பட்டிமன்ற சிறப்பு இழை - 3

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

குறிப்பு:

யாரும் இந்த பதிவுக்கு கீழே இருக்கும் "பதிலளி" பயன்படுத்த வேண்டாம். இனி நடக்க இருக்கும் பட்டிமன்ற தலைப்புகளையும் இங்கே மீண்டும் வந்து சேர்க்க விரும்புகிறேன். பதிலளி யாரும் பயன்படுத்தினால் எனக்கு இதே பதிவை மாற்ற இயலாது.

இதுவரை நடந்த தலைப்புகள், அதன் நடுவர்கள் பற்றிய தகவல் கீழே காணலாம்:

பட்டிமன்றம் - 1

தலைப்பு: வாழ்க்கையில் எது முக்கியம்? நிம்மதியா? நிதியா?
நடுவர்: வனிதா வில்வாரணிமுருகன்
தீர்ப்பு: நிம்மதி
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/13237

பட்டிமன்றம் - 2

தலைப்பு: இன்றைய வாழ்வில் சந்தோசத்தை அதிகம் அனுபவிப்பது - ஆண்களா? பெண்களா?
நடுவர்: இளவரசி
தீர்ப்பு: ஆண்கள்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/13352

பட்டிமன்றம் - 3

தலைப்பு: செல்போன் நமக்கு அவசியமா? அவசியமற்றதா?
நடுவர்: வின்னி
தீர்ப்பு: அவசியமற்றது
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/13454

பட்டிமன்றம் - 4

தலைப்பு: கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது நல்லதா? இல்லையா?
நடுவர்: தனிஷா
தீர்ப்பு: நல்லதல்ல
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/13536

பட்டிமன்றம் - 5

தலைப்பு: வெளி நாட்டு வாழ்க்கையால் நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?
நடுவர்: அதிரா
தீர்ப்பு: பெற்றது அதிகமே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/13593

பட்டிமன்றம் - 6

தலைப்பு: மனிதர்கள் தங்கள் வாழ்வில் குறிக்கோள்களை அடைய முக்கிய காரணமென்ன - முயற்சியா இல்லை அதிர்ஷ்டமா??
நடுவர்: சந்தனா (மிசஸ் சேகர்)
தீர்ப்பு: முயற்சி
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/13685

பட்டிமன்றம் - 7

தலைப்பு: நம் நாட்டில் மக்களுக்கு உடல் நலம் குறித்த விழிப்புணர்வு இருக்கா இல்லயா ?
நடுவர்: இலா
தீர்ப்பு: விழிப்புணர்வு இல்லை
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/13775

பட்டிமன்றம் - 8

தலைப்பு: உலக திரைப்படங்கள் மக்களிடத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நன்மை பயக்குவையா? தீமை பயக்குவையா?
நடுவர்: பாப்ஸ் உமா
தீர்ப்பு: தீமை
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/13849

பட்டிமன்றம் - 9

தலைப்பு: வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?
நடுவர்: தாமரை (சந்தோ)
தீர்ப்பு: தேவையே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/13929

பட்டிமன்றம் - 10

தலைப்பு: நகர வாழ்க்கையா? கிராம வாழ்க்கையா? சிறந்தது எது?
நடுவர்: வனிதா வில்வாரணிமுருகன்
தீர்ப்பு: கிராம வாழ்க்கை
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/13988

பட்டிமன்றம் - 11

தலைப்பு: கேட்க இனிமை பழைய பாடலா? புதிய பாடலா?
நடுவர்: ஆயிஸ்ரீ
தீர்ப்பு: பழைய பாடல்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/14041

பட்டிமன்றம் - 13

தலைப்பு: கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டு முறை இந்த காலத்திலும் அவசியமா இல்லையா
நடுவர்: கவிசிவா
தீர்ப்பு: இல்லை
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/14112

பட்டிமன்றம் - 14

தலைப்பு: பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?
நடுவர்: வனிதா வில்வாரணிமுருகன்
தீர்ப்பு: பார்த்து கொள்வது கடமையானாலும், பொருளாதார ரீதியாக சார்ந்திருக்காமல் இருப்பதே நல்லது
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/14324

