தேங்காய் லட்டு

தேதி: April 6, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (10 votes)

 

கன்டென்ஸ்டு மில்க் - ஒரு கப்
டெஸிகேட்டட் கோக்கனட் - 1 1/2 கப் + 1/2 கப்
ஏலக்காய் தூள்
நட்ஸ் - விருப்பத்துக்கு


 

கன்டென்ஸ்டு மில்கை ஒரு நாண்-ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
இதில் 1 1/2 கப் அளவுள்ள தேங்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.
கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, மீதம் உள்ள அரை கப் துருவலை எடுத்து வைக்கவும்.
கலவை சற்று சூடு குறைந்ததும் சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.
நட்ஸ் கொண்டு அலங்கரிக்கவும். சுவையான சுலபமான தேங்காய் லட்டு தயார்.

தேங்காய் லட்டு பல வகை உண்டு. கன்டென்ஸ்டு மில்குக்கு பதில் பால் சேர்த்தும் செய்யலாம். அப்படி செய்தால் சர்க்கரை சேர்க்க வேண்டும். இதில் இன்னும் சுவையும், ஆரோக்கியமும் சேர்க்க விரும்பினால் தேங்காய் துருவல் சேர்க்கும் போது முந்திரி, பாதாம் போன்றவை பொடித்து சேர்த்து கிளறலாம். கலர் சேர்க்க விரும்பினாலும் சேர்க்கலாம். மேலே பிரட்ட டெஸிகேட்டட் கோக்கனட் சேர்ப்பதால் சில நேரம் மேல் பகுதி ட்ரையாக இருப்பது போல் இருக்கலாம். அதை விரும்பாவிட்டால் ஃப்ரெஷ் தேங்காய் துருவல் சேர்க்கலாம். ஆனால் அதை ஒரே நாளில் செலவு செய்துவிட வேண்டும். பிரட்ட பயன்படுத்தும் துருவலோடு நட்ஸ் வகைகள் பொடித்து சேர்த்தால் பார்க்கவும் அழகாக இருக்கும், சுவையாகவும் இருக்கும். கன்டென்ஸ்டு மில்க் சேர்ப்பதால் கலவை தயாரானதும் சூடான பாத்திரத்தை விட்டு எடுத்து விடவும், இல்லையெனில் பாத்திரத்தில் படும் கலவை சிவந்து போகும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கன்டென்ஸ்டு மில்க் டேஸ்ட் சூப்பர் இருக்கும், அதுலையே லட்டுடுடுடுடுடுடு....
கண்டிப்பா சீக்கரமே பண்ணிடறேன்...தேங்காய் துருவல் போடற வரைக்கும் கன்டென்ஸ்டு மில்க் சாப்பிடாம இருந்தா சரி தான்... ரவாலட்டு ன்னு நினைச்சேன்... சூப்பர் வனி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனி அருமையான, எளிமையான குறிப்பு. பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு.எப்படிங்க இப்படி எல்லாம்? கலக்குறீங்க... எனக்கு ஒரு Parcel அனுப்புங்க.Wish u all the Best...

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. சுண்டி இழுத்து விட்டது.. பார்த்ததுமே எப்போடா இதை செய்து சாப்பிடுவோம்னு தோண ஆரம்பித்து விட்டது.. சூப்பர் வாழ்த்துக்கள்.. :)

அன்பு வனிதா,

அழகான லட்டு! பாத்துகிட்டே இருக்கறதா, அப்படியே சாப்பிடறதா!

லட்டு அழகில் மயங்கிட்டேன்!

அன்புடன்

சீதாலஷ்மி

சாதாரண தேங்காய் லட்டே சுவை அள்ளும். இன்னும் மில்க்மெய்ட் சேர்த்தால் கேட்கவே வேண்டாம். சுவையோ சுவை தான். செய்முறையும்,படங்களும், அளித்த விதமும் சூப்பர். வாழ்த்துக்கள் வனிதா !!

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

சுகி... மிக்க நன்றி. //கன்டென்ஸ்டு மில்க் டேஸ்ட் சூப்பர் இருக்கும், அதுலையே லட்டுடுடுடுடுடுடு....// - மெயின் மேட்டர் தேங்காயை விட்டுடீங்களே. ;) //ரவாலட்டு ன்னு நினைச்சேன்// - ஓட்டாம விடுறதில்லைன்னு முடிவா இருக்கீங்க :) நடக்கட்டும் நடக்கட்டும்.

