விடுகதைக்கு விளக்கம் தா .... பகுதி 2

ஹாய் தோழிகளே... அந்த இழை நிரம்பிடுச்சு... இங்க வாங்க :)

இந்த விடையும் சரியே. எப்படி இப்படி. பிறந்ததில் இருந்தே நீங்க இப்படிதானா இல்ல இப்போ ஏதும் வந்ததா ?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

நலமா ? கொலையாளி விடுகதைக்கு பர்வீன் பரீத் சரியான விடை சொல்லி இருந்தாங்களே. ஆனாலும் உங்களுக்காக இதோ விடை,
அங்கு இருந்தவர்களில் தீயணைப்பு வீரன் மட்டும் தான் ஆண். அதான் போலீஸ் சுலபமா ஏதும் கேள்வி கேட்காம போனதும் அவனை கைது பண்ணிட்டாங்க.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மூன்று திருடர்கள் ஒரு வாழைக்குலையை திருடினார்கள். அதை பழுக்க வைக்க ஒரு இடத்தில் மறைத்து வைத்தார்கள் மறுநாள் 1வது டிருடன் வந்து பார்க்கும் போது ஒருகாய் பழ்த்திருந்தது அதை அவன் சாப்பிட்டுவிட்டு மீதியை 3பாகங்களாக பிரித்து ஒரு பாகத்தை அவன் எடுத்துக்கொண்டு சென்று விட்டான், அடுத்த நாள் 2வது திருடன் வந்து பார்க்கும் போது ஒரு காய் பழுத்திருந்தது அதை அவன் சாப்பிட்டு விட்டு மீதியை 3 பாகங்களாக பிரித்து அவன் 0ஒரு பகுதியை எடுத்துக்கொன்டு சென்று விட்டான், அதற்கடுத்த நாள் 3வது திருடன் வந்தான் ஒரு காய் பழுத்திருந்தது அதை சாப்பிட்டுவிட்டான் மீதியை 3பாகங்களாக ப்ரித்து ஒருபகுதியை அவன் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். அடுத்த நாள் 3பேரும் சேர்ந்து வந்து பார்த்த போது அனைத்துக்க்காய்களும் பழ்த்திருந்தன அதனை 3 பாகங்கலாக பிரித்து ஆளுக்கொரு பாகம் எடுத்துக்கொண்டார்கள். கேள்வி என்னவென்றால் அந்த வாழைக்குலையில் இருந்த வாழைப்பழங்கள் எத்தனை/

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஈஸியான நூல் எடுத்து இந்த விதை கோர்த்தவங்களுக்கு 8 கட்டு வெத்தலை,எண்ணாயிரம் பாக்கு,தொட்டுக்க சுண்ணாம்பு ,தொடை தண்டி புகையிலை அது என்ன?

விடை---------கீரை விதை.

முடிஞ்சா கோர்த்து ட்ரை பண்ணி பாருங்க தோழிகளே.... முயற்சி திருவினையாக்கும்....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

பூங்காற்று ரொம்ப கஷ்டமா குடுத்துட்டீங்க பா....நான் கணக்குல ரொம்ப வீக் பா...... நீங்களே வந்து சொல்லிருங்க இப்ப இல்ல நம்ம தோழிகள் சொல்லுராங்களானு பார்ப்போம்...ரொம்ப புத்திசாலி நிறைய பேர் இருக்காங்க பா....
யாராலையும் சொல்ல முடியலைனா வந்து நீங்களே சொல்லிருங்க பூங்காற்று அப்பறம் நான் வந்து மண்டைய ஒடச்சிக்கிட்டு நிப்பேன்....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவிதா தோழிகள் சொல்லும்வரை பொறுத்திருந்து பார்ப்போம். எங்க தோழிகள் க்லீன் போல்ட் ஆக்கிடுவாங்க.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று,

அந்த வாழைக்குலையில் இருந்த மொத்த வாழைப்பழங்கள் 106.

பதில் சரி என்றால் நான் பிறகு விளக்கம் தருகிறேன்.

Sollupa? correcta?

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

மூன்று திருடர்களும் சேர்ந்து மொத்தம் 106 பழங்களை திருடினார்கள்.அதில்

*முதலாவது திருடன் வந்து பார்த்த பொது ஒரு பழம் பழுத்திருந்தது .அவன் அதை சாபிட உடன் மீதமிருந்த பழங்கள் 105, அதை மூன்றாக பிரித்தால் 35/35/35 அதில் ஒரு பாகம் 35 பழங்களை அவன் எடுத்து சென்ற பின் மீதி இருக்கும் பழங்கள் 70.

*இரண்டாவது திருடன் வந்து பார்க்கும் போது 70 பழங்கள் இருக்கும்.அதில் ஒன்றை அவன் சாப்பிட்ட பின்பு மீதமிருக்கும் பழங்கள் 69 .அதை மூன்றாக பிரித்தால் 23/23/23 அதில் ஒரு பாகம் அவன் எடுத்து சென்ற பின் மீதி இருக்கும் பழங்கள் 46.

* மூன்றாவது திருடன் வந்து பார்க்கும் போது பழங்கள் 46 இருக்கும்.அதில் ஒன்றை அவன் சாப்பிட்ட பின்பு மீதமிருக்கும் பழங்கள்45 .அதை மூன்றாக பிரித்தால் 15/15/15.அதில் ஒரு பாகம் அவன் எடுத்து சென்ற பின் மீதி இருக்கும் பழங்கள் 30.

So கடைசியாக ஆளுக்கு 10 பழங்கள் எடுத்து சென்று இருப்பார்கள்.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

வெண்ணிலா போட்டி போட்டு செமத்தியா கலக்குரீங்க...அது எப்படி எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சுருக்கு உங்களுக்கு பா...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவி, பூங்காற்று, வெண்ணிலா..... சூப்பரா இருக்கு விடுகதைகள்.

கவி... அது என்ன விதை? தர்பூசணியா? வெள்ளரியா? முருங்கை யா/

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்