ஃப்ரெஞ்சு டோஸ்ட்

தேதி: March 26, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (10 votes)

 

ப்ரெட் துண்டுகள் - 4
முட்டை - 2
பால் - அரை கப்
வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
தேன் - 2 அல்லது 3 தேக்கரண்டி (அ) சுவைக்கேற்ப
வெண்ணெய் - சிறிதளவு
எக் லெஸ் ஃப்ரெஞ்சு டோஸ்ட்:
ப்ரெட் துண்டுகள் - 2
பால் - கால் கப்
கார்ன் ஃப்ளார் - ஒரு மேசைக்கரண்டி
தேன் - 2 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - சிறிதளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
முட்டைகளை நன்கு அடித்து, அதனுடன் பால், தேன் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், ப்ரெட் துண்டை தயாரித்து வைத்துள்ள கலவையில் இரு பக்கங்களையும் தோய்த்து எடுக்கவும். அதிக நேரம் விட கூடாது. ப்ரெட் ஊறிவிடும்.
தவாவில் சிறிது வெண்ணெய் தடவி, ப்ரெட் துண்டை போட்டு டோஸ்ட் செய்யவும்.
சிவந்ததும் மறு புறமும் டோஸ்ட் செய்து கொள்ளவும்.
எக்லெஸ் ஃப்ரெஞ்சு டோஸ்ட்டுக்கு பாலில் கார்ன் ஃப்ளார் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் வெனிலா எசன்ஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து வைக்கவும்.
இதில் ப்ரெட் துண்டை தோய்த்து, தவாவில் டோஸ்ட் செய்து கொள்ளலாம்.
ஏறக்குறைய ஃப்ரெஞ்சு டோஸ்ட்டின் சுவை இதில் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு பிடித்த சுவையான ஃப்ரெஞ்சு டோஸ்ட் தயார். இதனை வெண்ணெய் மற்றும் மேப்பிள் சிரப் உடன் பரிமாறலாம்.

பொதுவாக ஃப்ரெஞ்சு டோஸ்ட் செய்ய ஃப்ரெஷ் ப்ரெட்டை விட 2 நாட்கள் ஃப்ரிஜ்ஜில் வைத்த ப்ரெட் ஏற்றது. :-) எக்லெஸ் ஃப்ரெஞ்சு டோஸ்ட்டில் கார்ன் ஃப்ளாருக்கு பதிலாக கடலை மாவு அல்லது கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கொள்ளலாம். இரவே ஃப்ரெஞ்சு டோஸ்ட்டிற்கான கலவை தயார் செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டால், காலையில் டோஸ்ட் செய்ய ஈசியாக இருக்கும். தேனுக்கு பதில் சர்க்கரையும் பயன்படுத்தலாம். இதில் சிறிதளவு பட்டை தூள் சேர்த்தால் இன்னும் மணமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எக்லெஸ் செஞ்சதில்லை,ட்ரை பண்றேன்,கடைசி போட்டோ சூப்பர்.

அன்பு சூப்பரா டோஸ்ட் பார்க்கவே அழகா இருக்கு வாழ்த்துக்கள்.நான் பாலில் முட்டை மட்டும் கலந்து டோஸ்ட் செய்வேன் தேன்,வெனிலா எசன்ஸ் சேர்த்ததில்லை இனி சேர்த்து செய்து பார்க்கிறேன்.
கடைசி படம் அட்டகாசமா இருக்கு...:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹர்ஷா... எக்லெஸ் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் செய்ததில்லை ஒருபோதும். பிடித்திருக்கிறது, ட்ரை பண்ணுகிறேன். கடைசிப் படம் அழகு.

‍- இமா க்றிஸ்

இது ரொம்ப டேஸ்டா இருக்கும்னு பார்க்கும்போதே தெரியுதே..வெறும் முட்டைல சர்கரை போட்டுதான் இதுவரைக்கும் செஞ்சிருக்கேன் இனி நீங்க சொன்ன எல்லாம் போட்டு செஞ்சி பார்த்துட வேண்டியதுதான்.. நன்றி ஹர்ஷா..

அன்புடன்,
zaina.

நான் அடிக்கடி செய்ற BF இது தான் பா.... நீங்க நல்ல செஞ்சு காட்டி இருக்கீங்க. வாழ்த்துக்கள்

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

அன்பு ஹர்ஷா,

ஆல்டர்னேட் பொருட்கள் வைத்தும் செய்யலாம் என்று சொல்லியிருப்பது நல்லா இருக்கு.

ஃப்ரிஜ்ல வைத்த ப்ரெட்(கண்டிப்பாக எல்லார் வீட்டிலும் இது இருக்கும்:):))உபயோகிக்கலாம்னு சொல்லியிருப்பதும் உபயோகமாக இருக்கும்.

கடைசிப் படம் - சூப்பர். எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? அழகாக இருக்கு. நல்ல கற்பனைத் திறன். அழகாக வந்திருக்கு, பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு, கார்ன் ஃப்ளார் சேர்த்து ப்ரென்ச் டோஸ்ட். வித்யாசமான செய்முறை. ப்ரசெண்டேஷன் சூப்பர் பா. நிச்சயம் செய்து கொடுத்துடறேன் குட்டீசுக்கு.வாழ்த்துக்கள் அன்பு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் இது மாதிரி செய்தது இல்லை முட்டை சேர்த்தும் சேர்க்காமலும் செய்து காட்டி இருக்கிங்க கடைசி படம் அருமையா இருக்கு நான் இந்த முறைல ட்ரை பண்ணுறேன் விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

எனது குறிப்பை இவ்வளவு விரைவில் வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

ரீம்,
முதலாவதாக வந்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி ரீம்.செய்து பார்த்து சொல்லுங்க.வேக வைத்த முட்டையில் செய்யும் இந்த மைஸ்(mice) குட்டீஸ்க்கு ரொம்ப பிடிக்கும்.அவங்களையே செய்ய வைக்கலாம்.

ஸ்வர்ணா,
வெனிலா எசன்ஸ் சேர்த்தால் முட்டை வாசம் அவ்வளவாக தெரியாது.தேன்/சர்க்கரை சேர்த்து செய்து பாருங்க. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.ரொம்ப சிம்பிளான இந்த குறிப்புக்கு ’+’ சேர்க்கதான் ’மைஸ்(mice)’. நல்லா இருக்கா? ;-) உங்க பதிவுக்கு மிக்க நன்றி ஸ்வர்ணா.

இமா,
உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.’மைஸ்(mice)’- கைவினை ஆசிரியையிடம் பாராட்டு பெறுவது சந்தோஷமா இருக்கு.ஆனால் ஐடியா என்னுடையதல்ல.செய்தது மட்டும் தான் நான்.உங்க பதிவுக்கு மிக்க நன்றி இமா.

ஸய்னா,
கண்டிப்பா செய்து பார்த்து பிடிச்சதானு சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

வெண்ணிலா,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி. :-)

சீதாலக்‌ஷ்மி அம்மா,
ஒவ்வொரு ஸ்டெப்பையும் உன்னிப்பாக பார்த்து போடும் உங்க பதிவு குறித்து மிக்க மகிழ்ச்சி. இந்த மைஸ்(mice) சமீபத்தில் வந்த ஒரு ஆங்கில இதழில் பார்த்து ட்ரை பண்ணது.அவ்வளவுதான். கற்பனை வளம் இன்னும் வளரவில்லை. ;-) ஆனால் ஹர்ஷாக்கு ரொம்ப பிடிச்சது.உங்க வீட்டு குட்டீஸ்க்கும் சொல்லி கொடுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றிங்க.

கல்ப்ஸ்,
ஃப்ரென்ச் டோஸ்ட் கண்டிப்பா குட்டீஸ்க்கு பிடிக்கும்.செய்து கொடுங்க.தொடர்ந்து வரும் உங்க பதிவுகளுக்கு மிக்க நன்றி கல்ப்ஸ்.

தனா,
விருப்ப பட்டியலில் சேர்த்துட்டீங்களா? மிக்க நன்றி. முடியும் போது செய்து பார்த்து சொல்லுங்க.கடைசி படம் பிடித்ததில் மகிழ்ச்சி.பதிவுக்கு மிக்க நன்றி தனா.

ஹ‌ர்ஷா,

ஃப்ரெஞ்சு டோஸ்ட், எக்லெஸ் மெத்த‌ட்ல‌ இதுவ‌ரை ட்ரை ப‌ண்ணிய‌தில்லை, இனி செய்திடவேண்டிய‌துதான். க‌டைசிப் ப‌டம், மைஸ் செம‌ க்யூட்டா இருக்கு! :) அருமை! வாழ்த்துக்க‌ள்!!