பட்டிமன்றம் - 15

தலைப்பு: இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா?
நடுவர்: வின்னி
தீர்ப்பு: சரி
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/14398

பட்டிமன்றம் - 16

தலைப்பு: உணவில் ருசியானது சைவமா?அசைவமா?
நடுவர்: சுபத்ரா
தீர்ப்பு: அசைவம்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/14452

பட்டிமன்றம் - 17

தலைப்பு: அன்றைய காதல்,நவீன காதல்-சிறந்தது எது?
நடுவர்: ஷேக்
தீர்ப்பு: இன்றைய காதல்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/14894

பட்டிமன்றம் - 18

தலைப்பு: தனிவீடா? அடுக்கு மாடி கட்டிடங்களா?
நடுவர்: வனிதா
தீர்ப்பு: அடுக்கு மாடி
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/15179

பட்டிமன்றம் - 19

தலைப்பு: லஞ்சம் வளர்ந்ததா?இல்லை திணிக்கப்பட்டதா?
நடுவர்: ஷேக்
தீர்ப்பு: இரு அணியும்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/15294

பட்டிமன்றம் - 20

தலைப்பு: பெண்சுதந்திரம்
நடுவர்: கவிசிவா
தீர்ப்பு: வளர்ச்சியடைந்துள்ளது
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/15545

பட்டிமன்றம் - 21

தலைப்பு: சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?
நடுவர்: ஆமினா
தீர்ப்பு: சுயதொழில்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/15745

பட்டிமன்றம் - 22

தலைப்பு: உயர்ந்தது எது? உறவா? நட்பா?
நடுவர்: ரம்யா
தீர்ப்பு: உறவு
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/15881

பட்டிமன்றம் - 23

தலைப்பு: நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?
நடுவர்: ராதா ஹரி
தீர்ப்பு: அக்காலத்தில்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/16032

பட்டிமன்றம் - 24

தலைப்பு: குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு? கணவனுக்கா? மனைவிக்கா?
நடுவர்: ஹேமா
தீர்ப்பு: மனைவிக்கு
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/16195

பட்டிமன்றம் - 25

தலைப்பு: இளைஞர்கள் சீரழிவுக்கு காரணம், குடும்பமா? சமுதாயமா?
நடுவர்: பவித்ரா
தீர்ப்பு: குடும்பம்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/16368

பட்டிமன்றம் - 26

தலைப்பு: எந்தக்காலப் பண்டிகையில் மகிழ்ச்சி அதிகம் ?!
நடுவர்: ஜெயலக்ஷ்மி
தீர்ப்பு: இந்தக்காலம்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/16581

பட்டிமன்றம் - 27

தலைப்பு: ஏட்டு கல்வியா? அனுபவ கல்வியா?
நடுவர்: யோகலக்ஷ்மி
தீர்ப்பு: அனுபவ கல்வி
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/16714

பட்டிமன்றம் - 28

தலைப்பு: உலகில் சிறந்தது கல்வியா? செல்வமா?
நடுவர்: கல்பனா
தீர்ப்பு: கல்வி
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/16941

பட்டிமன்றம் - 29

தலைப்பு: நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?
நடுவர்: கவிசிவா
தீர்ப்பு: அரசு அதிகாரிகள்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/17079

பட்டிமன்றம் - 30

தலைப்பு: ஜோதிடம்,வாஸ்து பார்க்கலாமா-கூடாதா?
நடுவர்: சாந்தினி
தீர்ப்பு: பார்க்கலாம்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/17270

பட்டிமன்றம் - 31

தலைப்பு: மனித மனம் அடிமையாவது அன்புக்கா?புகழுக்கா?
நடுவர்: இளவரசி
தீர்ப்பு: அன்புக்கே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/17465

பட்டிமன்றம் - 32

தலைப்பு: அழகு என்பது உடலா?? உள்ளமா?
நடுவர்: வனிதா
தீர்ப்பு: உள்ளம்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/17607

பட்டிமன்றம் - 33

தலைப்பு: சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா? பெண்களா?
நடுவர்: கல்பனா
தீர்ப்பு: பெண்கள்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/17753

