தேதி: March 28, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
புழுங்கலரிசி(இட்லி அரிசி) - 1 கப்
பச்சரிசி - 2 கப்
வெள்ளை உளுத்தம்பருப்பு - 1/2 கப்
சீனி - 2 கப்
பாசிப்பயறு - 1/2 கப்
தேங்காய் - 1
வாழைப் பழம் - 1
முந்திரிப்பருப்பு - 100 கிராம்
ஏலக்காய்ப் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாக ஊற வைக்கவும்.
3 மணி நேரத்துக்குப் பிறகு, நன்றாகக் களைந்து, பிறகு, கிரைண்டரில் போட்டு, கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் பிசைந்த வாழைப்பழம், உப்பு இரண்டையும் சேர்த்து, நன்கு கலக்கவும். மூடி வைக்கவும்.
அடுத்த நாள் காலையில், இந்த மாவுடன், துருவிய தேங்காய், வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்ப் பொடியைப் போட்டு, கலக்கவும்.
சீனியையும் இந்த மாவில் கலக்கவும்.
பாசிப்பயறை வறுத்து, குழையாமல் வேக வைத்து, எடுத்து வைக்கவும்.
இட்லி தட்டில் துணி விரித்து, கலந்து வைத்திருக்கும் மாவில் கால் கரண்டி ஊற்றி, அதன் மேல் சிறிதளவு(1 ஸ்பூன் அல்லது 1/2 ஸ்பூன் அளவு) வெந்த பாசிப்பயறை வைத்து, அதன் மேல் இன்னும் கொஞ்சம் மாவு ஊற்றவும்.
எல்லா இட்லிகளையும் இதே போல ஊற்றி, வேக வைத்து, எடுக்கவும்.
தென் மாவட்டங்களில் இந்த சினை இட்லியை. கர்ப்பிணிப் பெண்களுக்கு, விருந்து உணவாக, செய்து தருவார்கள்.
Comments
சினை இட்லி
சீதாலஷ்மி.. நம்ம அறுசுவையில் பெயர் வித்தியாசமா இருந்தா தானே மவுசு ;) நீங்க இதையே குறிப்பின் தலைப்பா கொடுத்திருக்கலாம். நல்லா இருக்கு குறிப்பு. செய்து பார்க்குறேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சினை இட்லி
என்னடா இது சினை இட்லி எங்க ஊர் பேரா இருக்கேன்னு வந்து பார்த்தேன் :). சினை இட்லிகு பூரணமாக எங்க ஊரில் பொங்கல் பருப்பு, வெல்லம், தேங்காய் சேர்த்து பூரணம் செய்து வைப்பாங்க. கருப்பட்டி துருவியதும் தேங்காய் துருவலும் கலந்து கூட சினை இட்லி செய்வாங்க. ம்ம்ம் மலரும் நினைவுகளை கிளப்பிட்டீங்க சீதாம்மா!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவிசிவா
அட நீங்க சொல்லும் காம்பினேஷன் கூட அருமையா இருக்கே ;) அதையும் ஒருமுறை செய்துருவோம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா, கவிசிவா
அன்பு வனிதா,
வனிதா சொல்லியாச்சுன்னா, நோ அப்பீல்!
நீங்க சொன்ன மாதிரியே பெயரை மாற்றி விட்டேன். நேரம் கிடைக்கிறப்ப செய்து பாருங்க.
அன்பு கவிசிவா,
நீங்க சொல்வது கரெக்ட்தான். பாசிப்பருப்பு பூரணம், கருப்பட்டி பூரணம் இதுவும் வைத்து செய்வாங்க. செம டேஸ்டாக இருக்கும்.
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
சினை இட்லி
குறிப்பு நல்லா இருக்கு சீதாலக்ஷ்மி. சீக்கிரம் ட்ரை பண்றேன்.
- இமா க்றிஸ்
இது புதுவிதமா இருக்கு.டேஸ்டா
இது புதுவிதமா இருக்கு.டேஸ்டா இருக்கும்னு நினைக்குறேன். good tips...
மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***
சினை இட்லி
அன்பு சீதாலஷ்மிமா,
மிகப் புதுமையான அருமையான குறிப்பு. சினை இட்லி இதுவரை கேள்விப்பட்டதில்லை!. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
இமா, ஃபெரோ, சுஸ்ரீ
அன்பு இமா,
உங்க பதிவைப் பார்த்து, ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
செய்து பார்த்து சொல்லுங்க, உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
அன்பு ஃபெரோ,
லேசான தித்திப்புடன் சுவையாக இருக்கும் இந்த இட்லி.
வருகைக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
அன்பு சுஸ்ரீ,
தென் மாவட்டங்களில் செய்யப்படும் சிறப்பு உணவு இது. செய்து பார்த்து சொல்லுங்க.
உங்களுடைய ப்ராக்கலி மசாலாஈபிராக்கலிக்குப் பதிலா காலிஃப்ளவர்) இன்னிக்கு செய்தேன். சூப்பர் டேஸ்ட்!
அந்தக் குறிப்பிலும், திடீர் ரசமலாய் குறிப்பிலும் பின்னூட்டம் கொடுத்திருக்கேன், பாருங்க.
அன்புடன்
சீதாலஷ்மி