அன்புடன்
சுஸ்ரீ

உங்க பிரெஞ்சு டோஸ்ட் சூப்பர்...... எனக்கு பிரட் டோஸ்ட் ரொம்ப பிடிக்கும்.... நான் பால், சர்க்கரை, முட்டை கலந்து செய்து பார்த்து இருக்கேன்..... ஆனா உங்க முறைல செய்தா டேஸ்ட் இன்னும் பிரமாதமா இருக்கும்ன்னு நினைக்கிறன்...... படங்கள் அருமையா இருக்கு..... அதுவும் அந்த முட்டை எலி கண்ணை கவருது...... வாழ்த்துக்கள்..... : )

என்ன மாதிரி சைவ பிரியர்களுக்காக இன்னோரு முறையும் செய்து காட்டி இருக்கீங்க பாருங்க உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கண்டிப்பா செய்து பாக்குறேன் நான். வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

சுபா ராம் சொன்னமாதிரியேதான் இன்னொரு முறையும் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்;-)

கடைசி விளக்கக்காட்சி அருமை..அதிலும் சுண்டெலிகள் மிக அருமை அன்பு;-) வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

ப்ரெஞ்ச் ப்ரெட் டோஸ்ட் சைவம், அசைவம் இரண்டு விதமா செய்து காட்டி இருக்கீங்க சூப்பர். எக்ல பண்ணின கார்விங்கும் அழகு. வாழ்த்துக்கள்.

சுஸ்ரீ,
எக்லெஸ் ஃப்ரெஞ்சு டோஸ்ட்டும் நல்லா இருக்கும்.செய்து பாருங்க.மைஸ் நல்லா இருக்கா? ;-) நன்றி சுஸ்ரீ.குட்டீஸுடன் உட்கார்ந்து செய்ய நல்லா இருக்கும். உங்க பதிவுக்கும் மிக்க நன்றி.

தீபா,
எனக்கும் ப்ரெட் டோஸ்ட்னா ரொம்ப பிடிக்கும்.இந்த முறையில் செய்து பார்த்து சொல்லுங்க.முட்டை எலியும் செய்வது ஈஸிதான்.மிளகு - கண்கள்.முள்ளங்கி/கேரட் - காதுகள்.கொத்தமல்லி காம்பு - வால்.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

சுபா,
நன்றி எல்லாம் எதற்கு? குறிப்பு உங்களுக்கும் பயன்படும் என்பது மகிழ்ச்சியே.முட்டை கூட சாப்பிடாதவர்கள் இம்முறையில் ஃப்ரெஞ்சு டோஸ்ட் செய்யலாம்.செய்து பார்த்து சொல்லுங்க.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி சுபா.

ஜெய்,
நான் தான் தேங்க்ஸ் சொல்லணும் ஜெய்.சுண்டெலிகள் உங்களுக்கும் பிடிச்சதில் மகிழ்ச்சி.செய்து பாருங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

வினோஜா,
குறிப்பும்,எக் மைஸும் பிடிச்சதில் மகிழ்ச்சி.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

ஹெல்தி ஆப்ஷன் கொடுத்திருக்கீங்க......சர்க்கரைக்கு பதில் தேன்....நல்ல குறிப்பு. வழக்கம் போல் படங்கள் அருமை. அதிலும் அந்த வெள்ளை சுண்டெலிகள் ரொம்பவே க்யூட் :) ஹர்ஷா செய்ததா? வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய்... ரொம்ப நல்ல குறிப்பு.. படங்களே உடனே செய்து சாப்பிடனும்னு தூண்டுது.. முட்டை பொம்மை சூப்பர்.. வாழ்த்துக்கள்..

"எல்லாம் நன்மைக்கே"

லாவண்யா,
சுண்டெலிகள் ரொம்ப நாளா வெயிட்டிங். இந்த ரெஸிப்பிக்கு பொருத்தமாயிருக்கும்னு வெளியில் விட்டுட்டேன். :-) ஹர்ஷாவுக்காக நான் செய்து கொடுத்தது.

பாக்கியலக்‌ஷ்மி,
உங்க பதிவுக்கும்,வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க.

அன்பு, நலமா பா? அறுசுவையில் பார்த்து நாளாச்சு..

இன்று நீங்க சொல்லி தந்த இந்த ப்ரெஞ்ச் டோஸ்ட் பண்ணேன் பா. தேன் மற்றும் வெனிலா எசன்ஸ் கூட்டணியோட டோஸ்ட் நல்ல டேஸ்ட் பா. குட்டீசுக்கு ரொம்பவே பிடிச்சு போச்சு. இனி ப்ரெஞ்ச் டோஸ்டை விட மாட்டாங்க. நல்ல குறிப்பு தந்த உங்களுக்கு தேங்க்ஸ் அன்பு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.