hair straight

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு hair straight செய்துக்கொள்ள ஆசையாக உள்ளது. ஒரு ஃபன்க்ஷனுக்காக ஒரெ ஒரு முறை செய்து பார்க்கலாமே என்று நினைக்கிறேன்.தொடர்ச்சியாக இல்லாமல் ஒரு முறை மட்டும் செய்வதால் ஏதும் பிரச்சனை வருமா? ஒரு முறைக்கு என்ன செலவாகும்.. எவ்வளவு நாள் நீடிக்கும்..சில HAIR STRAIGHT செய்தவர்களின் முடி வறண்டு போய் உள்ளதே அப்படி ஆகாமல் ஷைனிங்காக இருக்க என்ன செய்ய வேண்டும்..தெரிந்தவர்கள் சொல்லித்தாருங்கள் தோழிகளே...

ஹலோ ஃப்ரெண்ட்ஸ் ப்ளீஸ் யாராவது hair straight செய்தவங்க இல்ல அதைப்பற்றி தெரிந்தவங்க இருக்கீங்களா....

அன்புடன்,
zaina.

haaiiiiiiii...............

அன்புடன்,
zaina.

zaina ஃபங்ஷனுக்கு மட்டும்னா டெம்ப்ரரி ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் பண்ணலாம். உங்கள் முடி ரொம்ப சுருண்டு இல்லாமல் அலையலையான முடி என்றால் இரண்டு நாள்கள் வரை ஸ்ட்ரெய்ட்டாக இருக்கும். முடியை ஹேர் ட்ரையர் மற்றும் அயர்னிங் வைத்து நேராக்குவார்கள். சுருண்ட முடின்னா டெம்ப்ரரி ஸ்ட்ரெய்ட்னிங் ரொம்ப நேரம் நிற்காது.

மற்றபடி பெர்மனன்ட் ஸ்ட்ரெய்ட்னிங் செய்தால் அப்படியே இருக்கும். தொடர்ச்சியாக வளரும் முடி பழைய மாதிரிதான் வரும். அதனால் கொஞ்ச நாளில் பார்த்தீங்கன்னா தலையை ஒட்டிய முடி வளைந்தும் ஏற்கெனவே ஸ்ட்ரெய்ட்டன் செய்த முடி நேராகவும் நிற்கும். இன்னொன்னு பெர்மனன்ட் ஸ்ட்ரெய்ட்னிங் பண்ணின பினாடி முடி ரொம்பவே கொட்டும். பார்லரில் சொல்ற மாதிரி ஹேர் டானிக் சீரம் எல்லாமே உபயோகித்து முடியை பராமரித்தாலும் முடி கொட்டுவது இருக்கத்தான் செய்யுது.

யோசிச்சு செய்யுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி கவிசிவா எனக்கு ரொம்ப சுருளான முடி கிடயாது அலையலையான முடிதான் என் கனவரின் ஆசைக்காகதான் ஒரு முறை செய்ய நினைக்கிறேன் உங்க பதில் எனக்கு நல்லா புரிகிர மாதிரி தெளிவா சொல்லி இருக்கீங்க மீண்டும் மீண்டும் நன்றிகள்...

அன்புடன்,
zaina.

hi zaina naan puthu member. sorry yennala vungalukku sariyana thevaiyana nerathil pathil thara mudiyavillai. hair straightning seithal mudi kottum. anaal mudi kottuvathi kandippaka nirutha mudiyum.

hi ,
i also tempted to do the hair straight. and i did it. but now i regert for that. heavy hair loss. after four months the grown hair makes u look terrible. so every morning i am using the temp. hair straighter to straight them. after a while the straighted hair will loss itz shine and looks so frizzy. if u do a perm.hair staright then u have to do it continuesly atleast to keep up the good look. but itz so expensive. so from my point of view u can go for temp. so u ll get the look and also good hair. i miss my old hair......

Friends, hair loss can be avoided due to hair straightening. Before that one must know what type and the nature of their hair. Can ask hair experts to know that. Meanwhile temporary hair straightening will definitely cause more hair damage, because hair cannot sustain more heat and doing it daily to cover the original growing hair is not advisable. Rather hair redo can be done to maintain straight hair or its better not to do hair straightening.

மேலும் சில பதிவுகள்