Side dish for Idly and Dosa.....

Hollo admin,
I just found this site a month before, previously I use to learn cooking from some other websites in English but this is very good…verities of items….written in Tamil…..adding new recopies everyday.. with pictures…amazing.
• I have some suggestions for u…if u wish u can take my idea too…..please
I have seen in some website that we can search items by clicking……
1. veg/non veg
2. what type of dish is it? (breakfast/ dinner)
3 which is the major ingredients… ( rice/ maida/ wheat/ potato like that)
4. ect…
We can do like this it will be useful for browsers

• And u can add some more topics in the front page like idly& dosa , side dish for idly and dosa ( u have a topic which related to this “ sitrundi” I accept but we would like to separate idly and dosa and their side dishes seperatly with more verities.
• And u can add side dish for chappathi and poori , paratha too.

I really want to learn side dish for Tiffin items.

( I am really sorry to type in English)

Rev.

முதலில் உங்களின் பாராட்டுகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இரண்டு ஆலோசனைகளை முன் வைத்துள்ளீர்கள். ஒன்று, தேடுதல் வசதியை இன்னும் மேம்படுத்துதல். மற்றொன்று, வகைப்படுத்தியுள்ளவற்றை இன்னும் சற்று அதிகரித்தல். மிகவும் பயனுள்ள ஆலோசனைகள். தேடுதல் பகுதியை மேம்படுத்தும் திட்டம் இருக்கின்றது. நீங்கள் குறிப்பிட்டு உள்ளது போல், முக்கிய உணவுப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் குறிப்புகளைப் பெறுவதற்கு வசதி வைக்கவேண்டும். அதாவது, தங்களிடம் இருக்கும் பொருளை வைத்து என்ன உணவு செய்யலாம் என வருகையாளர்கள் அறிந்து கொள்வதற்கான வசதி செய்து தரப்படவேண்டும். சற்று தாமதமானாலும் இந்த வசதிகள் நிச்சயம் அறுசுவையில் கொண்டு வரப்படும்.

அடுத்த ஆலோசனையான பிரிவுகளை அதிகரித்தல் என்பது செய்வதற்கு எளிதான விசயம். அதை செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை விளக்க விரும்புகின்றேன். அறுசுவை தளத்தின் சிறப்பம்சமாக பலரும் சொல்வது குறிப்புகளை வகைப்படுத்தி இருப்பதுதான். இதற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். பார்வையிடுபவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை ஒன்று அல்லது இரண்டு "கிளிக்" லேயே கிடைக்கப் பெற்றுவிடுமாறு செய்து இருக்கின்றேன். அதனால்தான் வலப்பக்கம் Side Navigation bar மிக நீளமாக இருக்கின்றது. ஆனால், ஒரு நல்லத் தளத்தில் navigation bars மிகவும் நீளமாக இருத்தல் கூடாது. நீளமாக இருத்தல் தவறு கிடையாது. பார்ப்பவர்களை சோதிக்கும். கடைசி வரை scroll செய்து பார்க்கவேண்டும்.

ஏற்கனவே அல்வா, இட்லி, கொழுக்கட்டை, பாயசம், சப்பாத்தி .. இப்படி பல உபபிரிவுகள் வைத்து, navigation பகுதி மிகவும் நீண்டு போனதால் அவற்றை நீக்கி மற்ற பிரிவுகளுடன் இணைத்துவிட்டேன். இன்னும் பல மாநில உணவுப் பிரிவுகளும், சைனீஸ், இலங்கை இப்படி பல நாட்டு உணவுகளுக்கானப் பிரிவுகளும் சேர்க்கப்பட வேண்டி உள்ளது. ஆனால், நீளம்தான் பயமுறுத்துகின்றது.

இதற்கு ஏதேனும் தீர்வு கண்டு, விரைவில் இன்னும் பலப் பிரிவுகள் சேர்க்கப்படும். அப்போது நீங்கள் கேட்டுள்ள பிரிவுகளையும் சேர்க்க முயற்சிக்கின்றேன். மற்றொரு விசயம், ஒரு தனிப்பிரிவு கொடுக்க வேண்டும் எனில் அந்தப் பிரிவில் குறைந்தது 15, 20 குறிப்புகள் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு பக்கத்தை கொஞ்சமாவது நிரப்பும். நீங்கள் கேட்டுள்ள இட்லி, தோசையில் அத்தனை வகைகள் கிடைக்குமா என்பது சந்தேகமே. தற்போது அல்வா, பாயசம் போன்றவற்றில் நிறைய வகைகள் உள்ளன. அவை விரைவில் இனிப்பு பக்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனிப்பக்கங்களாக தொகுக்கப்படும்.

உங்களுக்கு தேவையான பக்க உணவுகளை (side dishes) தாங்கள் இப்போதும் எளிமையாக தேடிப் பெற முடியும் என்றே நம்புகின்றேன். பக்க உணவுகள் என்று ஏற்கனவே ஒரு தனிப்பிரிவு உள்ளது. ஆனால், நீங்கள் கேட்டுள்ளபடி, இட்லிக்கான பக்க உணவுகள், தோசைக்கான பக்க உணவுகள் என்று வகை பிரித்தால், navigation bar மிகவும் நீளமாகிவிடும். அதுமட்டுமல்ல, ஒரே குறிப்புகள் பல பிரிவுகளில் மீண்டும் மீண்டும் வரும். உதாரணமாக, இட்லிக்கான பக்க உணவு என்று எவற்றையெல்லாம் நீங்கள் குறிப்பிடுவீர்கள்? இட்லிக்கு மட்டும் என்று ஏதேனும் இருந்தால் குறிப்பிடலாம். அப்படி ஏதேனும் இருக்கின்றதா? நாம் இட்லிக்கு பக்க உணவு என்று சொல்லக் கூடிய அனைத்தையும், தோசைக்கு பக்க உணவாக எடுத்துக் கொள்ளலாம். சாம்பார், சட்னி போன்றவற்றை பொங்கலுக்கும் தொட்டுக் கொள்ளலாம். வடைக்கும் தொட்டுக் கொள்ளலாம். எனவே, இட்லிக்கான பக்க உணவு, தோசைக்கான பக்க உணவு, பொங்கலுக்கான பக்க உணவு என்று வகைப்படுத்தி அவை எல்லாவற்றிலும் மீண்டும் மீண்டும் சட்னி, சாம்பாரைக் கொடுப்பதற்கு பதில் சட்னி, சாம்பார் என்று தனிவகைப் படுத்தி அவற்றில் கொடுத்தால் மிகவும் எளிதாகிவிடும். இதை கருத்தில் கொண்டுதான் வகைப்படுத்தியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டு உள்ளது போல், இன்னும் சிலப் பிரிவுகள் கொண்டு வந்தால் பார்வையாளர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். வழிமுறைகளை ஆராய்ந்து விரைவில் கொண்டு வர முயற்சிக்கின்றேன்.

மீண்டும் உங்களது பயனுள்ள ஆலோசனைகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றேன். தொடர்ந்து உங்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன்.

hi rev

i can give u some side dishes for chapati, parota and upma.

i feel if i can submit my recipes in common, so that others can also view it and might be useful to them too :-)

ya sure....expecting ur recipies soon

yes....i can understand ur point. its true.

மேலும் சில பதிவுகள்