கத்தாரில் உள்ள தோழிகள்

என் கணவருக்கு கத்தாரில் வேலை கிடைத்துள்ளது. மே 5 கிளம்புகிறார். எனக்கும் என் மகளுக்கும் விசா கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும்? கத்தாரில் உள்ள தோழிகள் தயவு செய்து விபரங்கள் சொல்லவும்!!!!

நான் இங்கேதான் இருக்கேன்..விசா கிடைக்க இங்கு அதிக நாட்கள் எடுக்காது...
மிகவும் அமைதியான நாடு..வாங்க வெல்கம்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பதிலுக்கு நன்றி. இன்னும் கொஞ்சம் விபரம் வேண்டும். எத்தனை நாட்கள், என்ன என்ன சான்றுகள் தேவைபடும்? சொல்ல முடியுமா? ப்ளீஸ்!!!!!

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

தோழிகளே! அக்காமார்களே! தங்கச்சிமார்களே! யாராவது டீடெய்ல்ஸ் சொல்லுங்கப்பா! யாருமே இல்லியா கத்தார்ல?

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

அன்பு நாகா,
நானும் இங்கதான் இருக்கிறேன். விசிட் விசா எடுக்க அதிகபட்சம் ஒரு வாரம் ஆகும். பெர்மனன்ட் விசா எடுக்க தேவைப்படும் சான்றிதழ்கள் - கணவரின் கம்பெனி NOC , சம்பள சான்றிதழ் , குறைந்தபட்சம் 3மாதம் வங்கி சம்பள statement, திருமண சான்றிதழ் (அட்டெஸ்ட் செய்யப்பட்டது ), மற்றும் டிகிரி (சான்றிதழ் (அட்டெஸ்ட் செய்யப்பட்டது ), குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.

வரும்போது சொல்லுங்கப்பா . உதவி செய்ய ரெடியா இருக்கோம்.

மேலும் சில பதிவுகள்