வெண்ணிலா... மிக்க நன்றி. இதெல்லாம் பார்ட்டீஸ்கு குட்டீஸ் வந்தா செய்ய கூடியது. பார்சல் அனுப்பிடுவோம் இப்பவே... :)

சாந்தினி... //சுண்டி இழுத்து விட்டது// - இந்த பக்கம் வந்த ரகசியம் இது தானோ!!! ;) செய்துட்டு எப்படி வந்ததுன்னு அவசியம் சொல்லுங்க. மிக்க நன்றி.

சீதாலஷ்மி... நான் செய்து கொண்டு வந்து தரேன்... மெதுவா முடிவு பண்ணலாம், பார்த்துட்டு இருக்குறதா, சாப்பிடுறதான்னு ;) மிக்க நன்றி.

கல்பனா... உண்மையில் எனக்கு கண்டன்ஸ்டு மில்க் சேர்ப்பதை விட பால் சேர்க்கும் முறை தான் ரொம்ப விருப்பம். இதை விட அது ரொம்ப சாஃப்ட். இது சுவை தூக்கலா இருக்கும்... காரணம் கண்டன்ஸ்டு மில்க் தான். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல்ல வாழ்த்துக்கள் :))) லட்டு பிடிச்ச விதமும் படம் பிடிச்ச விதமும் சரி அழகு தான்!!! உருண்டு அப்படியே என் கைல விழாதானு இருக்கு வனிக்கா.எப்படி நிக்க வச்சிங்க??ஸேப் அழகா இருக்கு...டெஸிகேட்டட் கோக்கனட் appadina kaa

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

Pakupotha thagai laddu sapitanumpola iruku.vani thagai,palum sarthu urtum pathathuku correcta varuma.nonstickthan use pananuma.clear panuga.

Be simple be sample

hi vani
muthalil lattuku oru (O) potaren, next ungalukku oru double (OO) nga. super lattu, picturesum super.solli paratta vartheye illinga. athu than (O) potuten, congrats vani.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வனி இந்த தேங்காய் லட்டு சூப்பரா இருக்கு இந்த தேங்காய் department ஸ்டோர் ல கிடைக்குமா ? அதுவும் கண்டென்ஸ் மில்க் சேர்த்து பண்ணி இருக்கிங்க சூப்பரா இருக்கும் அப்படியே இங்கே ஒரு பார்சல் அனுப்பிருங்க இதை செய்து சாப்பிடுற அளவுக்கு பொறுமை இல்லை இப்பவே சாப்பிட ஆசையா இருக்கு நன்றி வனி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஆஹா....ஓஹோ..... சுவையோ சுவை. படத்தை பாத்து மட்டும் சொல்லங்க செய்து சாப்பிட்டுகிட்டே பதிவு போடுறேன். அனைத்து பொருளும் வீட்டில் இருந்தது, செய்து சாப்பிட்டாச்சு, விருப்ப பட்டியலிலும் சேத்தாச்சு. மிகவும் நன்றி.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

வாவ்! அழகா இருக்கு லட்டு. யமி ரெசிபி வனிதா.

‍- இமா க்றிஸ்

தேங்காய் லட்டு சூப்பர் ரெசிபி. எளிமையான செய்முறையாகவும் இருக்கிறது.

வாழ்த்துக்கள்!!

லட்டு சூப்பரோ சூப்பர்.. என்கிட்டே குடுங்க அப்படியே சாப்பிட்டு விடுவேன். ரொம்ப ரொம்ப பிடித்த பலகாரம்.. சீக்கிரமே செய்து பார்க்கிறேன். நன்றி வனி..

"எல்லாம் நன்மைக்கே"

விமல கீதா... மிக்க நன்றி. //எப்படி நிக்க வச்சிங்க// - புரியல ;( தட்டுல நல்லா உட்கார்ந்து தானே இருக்கு :) desicated coconut என்பது தேங்காய் துருவலாக காய வைத்து பொடி போல ஆக்குவது. உலர்ந்த தேங்காய் துருவல்னு சொல்லலாம்.

ரேவதி... கரக்ட்டா உருட்டும் பதம் வரும்... பயம் வேண்டாம்... மில்க் அதிகமா இருந்தாலும் கூடுதல் நேரம் எடுக்குமே தவிற திரண்டு வராம போகாது. நான்-ஸ்டிக் இருந்தா பெட்டர். இல்லன்னா எதாவது அடி கனமான பாத்திரம் பயன்படுத்துங்க. மிக்க நன்றி.

சுமி... ரொம்ப ரொம்ப நன்றி சுமி. :) சாப்பிட்டும் ஒரு ஓ போட்டுடுங்க.

