பட்டிமன்றம் 62 : உறவுமுறைகளில் சிறந்தது எது ??

அன்பு பட்டிமன்ற மக்களுக்கு என் முதல் வணக்கம். பட்டியை துவங்க வேண்டிய கட்டாயம் இன்று எனக்கு... ஏன்னா எதுக்காகவும் ஒரு வாரம் கூட நான் நடத்தும் பட்டிமன்றம் நிக்க கூடாதுன்றதுல நான் ரொம்பவே கவனமா இருக்கேன்.

”உறவுமுறைகளிலேயே சிறந்தது பெற்றோர்? கணவர்/மனைவி? நண்பர்கள்?”

தலைப்பு நம்ம தோழி சுகி தந்தது. :) ரொம்ப நன்றி சுகி... பெண்களுக்கு பிடிச்ச தலைப்பு தான் ;)

விளக்கம் கொஞ்சம் கொடுத்துடலாம் தானே...

நமக்கு நம் பெற்றோடு உள்ள உறவு முறை சிறந்ததா?? அதாவது பெற்றோர் பிள்ளை உறவுமுறை.

அல்லது

நமக்கு நம் வாழ்க்கை துணையோடு உள்ள உறவுமுறை சிறந்ததா?? அதாவது கணவன் மனைவி உறவு முறை.

அல்லது

நட்பு எனும் உறவு முறை சிறந்ததா??

இதை வாதிடும் போது எது உண்மையான உறவு, எது உண்மையான அன்பு, எந்த உறவுமுறை சிறந்தது, ஏன் என்று வாதிட வேண்டும். புரிஞ்சுடுச்சு தானே? ;) ஏன் தாமதம்... வாங்க... வாதங்களை முன் வைங்க. இம்முறை 3 அணி.

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

அன்பான அறுசுவை பட்டிமன்ற சிங்கம், புலி மக்களே... வாங்க... வந்து வாதிட்டு பட்டய கிளப்புங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டியில் இது என்னோட முதல் பதிவு, தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடங்கும் உறவுமுறை பெற்றோர், பிள்ளை உறவுகளே என்று என் வாதத்தை தொடங்குகிறேன்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

வருக வருக... பயப்படாம வாங்க, பிழைகள் பற்றிய கவலை வேண்டாம்... வாதங்களோடு வாங்க. நாங்க இருக்கோம்ல... :) வாழ்த்துக்கள் பல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னை கேட்டால் நண்பர்கள் என்று தன் சொல்வேன். ஏனென்றால் நல்ல நண்பர்கள் கிடைகபது இறைவனின் ஆசிர்வாதம் என்று சொல்வர். அவர்கள் பெரிதாக எடையும் எதிர்ப்பாக மாட்டார்கள் நம் சந்தோசத்தை மட்டுமே நினைப்பர். நன் சொல்வது நல்ல நண்பர்களை .அப்படி அமைந்துவிட்டால் வுலகத்தில் எதனை கஷ்டம் வண்டலும் நமக்க உண்மையன் உறவு ஒன்று உளடை நினைத்து நம்பிக்கை வரும் சொதகரர்கள் மாதிரி விட்டு விட்டு ஓடமடர்கள்

வாங்க வாங்க... நண்பர்கள் அணி பக்கமா நீங்க. வரும்போது குட்டி வாதத்தோடு வந்திருக்கீங்க, மிக்க மகிழ்ச்சி. தொடருங்க உங்க வாதத்தை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பான நடுவருக்கு, வாழ்த்துக்களும், வணக்கங்களும். பட்டியில் நான் பேச விரும்பும் தலைப்பு உறவுமுறைகளில் உயர்ந்த உன்னதமான உறவு கணவன் - மனைவி உறவே.

பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இருக்கும் உறவு ரத்தபந்தத்தில் வந்த தொப்புள்கொடி உறவு. அதனால் அதில் பாசம் செலுத்துவது ஆச்சர்யமான விஷயம் இல்லை.

நட்பு பெரும்பாலும் இல்லாவிட்டாலும் சில எதிர்பார்ப்போடு வருவது. எதிர்பார்த்து வரும் காரியம் நடக்காவிட்டால் அதுவும் நடு வழியில் போய்விடும்.

இதில் ரத்த சம்பந்தமும் இல்லாமல், எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் காலம் முழுமைக்கும் துணை வருவது கணவன் - மனைவி என்னும் உறவே.

இன்னும் வாதங்களுடன் வருவேன் !!!

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பட்டி தலைவிக்கு என் வணக்கங்கள் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் அருமையான தலைப்பு. எந்த உறவாயினும் கணவன் மனைவி போல் வராது. ஈடு செய்ய முடியாது. என் வாதங்களோடு பிறகு வருகிறேன்.

நன்றி வனி! யாரும் வரலேன்னா நீங்க கை கொடுப்பீங்கன்னு எனக்குத் தெரியுமே! பட்டியை அப்படி கை விட்டுடுவோமா என்ன :)

நடுவரே நானும் வந்துட்டேன் வாதாட! கணவன் மனைவி உறவே சிறந்தது அப்படீங்கறதுல உங்களுக்கு ஏன் இம்பூட்டு சந்தேகம். எங்கோ பிறந்து வளர்ந்த இருவர் இணைந்து உருவாகும் குடும்ப உறவுதானே அத்தனை உறவுகளுக்குமே அடித்தளமான உறவு. அந்த கணவன் மனைவி உறவுக்குத்தான் எங்கள் ஆதரவு. விரிவான வாதங்களுடன் விரைவில் வருகிறேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பட்டித் தலைவிக்கு என் வணக்கங்களும், வாழ்த்துக்களும்!!
என்றென்றும் நட்பென்னும் உறவு முறையே சிறந்தது.
பெற்றோர் பிள்ளை, கணவன் மனைவி உறவுகளின் வாழ்க்கை சக்கரத்தின் அச்சாணியே நண்பர்கள்தான். அந்த வண்டி ஒழுங்காய் சீராய் ஓட வேண்டுமானால் நட்பென்னும் உறவுமுறை தேவை.
நம் மேல் திணிக்கப்பட்ட உறவுகளால், நம் இயல்பை மறைத்து, தனித்தன்மையை விட்டுக்கொடுத்து நாம் நாமாக இல்லாமல் வாழ வேண்டியுள்ளது.
நம்முடைய இழப்புகளையெல்லாம் மீட்டெடுத்து வந்து பூச்செண்டாக்கி தந்து வாழ்த்து சொல்வது நட்புதான்.
ரத்த பந்தங்களுக்குள் நடக்கும் புரிதல் ஒன்றும் உலக அதிசயமல்ல. அறியாத வயதில் ஒரு பென்சிலில் ஆரம்பமான நட்பு இன்றும் செழுமையாய் வளர்ந்து நிற்கிறதே அதுதான் அதிசயம். கேட்கும் போதே மயிர்கூச்செரிய வைக்கும் அதிசயம்.
இந்த அதிசயம்தான் சிறந்தது என்று நட்புக்காக என் வாதங்களை தொடர்ந்து வைக்கிறேன்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

கணவன் மனைவி உறவே சிறந்தது அணியா... வாங்க. நீங்களும் வரும்போதே குட்டியான வாதத்தோட வந்திருக்கீங்க. வாங்க... இன்னும் வாதங்களோட. நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்