ஒரு ஆண் மகன் எப்படி இருக்கணும்...எப்படி எல்லாம் இருக்க கூடாது

எல்லாரும் இன்னைக்கு செம டென்ஷன் ல இருக்கறதுனால..நம்ம கோவத்த எல்லாம் இந்த ஆண்கள் பக்கம் திருப்பிடுவோம்....ஒரு ஆண் மகன் எப்படி இருக்கணும்...எப்படி எல்லாம் இருக்க கூடாது...ன்னு உங்க கருத்துகளை எல்லாம் வந்து கொட்டு கொட்டுன்னு கொட்டுங்க...கொட்டி வையுங்க...

பின் குறிப்பு:எங்க வீட்டு காரர் என்னையும் நம்பி ரெண்டு பேரை நைட் வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு இருக்காரு...அவர் பேர காப்பாத்த வாவது எதாச்சும் செய்யணும்... நிறைய வேல இருக்கு...நான்னும் இந்த கேள்விக்கு அப்புறம் வந்து பதில் சொல்றேன்

ஒரு மனிதான்மை உள்ள மனிதார நடந்தால் போதும். அவனே நல்ல கனவன் நல்ல தந்தை நல்ல சகோதரன் அனைத்திற்க்கும் மேலாகா நல்ல மனிதனும் ஆவான்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நல்ல தலைப்பு தான் போகுது .ஆண் கள் முதல்ல பாசக்காரனா இருக்கனும். பொறுப்பு வேணும் விட்டுக்கொடுத்தல் . பெண்களை மதித்தல் . அப்புறம் பொய் சொல்லக்கூடாது, ஆணுக்கே உரிய திடகாத்திரம் வேணும் அம்மா பின்னாடியோ மனைவி பின்னாடிய்யோ ஒழியிறவரா இருக்க கூடாது அதுக்காக அம்மா மனைவி பேச்சை தட்டிக்கழிப்பவராகவும் இருக்க கூடாது . அப்பப்போ கூட மாட ஒத்தாசை பண்ணாட்டியும் பரவால்ல உங்களுக்கு வேலை அதிகம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க , அப்புறம் செய்யலாம், அவசரமில்லை நாளை பார்ப்போம், கொஞ்சம் நேரத்தோட தூங்குங்க , முதல்ல சாப்பிடுங்க அப்புறம் வேலையைப்பாருங்க, என்ன வேணுமோ கேளுங்க” இப்படி அன்பாக பேசுங்க.(ஓ எல்ல நல்லதையும் ஆணினமே பன்னானுமா என்று கேட்காதீங்க பெண்கள் ஏற்கனவே இப்படித்தான் இருக்கோம்.)

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

suppara sonninga

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

மனைவியிடம் ஆணாதிக்கம் செலுத்தாமல் தோழமையாய் இருக்கனும்

அம்மாவுக்கும், மனைவிக்கும் நடுநிலையாய் இருக்கனும், பேசனும்.

குழந்தைகளிடம் மிரட்டலாய் இல்லாம தோழமையாய், ஜாலியா இருக்கனும்.

முற்போக்குவாதியா இருக்கனும், அதே சமயம் பாரம்பரிய கலாச்சாரத்தை மதிக்கனும்.

ரெண்டு குடும்பத்தையும் பாரபட்சம் காட்டாம பார்க்கனும்.

மனைவியின் திறமைகளை உதாசீனப்படுத்தாமல், ஊக்கப்படுத்தி உற்சாகம் தரனும்.(எங்களுக்கும் சேம்)

மனைவியின் முன்னால் மற்ற பெண்களை புகழ்ந்து உயர்த்தி பேசக்கூடாது. அது அம்மா, தங்கையா இருந்தாலும்.(நாங்களும் ஒப்பிட்டு பேச மாட்டோம்)

வீட்டு வேலையும், குழந்தை வளர்ப்பையும் ஷேர் பண்ணிக்கனும்.(முடியும் போதுதான்)

காலை 8மணி வரை தூங்கினாலும் கோவிக்க கூடாது.(விடுமுறை நாட்களில் மட்டும்தான்)

நிறைய பொறுப்பாவும், கொஞ்சம் பொறுமையாவும் இருக்கனும்.

