடாது. உடற்பயிற்சி என்பதை தினமும் செய்ய வேண்டிய கட்டாய வேலையாக வைத்துக் கொள்ள வேண்டும். வலிக்கிறது என்று பயிற்சியை விடாமல் நல்ல பயிற்சியாளரின் வழி காட்டுதலுடன் செய்தால் பழைய நிலைக்கு திரும்பலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வலியுடனேயே பயிற்சி செய்ய வேண்டுமா என்று எண்ணாமல் வலி போகத்தான் இப் பயிற்சிகள் என்று நினைக்க ஆரம்பித்தால் உடலும் ஒத்துழைக்கும்; ஆரோக்கியம் பெருகும். செய்வோமா?

ரஞ்சனி.....இப்பொழுது இந்த மூட்டுவலி பிரச்னை 30 வயதிலிருந்து எல்லாருக்கும் வருகிறது. நாம் எப்போதும் மேலேதான் உட்காருகிறோம். முன் காலம் போல கீழே உட்கார்ந்து சாப்பிடுவது, துவைக்கும் கல்லில் துவைத்து குனிந்து , நிமிர்ந்து துணி அலசுவது, இட்லி, தோசைக்கு உட்கார்ந்து அரைப்பது.....இதல்லாம் அந்தக் கால விஷயங்களாகி விட்டது. அதுதான் இது போன்ற நோய்கள் அதிகரிக்கக் காரணம். உங்கள் கட்டுரை அருமை. வாழ்த்துக்கள்!

முன்பே நீங்க இங்க உங்க ப்ளாக் பற்றி கொடுத்தப்போ அட்மின் நீக்கினாங்க. இப்போ உங்க ப்ளாக்கில் வெளியான கட்டுரையை இங்கே போட்டிருக்கீங்க... மீண்டும் மீண்டும் அறுசுவை விதிகளை மீறாமல் இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனி இப்படிச் செய்ய மாட்டேன். மன்னிக்கவும். நான் என் ப்ளாகில் எழுதியது வேறு எந்த இணைய தளத்திலும் வரவில்லை, என்று நினைத்து அறுசுவைக்கு அனுப்பினேன். என் படைப்புக்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் தொகுக்க எண்ணி நான் இதுவரை எழுதி பல்வேறு இணைய தளங்களில் வெளிவந்த எல்லாவற்றையும் என் ப்ளாகில் போட்டு வருகிறேன்.
ஆனால் உங்களுக்கு அனுப்பியது என் ப்ளாகில் மட்டுமே போட்டிருந்தேன். எனிவே, இந்தத் தவறு இனி நடக்காது. மறுபடியும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

You never get a second chance to make a first impression.

ரஞ்சனி அம்மா...ஏன் மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு...தெரியாம தான போற்றுகீங்க...

உங்க ப்ளாக் ல நிறைய விஷயங்கள் நகைச்சுவை யா சொல்லிருகீங்க...அருசுவைக்குன்னு தனியா ஸ்பெஷல் ஆ எதாவது ஒரு நல்ல விஷயம் பத்தி பதிவு போடுங்கம்மா...

உங்கள் " “அத்தையும் ராகி முத்தையும்” கதை ஆன்லைன் இல் படிக்க கிடைக்குமா?chetanbagat தோட "டூ ஸ்டேட்ஸ்" மாறி இருக்கும் போல இருக்கே...
இங்க லிங்க் கொடுக்க வேண்டாம்...என்ன போட்டு search பண்ணனும் நு சொன்னா நான் தேடிகறேன்...

உங்க எழுத்து அனுராதா ரமணனை ஞாபக படுத்துது...;-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

Interesting article...

mutti vali poga seiyavendia pairchikalai therivikkavum.

மிகவும் பயனுள்ளதாக இருகிறது.பகிர்ந்து கொண்டதற்க்கு மிக்க நன்றி.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

மிகவும் பயனுள்ளதாக இருகிறது.பகிர்ந்து கொண்டதற்க்கு மிக்க நன்றி.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

மேலும் சில பதிவுகள்