பட்டிமன்றம் - 34

தலைப்பு: தொடர்கதையா?சிறுகதையா?
நடுவர்: வனிதா
தீர்ப்பு: இரண்டுமே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/17907

பட்டிமன்றம் - 35

தலைப்பு: பெற்றோர்களின் உறுதுணை
நடுவர்: ரம்யா
தீர்ப்பு: கல்வி
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/18071

பட்டிமன்றம் - 36

தலைப்பு: இந்தியாவின் சுய அடையாளம்
நடுவர்: யோகலக்‌ஷ்மி
தீர்ப்பு: காக்கப்படுகிறது
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/18238

பட்டிமன்றம் - 37

தலைப்பு: விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா?
நடுவர்: வனிதா
தீர்ப்பு: சந்தோஷம்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/18446

பட்டிமன்றம் - 38

தலைப்பு: காதலை பெற்றோர் மறுப்பதற்கு காரணம் - ஈகோ??சமூகம்?? பாசமா??
நடுவர்: பவித்ரா
தீர்ப்பு: சமூகம்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/18625

பட்டிமன்றம் - 39

தலைப்பு: ருசிக்காகவா (அ) ஆரோக்கியத்திற்காகவா?
நடுவர்: ரம்யா
தீர்ப்பு: ருசிக்காக
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/18774

பட்டிமன்றம் - 40

தலைப்பு: முக்கனிகளில் சிறந்தது எது? மாவா?பலாவா?வாழையா?
நடுவர்: ரேணுகா ராஜசேகரன்
தீர்ப்பு: வாழையே சிறந்தது
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/18959

பட்டிமன்றம் - 41

தலைப்பு: திருமணம் முடிந்ததும் சுதந்திரம் அதிகம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?
நடுவர்: ஷேக்
தீர்ப்பு: பெண்களுக்கே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/19083

பட்டிமன்றம் - 42

தலைப்பு: என்றும் இனிமையாக நினைக்கும் பருவம் எது? பள்ளி பருவமா?கல்லூரி பருவமா?
நடுவர்: சுகந்தி
தீர்ப்பு: பள்ளிப்பருவமே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/19200

பட்டிமன்றம் - 43

தலைப்பு: பொசசிவ்னஸ் எண்ணம் அதிகமாயிருப்பது ஆணுக்கா? பெண்ணுக்கா?!
நடுவர்: இளவரசி
தீர்ப்பு: குடும்பத்தில் பெண்களும், சமுதாயத்தில் ஆண்களும்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/19284

பட்டிமன்றம் - 44

தலைப்பு: தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அறிவை பலப்படுத்துகின்றனவா? பலவீனப்படுத்துகின்றனவா?
நடுவர்: ரேணுகா
தீர்ப்பு: பலவீனப்படுத்தக்கூடியவை
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/19389

பட்டிமன்றம் - 45

தலைப்பு: பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன? சமூகம்? குடும்பம்?
நடுவர்: வனிதா
தீர்ப்பு: குடும்பமே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/19546

பட்டிமன்றம் - 46

தலைப்பு: பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா?? புகுந்த வீட்டிலா?
நடுவர்: பவித்ரா
தீர்ப்பு: புகுந்த வீட்டிலே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/19662

பட்டிமன்றம் - 47

தலைப்பு: ஆண்கள் சாதித்த துறைகளில் அனைத்திலும் பெண்களும் சாதிக்கமுடியுமா?முடியாதா?
நடுவர்: ரெங்க ராஜி
தீர்ப்பு: சாதிக்க முடியும்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/19828

பட்டிமன்றம் - 48

தலைப்பு: இன்றைக்கு மனிதாபிமானம் வளர்ந்து வருகிறதா? தேய்ந்து வருகிறதா?
நடுவர்: ரேணுகா
தீர்ப்பு: தேய்ந்து வருகிறது
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/20055

பட்டிமன்றம் - 49

தலைப்பு: பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?
நடுவர்: வனிதா
தீர்ப்பு: சீரழிக்கிறோம்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/20241

