8 மாத என் மகனுக்கு ஒரு வாரமாக குமட்டல் வாந்தி ஜுரம்

8 மாத என் மகனுக்கு ஒரு வாரமாக குமட்டல் வாந்தி ஜுரம் இருந்தது, இப்போது ஜுரம் இல்லை, அவப்போது குமட்டல் இருக்கிறது, வாந்தி ஒருதடவையாவது வந்து விடுகிறது. என்ன காரணம்?, மருத்துவர்கள் ஒன்னும் இல்லை நார்மல் தான்னு சொல்லுகிறார்கள். எதனால் என்று தெரியவில்லை, இரத்தம் சிறுநீர் பரிசோதனை முடிந்து விட்டது, எதுவும் இல்லை என்கிறார்கள். வைரஸ் தொற்று என்கிறார்கள். 9 நாள் ஆகியும் ஜுரம் மட்டுமே நின்று இருக்கிறது. வேறு எதாவது கோளாற?, என்ன செய்வது என்று யாரவது விளக்கமாக கூறுங்கள், மருத்துவர்கள் எல்லோரும் பயம் இல்லை நார்மல் தான்னு சொல்லுறாங்க, பயமாக உள்ளது. 5 நாள் மருத்துவமனையில் வைத்து ட்ரிப்ஸ் எல்லாம் ஏத்திட்டோம். இன்னும் ஏதும் முன்னேற்றம் இல்லை. ஜுரம் மட்டும் இல்லை. மற்ற எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. இப்போது இருமல் வருகிறது வந்தவுடன் விக்கல் வந்து விடுகிறது எல்லாத்துக்கும் காரணம் என்னவாக இருக்கும். வேறு எங்கேயாவது ஸ்கேன் பண்ணலாமா? இல்லை சரியாகிவிடுமா? குழப்பத்தோடும் பயத்தோடும் இருக்கிறோம் ? யாரவது நல்ல பதிலாக தாருங்கள் . தற்போது திருச்சியில் உள்ளோம் - சென்னை அல்லது திருச்சியில் நல்ல பார்க்ககூடிய எல்லா வசதியும் கூடிய மருத்துவமனை எதாவது இருக்கா?

ஆவலுடன்
பாபு நடேசன்

பாபு அவர்களே,

உங்கள் குழந்தை யூரினில் கை வைத்துவிட்டு அதே கையை வாயில் வைப்பானா? அப்படி இருந்தால் இன்பெக்ஷனாகி இதுபோல வாந்தி,சளி,ஜுரம் இருக்கும். என் மகனுக்கும் ஏறக்குறையே இதே மாதத்தில் தான் இது போல பிரச்சனை வந்தது. நாங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வழக்கமாக பார்க்கும் இடத்தில் காட்டினோம். அவர்களும் உங்களுக்கு சொன்னது போலவே எந்த பிரச்சனையும் இல்லை என்றே சொன்னார்கள். ஜுரத்திற்கு மட்டும் சிரப் தந்தார்கள். குறையாதபடியால் அட்மிட் செய்து பார்தோம். அப்போதும் சரியான பலன் அளிக்காததால், பிரசவம் பார்த்த மேத்தா ஆஸ்பிட்டலுக்கு கொண்டு சென்று காட்டினோம். அங்கே எல்லா டெஸ்டையும் எடுத்து பார்த்து யூரினில் வந்த இன்பெக்ஷன் தந்த விளைவுகள் தான் இத்தனையும் என்று சொல்லி மூன்று நாட்கள் ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்து வைத்தியம் பார்த்தார்கள். பிறகு தான் குணமானான். நீங்கள் பயப்படாதீர்கள். ஒருவயதை நெருங்கும் போது ஏறக்குறைய அனைத்து குழந்தைகளுமே இதுபோல எதாவது நோயால் அவதிப்படுவது வாடிக்கை தான். உங்களால் சென்னையில் வைத்தியம் பார்க்க முடியுமென்றால் சேத்பட் மேத்தாஸ் ஆஸ்பிட்டலில் சென்று பாருங்கள். குழந்தைங்களுக்கு மிகவும் கைராசியான ஹாஸ்பிட்டல் அது. நல்லமுறையிலும் மருத்துவம் பார்ப்பார்கள். மற்ற மருத்துவமனைகளில் காணாத தீர்வு நிச்சயம் இங்கு உங்களுக்கு கிடைக்கும். தாமதிக்காமல் சென்று வைத்தியம் பாருங்கள். சீக்கிரமே குணமாகும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்