உருளை 65

தேதி: March 30, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (12 votes)

 

உருளைக்கிழங்கு - 2
தயிர் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
கார்ன்ஃப்ளார் மாவு - 2 தேக்கரண்டி
புட் கலர் - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - வறுக்க தேவையானது


 

உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமான மெல்லிய சிப்ஸ்களாக சீவி தண்ணீரில் நன்கு அலசிவிட்டு பேப்பரில் ஈரம் போக உலர்த்தி எடுக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, கார்ன்ஃப்ளார், தயிர், கலர் சேர்த்து ஒன்றாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சிப்ஸை போட்டு பொரிக்கவும்.
சுவையான உருளை 65 தயார். தயிர் சாதம், சாம்பார் சாதத்துக்கு ஏற்றது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இளசுகளுக்கு பிடித்த சூப்பர் ரெசிபி. வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மொறு மொறு உருளை 65 சூப்பர். அழகா கட் பண்ணி செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.

ஹாய் ஸ்வர்,

உருளை 65,பேரே பிரமாதமாயிருக்கே!!

உருளைக்கிழங்கை எவ்வளவு அழகா நறுக்கியிருக்கீங்க!!

சிம்பிளாவும்,சூப்பராவும் அசத்தலான குறிப்பு கொடுத்திருக்கீங்க.

பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் தங்கப்பெண்ணே.

அன்புடன்
நித்திலா

ஹாய் ஸ்வர்ணா நல்லா இருக்கு உங்க குறிப்பு.வழ்ழ்துக்கள்.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

அன்பு ஸ்வர்ணா

உருளைக் கிழங்கை நறுக்கியிருக்கும் விதமே மிகவும் அழகாக இருக்கு.

வித்தியாசமான குறிப்பு. நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

சுவா, உருளை அறுபத்தி அஞ்சு கலக்கல் பா. குறிப்பை விட, கட் பண்ணி வச்சிருக்கீங்க பாருங்க அதான் சூப்பரே. ரொம்ப நல்லார்க்கு பா. உருளை ஐட்டம் உடனே அடுப்பில் ஏறிடும். நாளை செய்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள் சுவா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சிம்பிளான அழகான படங்கள், நொடியில் தயாரிக்க, வாண்டுகளுக்கு பிடித்தமான உருளை 65.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

குறிப்பை உடனுக்குடன் வெளியிட்டு உற்சாகப்படுத்திவரும் அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மஞ்சு முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி...:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வினோ வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நித்தி பாராட்டிற்க்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வெண்ணிலா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சீதாம்மா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்கம்மா.

/நறுக்கியிருக்கும் விதமே மிகவும் அழகாக/ மீண்டும் நன்றிங்கம்மா :-)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்ப்ஸ் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா....:)

/கட் பண்ணி வச்சிருக்கீங்க பாருங்க அதான் சூப்பரே./ எல்லோரும் அதையே சொல்றீங்களே எனக்கு சந்தோசம் தாங்கல போங்க :)))))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

செய்வது மிக சுலபம் வாண்டுகளுக்கு பிடித்தமானுதும் கூட :) நன்றி தோழியே.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சிம்பிளான சுவையான குறிப்பு. அழகா கட் பண்ணி அழகா செய்திருக்கீங்க... சூப்பரா இருக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் படம் கிளாசிக். இன்னமும் பார்த்துட்டே இருக்கேன். கலர் மாறாமல் இவ்வளவு அழகா நறுக்கி இருக்கீங்க. அருமை. வாழ்த்துக்கள்.
இங்கே நாங்கள் வாங்கும் எல்லா உருளையும் நறுக்கும் போதே சிவந்து விடும் :(

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உருளை 65 சூப்பர்பா கண்டிப்பா செஞ்சிட்டு சொல்றேன் சீக்கிரமா வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வனி வருகைக்கு மிக்க நன்றிங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லாவண்யா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க.சந்தோசத்துல மிதக்கிறேன் :))

உருளையை சீவினதுமே நீரில் அலசிவிட்டால் கலர் மாறாது ட்ரை பண்ணி பாருங்க.சாதாரணமாவே உருளை சிப்ஸ்க்கு உப்பு தண்ணீரில் அலசி விட்டு செய்தால் கலரும் மாறாது நன்கு மொறு மொறுப்பாகவும் வரும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ரேனு எப்படி இருக்கீங்க நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன் உங்களை சந்தோசம் பா.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உருளை 65 பாக்க ரிப்பன் பக்கோடா மாதிரியே இருக்குபா.. நல்லா சன்னமா சீவினதுனால க்ரிஸ்ப்பியா இருக்கும்னு நினைக்கிறேன். குட்டிஸுக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ் தேங்க்யூ ஸ்வர்;-)

Don't Worry Be Happy.

சுவர்ணா,

உருளையை வெட்டி வைத்திருக்கும் அழகே தனி! குறிப்பை விட‌ அந்த முதல் படத்தைதான் ரொம்ப நேரம் பார்த்திட்டிருந்தேன்... :) வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

ஜெய் வருகைக்கு மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஸ்ரீ வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா....... :-)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப அருமையான டிஷ். இப்போ உருளையும் நிறைய கிடைக்குது. கண்டிப்பா ஒரு நாள் செய்ய சொல்லுது உங்க விளக்க குறிப்பு .
வாழ்த்துக்கள.

உருளை 65க்கு மார்க் 100. கட்டிங் ரகசியம் கொஞ்சம் சொல்லுங்கபா!!

வாழ்த்துக்கள்!!

ஸ்வர்ணா,
உருளையில் புது ரெசிப்பி.அழகான படங்கள்.விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு.செய்து பார்த்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள் ஸ்வர்ணா.

சுபா மிக்க நன்றிங்க உங்களுக்குதான் எவ்வளோ பெரிய மனசு 100 மார்க் போட்டுருக்கீங்க ரொம்ப சந்தோசம் :)
ரெக்கை கட்டி பறக்குதய்யா சுவாவோட மனசு :))))

தாமதமான நன்றிக்கு வருந்துகிறேன்.....

கட்டிங்க ரகசியம் ஒண்ணுமே இல்லைங்க நமக்கு எப்படி வேனுமோ அதுபோல கட் பன்னிட்டு சீவ வேண்டியதுதான்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு மிக்க நன்றிப்பா,செய்துட்டு சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Unga urulai 65 senju kuduthen pa en hus ku. Romba nallaa irundhadhu. Unga alavukku azhaga cut panna varala. Vazhthukkal swarna...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஸ்வர் உருளை 65 செய்தேன்.நல்லா இருந்துச்சு,க்ரிஸ்பியா டேஸ்டா இருந்தது.குறிப்புக்கு நன்றி.

Kalai

மிகவும் அருமை உருளை65 பார்த்தால சாப்பிடனும் போல இருக்கு ரொம்ப நன்றி