பட்டிமன்றம் - 50

தலைப்பு: திருமணங்கள் அதிகம் தோற்கப்படுவது காதல் திருமணத்திலா?பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்திலா?
நடுவர்: அஸ்வினி தியாகு
தீர்ப்பு: காதல் திருமணம்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/20506

பட்டிமன்றம் - 51

தலைப்பு: பட்டாசுகள் பண்டிகைக்கு அவசியமா? அவசியமில்லையா?
நடுவர்: ஜெயலக்‌ஷ்மி
தீர்ப்பு: அவசியமில்லை
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/20665

பட்டிமன்றம் - 52

தலைப்பு: உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?
நடுவர்: ரேணுகா ராஜசேகரன்
தீர்ப்பு: நம் நாட்டு உணவே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/20847

பட்டிமன்றம் - 53

தலைப்பு: இன்றைய பெண்களுக்கு ஏற்ற ஆடை புடவையா? சுடியா?
நடுவர்: சீதாலஷ்மி
தீர்ப்பு: சுடியே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/20969

பட்டிமன்றம் - 54

தலைப்பு: ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?
நடுவர்: ராதா பாலு
தீர்ப்பு: அவசியமே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/21141

பட்டிமன்றம் - 55

தலைப்பு: இந்த கால ஆண்கள் ராமனா? ராவணனா?
நடுவர்: வனிதா
தீர்ப்பு: ராவணன்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/21275

பட்டிமன்றம் - 56

தலைப்பு: வீட்டில் வேலைக்காரர்கள் உதவியா? உபத்திரவமா?
நடுவர்: கல்பனா
தீர்ப்பு: உதவியே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/21404

பட்டிமன்றம் - 57

தலைப்பு: பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?
நடுவர்: வனிதா
தீர்ப்பு: பயனுள்ளவை
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/21639

பட்டிமன்றம் - 58

தலைப்பு: வேலன்டைன்ஸ் டே அவசியமானதா? இல்லையா?
நடுவர்: கவிசிவா
தீர்ப்பு: அவசியமே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/21760

பட்டிமன்றம் - 59

தலைப்பு: அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா? வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?
நடுவர்: கல்பனா
தீர்ப்பு: இல்லத்தரசிகளுக்கே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/21897

பட்டிமன்றம் - 60

தலைப்பு: பேஸ்புக் அவசியமா?இல்லையா?
நடுவர்: இளவரசி
தீர்ப்பு: அவசியம் இல்லை
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/22029

பட்டிமன்றம் - 61

தலைப்பு: விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!
நடுவர்: ஜெயலக்‌ஷ்மி
தீர்ப்பு: ஆனந்தமே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/22165

பட்டிமன்றம் - 62

தலைப்பு: உறவுமுறைகளில் சிறந்தது எது ??
நடுவர்: வனிதா
தீர்ப்பு: கணவன் மனைவி உறவே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/22315

பட்டிமன்றம் - 63

தலைப்பு: எப்படிப்பட்ட பேச்சு சிறந்தது ??
நடுவர்: ரம்யா கார்த்திக்
தீர்ப்பு: சூழ்நிலைக்கு ஏற்ப பேசுவது (இரு அணியும்)
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/22427

பட்டிமன்றம் - 64

தலைப்பு: பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா?அன்பா?
நடுவர்: இளவரசி
தீர்ப்பு: அன்பு
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/22547

பட்டிமன்றம் - 65

தலைப்பு: சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?
நடுவர்: ரேணுகா ராஜசேகரன்
தீர்ப்பு: இக்கால திரைப்படங்களே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/22672

பட்டிமன்றம் - 66

தலைப்பு: நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?
நடுவர்: லாவண்யா
தீர்ப்பு: கூடாது
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/22804

பட்டிமன்றம் - 67

தலைப்பு: பணம் எதற்காக? ஆடம்பரத்திற்காகவா? அமைதிக்காகவா?
நடுவர்: வனிதா
தீர்ப்பு: அமைதிக்காக
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/22919

பட்டிமன்றம் - 68

தலைப்பு: இக்காலத்தில் வாழ தேவை தன்னம்பிக்கையா? சாமர்த்தியமா?
நடுவர்: பிந்து
தீர்ப்பு: தன்னம்பிக்கையுடன் கூடிய சாமர்த்தியமே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/23086