மனைவியின் விருப்பத்தையும் மதிக்கனும். ட்ரெஸிங் சென்ஸ் அதிகமா இருக்கனும்.

குறைகளை சுட்டிக் காட்டவும், நிறைகளை பாராட்டவும் செய்யனும். சின்ன சின்ன குறைகளை பெரிசு படுத்தாம விட்டுடலாம்.(எங்களுக்கும் சேம்)

பணம் சம்பாதிக்கவும், சரியாய் செலவு செய்யவும், எதிர்காலத்துக்கு சேமிக்கவும் ஆக மொத்தம் திட்டமிட்டு குடும்பம் நடத்த தெரியனும்.(எங்களுக்கும்தான்)

தன்னோட மனைவி அழகுனு மனசார நினைக்கனும். அப்பப்போ ''ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, ரொம்ப ரொம்ப அழகா இருக்கே''னு சொல்லி ரசிக்கனும்.(நாங்களும் சொல்லுவோம்)

மனைவிக்கு அப்பப்போ எனர்ஜி தர்ற மாதிரி பேசனும். உதாரணத்துக்கு உன் சமையலை அடிச்சிக்க ஆளே கிடையாது, நீ மனைவியாய் வந்தது என்னோட லக் இப்படி. (நாங்களும் சொல்லுவோம்)

''நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்'' அப்படிங்குற அளவுக்கு மனைவியை புரிஞ்சி வெச்சிருக்கனும்.(நாங்களும் புரிஞ்சிப்போம்)

உங்க அம்மாவோட சமையலை தப்பி தவறி கூட புகழ்ந்து பேசாதீங்க, எங்களுக்கு கெட்ட கோவம் வரும்.

என் புருஷனுக்கு தெரியாத விஷயமே கிடையாதுனு மனைவி பெருமையா பேசுற அளவு உலக அறிவு இருக்கனும். ஆனா அதை எங்ககிட்டயே காட்டி பந்தா பண்ணக்கூடாது.

உங்க அம்மாகிட்ட ஃபோன்ல பேசினீங்களானு மனைவி கேட்டா, ''இல்லை''னு பொய் சொல்லி மனைவியை சந்தோஷப்படுத்த மட்டும் பொய்யை யூஸ் பண்ணுங்க. எல்லா விஷயத்திலயும் பொய் சொல்ல ட்ரை பண்ணா, கண்டிப்பா நாங்க கண்டுபிடிச்சிடுவோம். அப்புறம் பின்விளைவுகளுக்கு நாங்க பொறுப்பல்ல

மனைவியை விட்டுட்டு இந்த ஃப்ரண்ட்ஸோட சினிமா போற வேலையெல்லாம் இருக்க கூடாது.(எல்லோரும் சேர்ந்து ஃபேமிலியா போலாம்).
அடிக்கடி அவுட்டிங் கூட்டிட்டு போய் சந்தோஷப்படுத்தனும்.

தம், தண்ணி இதை மனைவியிடம் செல்லமா அனுமதி கேட்டு அடிக்கடி இல்லாம எப்பவாது ஒரு டைம் என்ஜாய் பண்ணிக்கலாம்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

gowthami neega samikkiratha naanga saapudurathey naaga sera periya thiyakam ,

athu eppadi neega virummpunamaari irunthathan aangal sari, yen angal virumpuvathupool neega irukka koodatha

நான் மொதல்ல சொன்ன மாதிரி பொறுப்பைத் தட்டிக்கழிக்கறது...எதாச்சும் பிரச்னை ன்னா ஆள் இருந்த இடமே தெரியாது...அப்படியே ஆள் எஸ்கேப் aagi மாயமாய் போறது...

பழைய காலத்து கட்டுப்பெட்டியான அபிப்ராயங்களை சம்பிரதாயம் ன்னு இன்னமும் அப்படியே கடைபிடிக்கும் டைனோஸர் காலத்து பிற்போக்குவாதிகளா இருக்கறது,இல்ல அப்படி இருக்குற பெரியவங்கள தப்பு செய்யுறாங்கன்னு தெரிஞ்சும் தட்டி கேக்காம இருக்குறது

பொண்டாட்டி கிட்ட அன்பாய் அனுசரணையை நாலு வார்த்தை கோட பேசத் தெரியாத இருக்கிறது...கணவனிடம் ஆசையாகப் பேசலாம் ன்னு காலையிலிருந்து பொண்டாட்டி வீட்டுல இருக்கும் பொது , வந்ததும் வராததுமாய் டிவி எ கதி ன்னு உட்காந்துகிட்டு அதிகாரம் செய்ய மட்டும் நல்லா நாலு வீட்டுக்கு நீட்டி முழக்கி பேசுறது...

பக்கத்தில் கிளி மாறி பொண்டாட்டி இருந்தாலும் போற வர எல்லாப் பெண்களையும் பார்த்தா கூட ஓவராக ஜொள்ளு விடுrathu,மனைவியை அசிங்கமாகப் தரகுறைவா பேசுறது,மனைவியை மட்டும் இல்லாம அவங்க வீடு ஆளுங்கள கேவலமா பேசுறது நடத்துறது ,உனக்கு நான் வேணுமா அவங்க வேணுமான்னு கேக்குறது,அடிக்கறது,உதைக்கிறது

இதெல்லாம் எ பிக் நோ நோ...பெண்கள் என்ன எதிர் பாக்குராங்க?

ஆசையாய் பாசமாய் இருக்கணும்
நகைசுவையாய் பேச தெரியனும் குறும்பாய் இருக்கணும் !!
கம்பீரமாய் துணிச்சலாய் இருக்கணும்

இதுக்கு அப்புறம் தான் நகை,பணம்,வீடு,வசதி,கார்,கழுதை,குதிரை எல்லாமே...(கண்டிப்பாக சில விதி விலக்கு பெண்களும் உண்டு...)நம்ம கிட்ட வந்து சேர்ந்தவங்க இப்படி இல்லன்னு வருத்த படுறத விட நமக்கு பொறக்குறத யாவது இப்படி எல்லாம் இருக்குற மாதிரி வளர்கிறது நம்ம கையில தான் இருக்கு... !!!!

//Veerakumar

ஆண்கள் நீங்க பெண்கள் கிட்ட என்ன எதிர்பாக்குறீங்கன்னு வேணா தமிழ் எழுத்து உதவி use பண்ணி தமிழ் ல தனி இழை லையோ சொல்ல விரும்புகிறேன்-7 இழை ல யோ சொல்லுங்க...இங்க கேட்ட கேள்விக்கு தான் எல்லாரும் பதில் சொல்லிட்டு இருக்காங்க.....அவங்க அவங்க விருப்பத்த சின்ன சின்ன எதிர் பார்ப்ப தான சொல்றாங்க....?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் ஹாய் ஹாய் தோழிகளே வணக்கம்.நீங்கள் சொல்வதை புரிந்து நானும் கூறுகிறேன் எனது தரப்பில்.ஒரு ஆண் பெண்ணை படுத்தும் பாடுசொல்லி மாலாது. 1.அவளின் பிறந்தவீட்டை இவரின் வீட்டை போல்பார்க்கவேண்டும். 2.அவளுக்கு பிடித்தவற்றை மற்றவரிடம் கேட்காமல்,இவர் வாங்கி கொடுக்கவேண்டும்.( மனைவிக்கு வாங்கிதறுவதை) 3.அவள் கூறுவதையும்( அதாவது அவள் கூறும் கருத்துக்களையும் கேட்கவேண்டும்)எல்லாம் எனக்கு தெரியும் நீ ஒன்றும் கூறவேன்டாம் என்று சொல்லக் கூடாது 4.எங்கும் எப்பொழுதும் அவளை விட்டு கொடுக்க கூடாது. 5.அவள் மீதுசந்தேகம் படக்குடாது,அடுத்தவர் கூறினாலும்,என் மனைவி நல்லவள் என்று நினைக்கவேன்டும். 6.வாரம் ஒருநாள் அவளை வெளியில் அழைத்து போகவேண்டும் அல்லது மாதம் இருமுறை என்றாலும் பரவாயில்லை. 7.அவளுடன் சிறிது நேரமாவது மனம் விட்டு பேசவேண்டும்.அவரின் வேளை பற்றி,வரவு செலவு பற்றியும் பகிர்ந்துக் கொள்ளவேண்டும்.இவை மற்றும் இப்பொழுது,நினைவு வந்தால் மீண்டும் எழுதுகிறேன்.

மேலும் சில பதிவுகள்