பெஸ்டோ பாஸ்தா

தேதி: March 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

பாஸ்தா - 3 கப்
ஆலிவ் ஆயில் - 4 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
மேயனீஸ் - ஒரு கப்
பார்மிஜான் சீஸ் - 4 மேசைக்கரண்டி
பச்சை பட்டாணி - 3/4 கப்
பைன் நட்ஸ் - 2 மேசைக்கரண்டி
பாலக் கீரை - ஒரு கப்
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெஸ்டோ சாஸ் செய்ய:
வால்நட் - 10
பைன் நட்ஸ் - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 3 மேசைக்கரண்டி
பேசில் இலை - ஒரு கட்டு
உப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு கப்
பார்மிஜான் சீஸ் - ஒரு கப்


 

முதலில் சாஸ் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நட்ஸ், மிளகை ஒரு சுற்று சுற்றவும். பிறகு பேசில் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து சுற்றவும். கடைசியாக சீஸ் சேர்த்து நன்கு அரைத்து வைக்கவும். இதை செய்து வைத்துக் கொண்டால் எப்போவேண்டுமென்றாலும் பெஸ்டோ பாஸ்தா செய்யலாம். காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு சிறிதளவு ஆலிவ் எண்ணெய் மேலே ஊற்றி பிரிட்ஜில் வைத்து பிறகு உபயோகப்படுத்தலாம்.
ஒரு பெரிய வாய் அகலமான பாத்திரத்தில் ஒன்றுக்கு (பாஸ்தா) நான்கு மடங்காக தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். கொதித்ததும் தீயை குறைத்து பாஸ்தா சேர்த்து 10-15 வரையில் வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடிக்கட்டி குளிர்ந்த நீரில் கழுவி சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து கிளறி வைக்கவும். பார்த்து கிளறவும் உடைந்து விடும். ஆறவைக்கும் போதும் வாய் அகலமான பாத்திரமாக இருந்தால் ஒன்றோடோன்று ஒட்டாமல் இருக்கும்.
அரைத்த பெஸ்டோவில் முக்கால் கப் எடுத்து பட்டாணி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
ஐந்து நிமிடம் சென்று கீரையை அரைத்து இதில் சேர்க்கவும்.
கீரை நன்றாக வெந்ததும் மேயனீஸ் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு பாஸ்தாவை இதில் கொட்டி கிளறவும். உப்பு சரிபார்த்து, மிளகு தூள், எலுமிச்சை சாறு, மீதமுள்ள சீஸ், மற்றும் நட்ஸ் சேர்த்து கிளறவும்.
சுவையான பெஸ்டோ பாஸ்தா தயார்.

இதில் உள்ளது புசிலி பாஸ்தா வகை. இந்த பெஸ்டோ பாஸ்தாவிற்கு இதுவும் போ-டை பாஸ்தா தான் நன்றாக இருக்கும். இவர்கள் பெஸ்டோ பேஸ்ட்டை அப்படியே போட்டு சாப்பிடுவார்கள். பேசில் டேஸ்ட் பிடித்திருந்தால் அதை வதக்க தேவையே இல்லை. எல்லாவற்றையும் அப்படியே சேர்த்து கிளறி சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு லாவண்யா,

நான் ஃப்ளைட் பிடிச்சு, அங்கேயே வந்து சாப்பிட்டுக்கறேன். இதில் இருக்கும் பல பொருட்கள் இங்கே கிடைக்காதே!

நிறைய பொருட்கள் சேர்த்து, ரிச் ஆன குறிப்பாக செய்யறதில் நீங்க எக்ஸ்பர்ட் ஆச்சே, எப்பவும் போல இப்பவும் சூப்பர்!

அன்புடன்

சீதாலஷ்மி

பாஸ்தா சூப்பர். கலர்புல்லா இருக்கு //சீதாம்மா சொன்னதுப்போல் ரிச் ஆன குறிப்பாக செய்யறதில் நீங்க எக்ஸ்பர்ட் ஆச்சே உண்மையே// க்ரேட் லாவண்யா. இது மாதிரியெல்லாம் எப்படி கத்துக்கிட்டீங்க.

சூப்பர் சூப்பர்... எத்தனை முறை நான் இதையே சொல்ல... வார்த்தைக்கு பஞ்சமா போச்சு எனக்கு ;) கலர்ஃபுலா இருக்கு ப்ரெசண்டேஷன். குறிப்பு நல்லா சிம்பிளா இருக்கு. இப்படிலாம் கொடுத்தா இவ்வளவு சீஸோட... எந்த குட்டி தான் சாப்பிடாது!!! ஆனா லாவி... நாம தான் டயட் ஆச்சே ;) சாப்பிடாதீங்க. எனக்கே அனுப்பிடுங்க முழுசா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவண்யா பாஸ்தா சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லாவண்யா,
வாவ்...கல்ர்ஃபுல் பாஸ்தா.அழகான பளிச் படங்கள்.இப்போதைக்கு விருப்ப பட்டியலில் சேர்த்திருக்கேன்.பிறகு செய்துட்டு பதிவு போடுறேன். வித்தியாசமான குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி :)

சீதாலக்ஷ்மி என் குறிப்பில் முதல் பதிவு உங்களுடையாதா? நம்ப முடியவில்லை ;) எப்போ வரீங்கன்னு மட்டும் சொல்லுங்க....ஜமாய்ச்சிடுவோம்! என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க......இப்பெல்லாம் இந்தியாவில் கிடைக்காத பொருள் என்று ஒன்றுமே இல்லை. அங்கே கிடைத்து இங்கே கிடைக்காதது நிறையா இருக்கு :( நன்றி!!!

வாழ்த்துக்கு நன்றி வினோ! நீங்க சொல்ற அளவுக்கெல்லாம் ஒண்ணுமே இல்லை. எனக்கு சாப்பிட ரொம்ப பிடிக்கும். அதனால சமைக்கவும் பிடிக்கிறது அவ்வளவே தான்!

எத்தனை முறை சொன்னாலும் வனி ஓவ்வொரு முறையும் சொல்லும் போது இனிக்கிறது (வனி ஹனியாச்சே!)....ஹி ஹி ஹி.....இதுல நான் லோ பாட் சீஸ் போட்டிருக்கேன் . நமக்கு தான் இந்த இடாலியன் டிஷ் என்றால் கொள்ள பிரியமாச்சே அதனால விட முடியுமா.....உங்களுக்கு புல் பாட் சீஸ் போட்டு செய்தனுப்பறேன்! வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வாழ்த்துக்கு நன்றி ஸ்வர்ணா!

வாழ்த்துக்கு மிக்க நன்றி அன்பரசி! செய்துட்டு சொல்லுங்க :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

very tasty pastha

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

லாவண்யா,

பெஸ்டோ பாஸ்தா அருமை! பேசில், பைன் நட்ஸ் எல்லாம் போட்டு சும்மா கலக்கியிருக்கிங்க. ப்ரசண்டேஷன் கலர்ஃபுல்லா ஜோரா இருக்கு! பொண்ணுக்கு பாஸ்தா டிஷ்னா ரொம்ப இஷ்டம். ஆமா, சீஸ், லோ பேட் ஓக்கே, மேயனீஸ் எப்படி?! ஆலிவ் ஆயில் பேஸ்டு போட்டிங்களா, இல்லை ரெடியூஸ்டு மேயாவா? பசங்களுக்குன்னு பண்ணிட்டு நாமளும் இல்ல களத்தில குதிச்சிடுவோம், அதான் கேட்டுக்கலாம்னு! :) வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