பட்டிமன்றம் - 69

தலைப்பு: நமக்கு பிடித்த வேலையை செய்வது சரியா? அல்லது கிடைத்த வேலையை பிடித்ததாக மாற்றி கொள்வது சரியா?
நடுவர்: பிரேமா ஹரிபாஸ்கர்
தீர்ப்பு: பிடித்த வேலை கிடைக்கும் வரை கிடைத்த வேலையை விரும்பி செய்ய வேண்டும் (இரண்டு அணியும்)
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/23202

பட்டிமன்றம் - 70

தலைப்பு: சுயமாய் சிந்திப்பது யார்? குரங்கா? மனிதனா?
நடுவர்: ரேணுகா ராஜசேகரன்
தீர்ப்பு: மனிதனே
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/23350

பட்டிமன்றம் - 71

தலைப்பு: ஆண்களுக்கு யாரை சமாளிப்பது கடினம்?? அம்மா? மனைவி?
நடுவர்: கார்த்திகா (R)
தீர்ப்பு: அம்மா
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/23484

பட்டிமன்றம் - 72

தலைப்பு: திரும்பவர தயங்கும் காரணம் - வசதி? உறவு?
நடுவர்: வனிதா
தீர்ப்பு: வசதி வாய்ப்புகள்
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/23604

பட்டிமன்றம் - 73

தலைப்பு: சமையலில் கில்லாடிகள் யார்?
நடுவர்: பூர்ணிமா
தீர்ப்பு: -
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/23732

பட்டிமன்றம் - 74

தலைப்பு: பட்டி நடுவராக சிறப்பிப்பவர் யார்? சாலமன் பாப்பையாவா...?திண்டுக்கல் லியோனியா...?
நடுவர்: ரேணுகா
தீர்ப்பு : பாப்பைய்யா
லின்க்: http://www.arusuvai.com/tamil/node/23848

பட்டிமன்றம் - 75

தலைப்பு: பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?
நடுவர்: லாவண்யா
தீர்ப்பு: தரலாம்
லின்க்: http://arusuvai.com/tamil/node/23950

பட்டிமன்றம் - 76

தலைப்பு: குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்???
நடுவர்: இந்திரா கணேசன்
தீர்ப்பு: கணவன் வீட்டு உறவுகளே
லின்க்: http://arusuvai.com/tamil/node/24086

பட்டிமன்றம் - 77

தலைப்பு: இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதா? வசதியை பார்த்து வருகிறதா?
நடுவர்: ஷமீலா
தீர்ப்பு: மனம் பார்த்து
லின்க்: http://arusuvai.com/tamil/node/24184

பட்டிமன்றம் - 78

தலைப்பு: மாணவர்களின் மன அழுத்ததிற்கு காரணம் யார்?
நடுவர்: கவிசிவா
தீர்ப்பு: பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பு
லின்க்: http://arusuvai.com/tamil/node/24346

பட்டிமன்றம் - 79

தலைப்பு: ஆபத்துக்காலங்களில் உதவுபவர்கள் நண்பர்களா? சொந்தபந்தங்களா?
நடுவர்: நித்யா / கவிசிவா
தீர்ப்பு: உறவுகளே
லின்க்: http://arusuvai.com/tamil/node/24478

பட்டிமன்றம் - 80

தலைப்பு: சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?
நடுவர்: அருட்செல்வி
தீர்ப்பு: ஆண்களே சண்டையில் ஜெயிப்பவர்கள்
லின்க்: http://arusuvai.com/tamil/node/24601

பட்டிமன்றம் - 81

தலைப்பு: காதலுக்காக பெற்றோரை விடலாமா? அல்லது பெற்றோருக்காக காதலை விடலாமா?
நடுவர்: ஷமினா
தீர்ப்பு: பெற்றோருக்காக காதலை விடலாம்
லின்க்: http://arusuvai.com/tamil/node/24720

பட்டிமன்றம் - 82

தலைப்பு: ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?
நடுவர்: சுமி பாபு
தீர்ப்பு: மருமகளாக போவதே கஷ்டம்
லின்க்: http://arusuvai.com/tamil/node/24998