தனா... பார்சல் அனுப்பிடுவோம். டிபார்ட்மண்டல் ஸ்டோர்ல தான் நான் வாங்கினேன். கண்டிப்பா கிடைக்கும். மிக்க நன்றி. :)

அனு... அதுக்குள்ள செய்தே சாப்பிட்டச்சா?? ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. மிக்க நன்றி அனு. :)

இமா... யம்மின்னு பார்த்து சொன்னா ஒத்துக்க மாட்டேன்... சாப்பிட்டு சொல்லனும் :) மிக்க நன்றி இமா.

சுபா... தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்ப்பது மகிழ்ச்சி. மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க :)

பாக்கியா... மிக்க நன்றி. கண்டிப்பா தட்டோட கொடுத்துடுறேன். சீக்கிரம் செய்துட்டு சீக்கிரம் பதிவு போடுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்க ரொம்ப நல்லாருக்கு வனிதா

லட்டு சூப்பர் கடைசி படம் செம அழகு.......வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆஹா... தேங்காய் லட்டு சிம்ப்ளி சூப்பர்! எளிமையான செய்முறை, அழகான‌ ப்ரசண்டேஷன். அந்த கடைசிப்படம், சான்ஸே இல்லை, கொள்ளை அழகு!! :) வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

வனிதா
தேங்காய் லட்டு ஒரே சைஸ் மற்றும் ஷேப்பில் ரொம்ப அழகா செய்து இருக்கீங்க.ஃபோட்டோஸும் சூப்பரா வந்திருக்கு.கண்டிப்பா செய்து பார்த்து பதிவிடுறேன்.வாழ்த்துக்கள்.

எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். செய்து முடித்த லட்டுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டுமா? என் தோழியின் வளைகாப்பிற்கு செய்யலாம் என்று உள்ளேன். ஒரு கப் கன்டென்ஸ்டு மில்க் /16oz எத்தனை
தேங்காய் லட்டு வரும்? தாங்கள் பிடித்த உருண்டை அளவில்

சுதா... மிக்க நன்றி :)

சுவர்ணா... மிக்க நன்றி :)

சுஸ்ரீ... மிக்க நன்றி. செய்து பாருங்க :)

ஹர்ஷா... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க :)

வித்யா... ஃப்ரிட்ஜில் வைத்தால் சாஃப்ட்னஸ் கொஞ்சம் போயிடும். ஆனா வைத்தால் 1 வாரம் வரை தனக்கும். இல்லை என்றால் 2 நாட்களில் முடித்து விடுவது நல்லது. நான் செய்தது 12 கிட்ட வந்தது. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

// எப்படி நிக்க வச்சிங்க??// எனக்கும் இதே கேள்வி தான்.....

//தட்டுல நல்லா உட்கார்ந்து தானே இருக்கு :)// அதுவும் சரி....ஆனாலும் எப்படி உங்களுக்காக இப்படி அழகாக உட்கார்ந்திர்க்குன்னு தான் கேள்வி. அதிலும் அந்த பாதாம் ஸ்லைஸ் வெச்சி லக்ஷணமா இருக்கு.

அந்த கடைசி படம் கொள்ளை அழகு.....சீதாலக்ஷ்மி சொன்ன மாதிரி பார்த்துக்கிட்டே இருக்க சொல்லுது! இந்த வேறியெஷன்ஸ் சொல்லியிருக்கீங்க பாருங்க அங்க நிக்குறீங்க. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//// எப்படி நிக்க வச்சிங்க??// எனக்கும் இதே கேள்வி தான்.....// - எனக்கு புரியலன்னு சொன்னதுக்காகவே மீண்டும் கேள்வி கேக்குறது ;)

//அதிலும் அந்த பாதாம் ஸ்லைஸ் வெச்சி லக்ஷணமா இருக்கு.// - ஹஹஹா... லட்டு அழகா இருக்கும் சரி... அதென்ன லக்‌ஷனமா இருக்கு??? ;)

//இந்த வேறியெஷன்ஸ் சொல்லியிருக்கீங்க பாருங்க அங்க நிக்குறீங்க. // - லாவிக்கு எல்லாமே நிக்குதா ;) ஹிஹிஹீ. மிக்க நன்றி லாவி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

30 பேருக்கு லட்டு செய்ய மூலப் பொருட்களின் அளவுகளை யாராவது சொல்ல முடியமா?

new.year க்கு officeக்கு எடுத்துட்டு போகணும்.அளவு தெரியவில்லை

லட்டு சூப்பரோ சூப்பர்.. ரொம்ப ரொம்ப சீக்கிரமே செய்து பார்க்கிறேன். நன்றி வனி