விமானபயணம், stoller.....உதவுங்கள் தோழிகளே!

தோழிகளே நான் எனது 5 மாத குழந்தையுடன் தனியாக பயணம் செய்கிறேன் (sharjah to coimbatore , air arabia flight).. உடல்நிலை காரணமாக குழந்தையை நீண்ட நேரம் தூக்கி வைக்க முடியாது எனவே stoller இருந்தால் வசதியாக இருக்கும்.. ஆனால் எடுத்து செல்லலாமா என்பது பற்றி தெரியாது யாராவது இது பற்றி தெரிந்தால் பதிவிடுங்கள்....

டியர் kalainithi,

நீங்கள் stroller எடுத்துக்கொண்டு போகலாம். flight ஏறியவுடன் அவர்கள் stroller ஐ வாங்கி vaithukollvargal . கோயம்புத்தூர் reach ஆனதும் திருப்பி தருவார்கள். flight ல குழந்தைய தூங்கவைக்க Bassinet request பண்ணிக்குங்க. air ல இருக்கும் பொது குழந்தைய bassinet ல வைச்சிக்கலாம். takeoff ஆகும் போதும் , லேன்ட் ஆகும் போதும் மட்டும் மடியில் வச்சிக்கணும். airarabia ல bassinet available ஆன்னு செக் பண்ணிக்குங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

airarabia ல bassinet available தான்,,,....

BE HAPPY MAKE OTHERS HAPPY

ஹாய் கலைநிதி நானும் 6 மாத குழந்தையை தூக்கி கொண்டு போயிருக்கேன் ஒன்னும் பயப்படாதிங்க ஃபிளைட் டேக் ஆப்,லேண்ட் ஆகையில உங்கலையும் குழந்தையையும் இணைத்து பெல்ட் போடுவாங்க பிறகு குழந்தக்குனு பேசினெட் குடுப்பாங்க குழந்தையை அரை மணிக்கு 1 தடவை செக் பண்ணிட்டே இருப்பாங்க இந்த வசதி எல்லா விமானத்திலையும் உண்டு. கை குழந்தை இருந்துச்சுனா நல்லா கேர் எடுத்துக்குவாங்க வேறு எதாவது சந்தேகம் இருந்துச்சுனா கேளுங்க பா...

குழந்தைக்கு தொண்டை வறண்டுருமுனு அரை மணிக்கு 1 தடவை தாய் பால் குடுக்க சொல்லிக்கிட்டே இருப்பாங்க ,அதிக நேரம் குழந்தை ஃபிளைட்டுல தூங்கவிடக்கூடாதுன்னு சொல்லுவாங்க, என் குழந்தை தூங்கிக்கிட்டே இருந்தா அதுனால தூக்கி தூக்கி தாய் பால் குடுத்து போட சொல்லிட்டே இருந்தாங்க நான் போன ஃபிளைட் ஸ்ரீ லங்கன் ஏர்லையன்ஸ்...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மன்னிக்கவும் இப்போது தான் உங்களுடைய பதிவை பார்த்தேன்.... நன்றி தோழி.... குழந்தைக்கு take off and landing ல் காது வலி ஏற்படுமோ என்று பயமாக உள்ளது... போன முறை வரும் போது எல்லா குழந்தைகளும் அழுதன... ஐயா மட்டும் ஜம் என்று தூங்கினான்...... நமக்கே அது சாமாலிக்க முடியாத ஒன்று... அதனை தவிற்க என்ன செய்ய வேண்டும்..?பயண நாள் .. நெருங்க நெருங்க ரொம்ப பயமா இருக்கு....

BE HAPPY MAKE OTHERS HAPPY

கலை பயப்படாதிங்க. நல்லா படியா ஊர்போய் சேருவிங்க. ஊருக்கு போற சந்தோஷத்தில இருங்கப்பா. காதுவலிக்கு ஒரு பூமர் போட்டுக்கோங்க. நல்லா மென்னுக்கிட்டே இருங்க. காது அடைச்சா மூக்கும் வாய் இரண்டும் மூடிகிட்டு வாய் முழுவதும் காத்து இருக்கிறமாதிரி ஊதுங்க. காது அடைக்காது. பயப்படாதிங்க. கவிதா சொன்னமாதிரி செய்ங்க.

நன்றி தாளிகா..... உங்களுடைய இழைகள் பார்த்தேன் இப்போது சற்று தெம்பூ வந்துள்ளது....

BE HAPPY MAKE OTHERS HAPPY

Kilambitingala akka?

பதிவிற்க்கு நன்றி gayathri.... என்னயா கேட்குறிங்க fathima?

BE HAPPY MAKE OTHERS HAPPY

கலைநிதி ஒன்னும் பயப்படாதிங்க ,குழந்தைகளுக்கு மட்டும் இல்ல நமக்கும் காது ரெண்டும் கப்புனு அடைச்சுக்கிரும் அதுக்கு காதுல வாக்மேன்
இருந்துச்சுனா மாட்டி விட்டுருங்க பாட்டு கேட்டா காது வலி எல்லாம் தெரியாது நான் என் 2 பசங்கலுக்கும் இதை தான் செய்யுவேன் பா, உங்கள் பிரயாணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்....

ஏர் கோஸ்டஸ் சொல்லலையினாலும் பரவாயில்லை குழந்தைக்கு அரை மணிக்கு 1 தடவை தாய் பால் குடுத்து தொண்டைய நனைச்சு விட்டுக்கிட்டே இருங்க பா, தூங்கினாலும் எழுப்பி குடுத்தே போடுங்க கலை....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ஊரில் இருந்து வரும் போது கணவர் உடன் இருந்தார்.... இப்பொது திடிர் பயணம்.. இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு எழுத செல்கிறேன்....

BE HAPPY MAKE OTHERS HAPPY

மேலும் சில பதிவுகள்