பட்டிமன்றம் - 83

தலைப்பு: பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன?
நடுவர்: ஜெயலக்‌ஷ்மி (ஜெய்)
தீர்ப்பு: பெண்களின் தட்டிக்கேட்கா மனப்பான்மையே
லின்க்: http://arusuvai.com/tamil/node/25141

பட்டிமன்றம் - 84

தலைப்பு: கணவர் சமையல் நிபுணராக இருப்பது மனைவிக்கு வரமா? சாபமா???
நடுவர்: கவிசிவா
தீர்ப்பு: வரமே
லின்க்: http://arusuvai.com/tamil/node/25273

பட்டிமன்றம் - 85

தலைப்பு: இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?
நடுவர்: ரேணுகா ராஜசேகரன்
தீர்ப்பு: யாருக்கும் இல்லை
லின்க்: http://arusuvai.com/tamil/node/25408

பட்டிமன்றம் - 86

தலைப்பு: இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை மேம்படுத்துகிறதா அல்லது சீரழிக்கிறதா?
நடுவர்: ஈஸ்வரன் (ஈசன்)
தீர்ப்பு: மேம்படுத்துகிறது
லின்க்: http://arusuvai.com/tamil/node/25554

பட்டிமன்றம் - 87

தலைப்பு: வேலைக்கு போவதால் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகமா ? குறைவா ?
நடுவர்: உஷா
தீர்ப்பு: அதிகமே
லின்க்: http://arusuvai.com/tamil/node/25683

பட்டிமன்றம் - 88

தலைப்பு: கோபம் வந்தால் மௌனமா? சத்தமா?
நடுவர்: இளவரசி
தீர்ப்பு: அளவான சத்தம்
லின்க்: http://arusuvai.com/tamil/node/25855

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு:

யாரும் இந்த பதிவுக்கு கீழே இருக்கும் "பதிலளி" பயன்படுத்த வேண்டாம். இனி நடக்க இருக்கும் பட்டிமன்ற தலைப்புகளையும் இங்கே மீண்டும் வந்து சேர்க்க விரும்புகிறேன். பதிலளி யாரும் பயன்படுத்தினால் எனக்கு இதே பதிவை மாற்ற இயலாது.

இனி வரப்போகும் பட்டிமன்றங்களின் தேதிகள் அதன் நடுவர்கள் பற்றிய தகவல்கள்:

பட்டிமன்றம் - 89: May 13 - May 20 : நடுவர் தேவை

1. இனி நடக்க இருக்கும் பட்டிமன்றத்தின் தேதிகள் இங்கே கொடுக்கபட்டிருக்கின்றது. உங்களுக்கு வசதியான தேதியில் நீங்கள் நடுவராக வர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இங்கே பதிவு போட்டு தெரியபடுத்தலாம்.

2. நடுவராக வருபவர்கள் முன்பே அறுசுவையில் பலரால் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் இருந்து மட்டுமே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

3. தலைப்புகள் காண / சேர்க்க:

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

பழைய “பட்டிமன்ற சிறப்பு இழை” காண...

http://www.arusuvai.com/tamil/node/13676 (பகுதி 1)
http://www.arusuvai.com/tamil/node/19103 (பகுதி 2)

4. பட்டிமன்ற தலைப்பு தரும் போது கீழே இருக்கும் இதே ஃபார்மட்டை இனி எல்லோரும் ஒன்று போல் தர வேண்டுகிறேன்.

பட்டிமன்றம் எண் : தலைப்பு

உதாரணம்:

பட்டிமன்றம் 68 : இக்காலத்தில் வாழ தேவை தன்னம்பிக்கையா? சாமர்த்தியமா?

இது ஒரு ஸ்டாண்டர்ட் மெயிண்டெயின் செய்வதர்காக. முடிந்தவரை தலைப்பை சிறியதாக கொடுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம் தோழி சீதாலக்ஷ்மி அவர்கள் சுரேஜினி அவர்கள் கொடுத்திருந்த முன்பு நடந்த பட்டிமன்றங்களில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளை தேடி நமக்காக தந்திருக்கிறார். மிக்க நன்றி சீதாலக்ஷ்மி மற்றும் சுரேஜினி. :)

பட்டிமன்றம் 1: பார்த்தவுடன் சாப்பிடத்தூண்டுவது இனிப்பு வகைகளா? காரமா?

