தட்டை

தேதி: March 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

 

புழுங்கலரிசி(இட்லி அரிசி) - 4 கப்
மிளகாய் வற்றல் - 15
பெருங்காயப் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
எள் - 2 டீஸ்பூன்
தேங்காய்(பொடியாக நறுக்கியது) - 4 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
உப்பு - ருசிக்கேற்ப
ரீபைண்ட் ஆயில் - பொரிக்க


 

புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாகத் திரித்துக் கொள்ளவும்.
இதனுடன், மிளகாயையும் போட்டு, பவுடராக ஆக்கிக் கொள்ளவும்.
ஊறிய அரிசியை, கிரைண்டரில் போட்டு, நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவுடன், பொட்டுக்கடலை மாவு, எள், ஊறிய கடலைப் பருப்பு, பொடியாக அரிந்த தேங்காய், பெருங்காயப் பவுடர், கருவேப்பிலை, உப்பு எல்லாம் சேர்த்து, உருட்டும் பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
2-3 ப்ளாஸ்டிக் ஷீட்கள் எடுத்துக் கொள்ளவும்.
அவற்றில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
மாவை, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கை அகலத்துக்கு மெல்லிய தட்டைகளாகத் தட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய விடவும்.
எண்ணெய் காய்ந்ததும், தட்டைகளை உடையாமல் எடுத்து, எண்ணெயில் போட்டு, இருபுறமும் திருப்பி விட்டு, பொன்னிறமானதும், எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அடுத்த முறை செய்யும் போது அவசியம் படம் எடுத்து இங்க இணைக்க சொல்லுங்க... பார்க்க ஆசையா இருக்கு தானே எனக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா,

கண்டிப்பாக, படம் எடுத்து அனுப்புகிறேன்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாம்மா, தேங்காய் சேர்த்திருப்பது நிச்சயம் வித்தியாச ருசியை தரும் என்றே நம்புகிறேன். பச்சரிசியில் செய்யலாமா? ருசி வித்தியாசப்படுமா? செய்து பார்த்து கண்டிப்பா சொல்வேன் ;) இன்னும் டேஸ்டான குறிப்புகள் தொடர வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு கல்பனா,

பச்சரிசியிலும் செய்யலாம். கொஞ்சமாக செய்ய நினைச்சீங்கன்னா, பச்சரிசியை ஊற வைத்து, தண்ணீரை வடிச்சுட்டு, மிக்ஸியில் திரிச்சு, செய்து பாருங்க.

அல்லது மிஷினில் வரட்டு மாவாகத் திரித்த பச்சரிசி மாவிலும் செய்யலாம், டேஸ்ட் நல்லா இருக்கும். ருசி எதுவும் வித்தியாசப்படாது.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

Enaku thataina romba pidikum.ithula mavu ena pathathuku araikanum.ellathaum mixpana urudum patham varuma.

Be simple be sample

அன்பு ரேவதி

புழுங்கலரிசியை, இட்லிக்கு அரைப்பதை விட, கொஞ்சம் கெட்டியாக அரைத்தால், சரியாக இருக்கும். இந்த மாவுடன் பொட்டுக்கடலை மாவை சேர்த்துப் பிசைந்தால், கரெக்டாக வரும்.

செய்து பார்த்து, சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி