குழந்தை சாப்பிட மறுக்கிறாள்

அன்பு தோழிகளே என் மகளுக்கு 7 மாதம் முடிந்துவிட்டது,இப்பொழுது அவள் தாய்ப்பால் மட்டுமே குடிக்கிறாள்,நான் எது சாப்பிட குடுத்தாலும் அதாவது இட்லி,பருப்பு மசித்தது,உருளை,சோறு,கஞ்சி,Biscuit.etc etc.....வாங்க மறுக்கிறாள் அவளை கட்டாய படுத்தி ஊட்டினாலும் வாந்தி பண்ணி விடுகிறாள்,போர்ன்விட்டாவை கூட குடிக்க மாட்டேங்குறாள்,எனக்கு இது 2 வது குழந்தை என் முதல் குழந்தை நான் இந்தியாவில் 1 வயது வரை வளர்த்தேன்,அவன் எது குடுத்தாலும் சாப்ப்ட்டான்,இப்பொழுது நான் தனியாக வெளி நாட்டில் வசிக்கிறேன்,முதலில் என் மகள் Cerelac,Formula milkசாப்பிட்டு கொண்டு இருந்தாள் இப்பொழுது தாய்ப்பால் மட்டுமே குடிக்கிறாள்,Cerelac,Formula Milk கூட சாப்பிட மாட்ட்டெங்குறாள்.

எனக்கு தற்பொழுது பால் குடுத்து கொண்டே இருப்பதால் கால் வலி,மூட்டுவலி இம்சிக்கிறது,பீரியட் சரியாக வர மாட்டேங்குது,அவள் மற்ற உண்வுகளை சாப்பிட நான் என்ன செய்ய வேண்டும்,நான் மிகவும் கவலையில் உள்ளேன்,உதவுங்கள் தோழிகளே

மஞ்சு, சில குழந்தைக்கு உப்பு சுவை பிடிக்கும்,சிலருக்கு காரம் அல்லது இனிப்பு பிடிக்கும்.சுவை மாற்றி முயற்சி செய்து பாருங்கள். சில பிள்ளைகள் போகப்போக தான் சாப்பிடுவார்கள்.சில பேர் பால் மட்டும்தான் சாப்பிடுவார்கள்.உங்களுக்கு உடம்பு வலிக்கத்தான் செய்யும்,நீங்கள் நெறைய பால் குடிக்க வேண்டும்,டாக்டர் ஆலோசனைபடி கால்சியம்,அயன் மாத்திரை சாப்பிடவும்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்