பட்டிமன்றம் 2: இரவில் குழந்தைகளை பெற்றோருடன் உறங்கச் செய்வது ஆரோக்கியமான முறையா? இதனால் பெற்றொரின் தனிமை பாதிக்கப்படுகின்றதா, இல்லையா?

பட்டிமன்றம் 3
பட்டிமன்றம் 4

பட்டிமன்றம் 5: இன்றைய இளம் தலைமுறையினர் தெளிவான சிந்தனையுடன் இருக்கிறார்களா அல்லது மன முதிர்ச்சியின்றி சுயநலமாக செயல்படுகிறார்களா?

பட்டிமன்றம் 6: அன்றும், இன்றும், என்றும், இனிக்கும் இல்லறத்துக்கு காதல் திருமணம் சிறந்ததா அல்லது பெரியோர்களால் பார்த்து, நிச்சயக்கப்பட்ட திருமணம் சிறந்ததா?

பட்டிமன்றம் 7: ஒரு குடும்பம் சிறப்படைய பெரிதும் காரணம் இல்லத்தரசிகளா? வேலைக்கு செல்லும் அரசிகளா?

பட்டிமன்றம் 8: வாடகைத்தாய்... நம் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒத்து வருமா? வராதா?

பட்டிமன்றம் 9: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ சிறந்தது எது?கூட்டுக்குடும்பமா? தனிக் குடித்தனமா?

பட்டிமன்றம் 10: இன்ன்றைய ஊடகங்கள் இளைஞர்களை சீரழிக்கிறதா? சீர்படுத்துகிறதா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழிகளே... பட்டிமன்றம் 63க்கு நடுவர் தேவை. விருப்பம் உள்லவர்கள் இங்கே தெரியப்படுத்தவும்.

சுகி, கவிசிவா, சீதாலஷ்மி, அஷ்வினி தியாகு, உத்ரா... வர இயலுமா?? :) வர விருப்பம் உள்ள மற்றவர்களும் சொல்லுங்க.

ரம்யா... ஊரிலிருந்து வந்துட்டீங்க தானே... வாங்க இங்க. நடுவரா வர இயலுமா இந்த வாரம்??? வந்தா நாங்க ரொம்ப மகிழ்வோம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவரா வரும் நம்ம அன்பு தோழி ரம்யாவை பெரிய வாழ்த்தோட வருக வருக என வரவேற்கிறேன் :)

உங்க வாதங்களை இத்தனை நாள் மிஸ் பண்ணோம்... இப்போ நடுவராவே வருகிறேன்னு சொன்னதும், எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல... பின்ன அட்டகாசமான தீர்ப்பு கிடைக்குமே :) வாங்க வாங்க... உங்க வரவு நல்வரவாகட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடந்து முடிந்த பட்டிகளின் தலைப்புகளோடு தீர்ப்பையும் சேர்த்து வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்குமே.........

நானும் அதை ரொம்ப நாளா நினைச்சுட்டு தான் இருக்கேன். :) நேரம் கிடைக்கும் போது அந்த அந்த தலைப்புக்கு கீழே அதன் தீர்ப்பும் இணைக்குறேன். அலோசனைக்கு மிக்க நன்றி பிரியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா

பட்டி துவக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்(றோம்).. :)

சாந்து

ஆரம்பம் ஆயிடுத்து :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அடுத்த பட்டிமன்ற நடுவர் யாருங்கோ??? :) வாங்க... வாங்க... விருப்பம் உள்ளவர்கள் யார வேணும்னாலும் முன் வரலாம். ஒரு அறுசுவை பட்டியிலாவது வாதிட்டிருக்க வேண்டும் என்பதை தவிற வேறு ரூல்ஸ் இல்லை. வாங்க வாங்க... சீக்கிரம் வாங்க. வனி காத்திருக்கேன்.... சீக்கிரம் வாங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்