பட்டிமன்ற சிறப்பு இழை - 3

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

மக்களே... இப்போ எனக்கு வேறு வழி இல்லை... பெயர் சொல்லி தான் எல்லாரையும் கூப்பிடனும் ;)

உத்ரா... நீங்களே வந்துடுங்கோ... இல்லைன்னா நாங்களே நடுவரா உட்கார வெச்சுடுவோம் ;) ஹிஹிஹீ

இளவரசி, சுகி, லாவி, ஜென்னி, பூங்காற்று, பிரியா ஜெயராம், கல்பனா, கவிசிவா... யாருக்கு வர விருப்பம்... சொல்லுங்க, வாங்க இங்க....

பெயர் சொல்ல விடுபட்டிருந்தா கோவிக்காம விருப்பம் உள்ளவங்க வாங்க.... எனக்கு வீட்டில் வேலை டென்ஷன்... அதான் எல்லாரையும் நியாபகப்படுத்தி பதிவ்ட நேரமில்லை... இன்று எப்படியும் எனக்கு நடுவர் வேணும் :) வாங்கோ....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி மன்னிச்சு மன்னிச்சு. இந்தவாட்டி என்னால் நடுவராக வர முடியாத சூழல். இன்னும் ஒன்றரை மாதங்களுக்கும் இதே நிலைமைதான். வழக்கம் போல் சிங்கப்பூர் பயணம். பட்டியில் கூட அப்பப்போ எட்டித்தான் பார்க்க முடியும்னு நினைக்கிறேன் :(.

நானும் உங்க கூட சேர்ந்து நடுவருக்காக கூவறேன். தோழீஸ் எங்களை ரொம்ப கூவ வைக்காதீங்கோ! சீக்கிரமா நீங்களாவே முன் வந்து விருப்பத்தை சொல்லுங்க. நடுவர் னு ஒருத்தர் இருந்தால்தானே நாம டிஷ்யூம் டிஷ்யூம் போட முடியும். வாங்க்கோ வாங்கோ.... வரலேன்னா... நானும் வனியும் அழுதுடுவோம்.இளவரசி, லாவண்யா, கல்பனா, ஜென்னிவினோ, சுகி, உதிரா, பூர்ணிமா, ப்ரியா, பூங்காற்று... இன்னும் பெயர் விடுபட்ட தோழிகளும் கோவிக்காம வந்து விருப்பத்தை சொல்லுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி,கவி யாருக்கும் விருப்பம் இருந்தால் இன்னிக்கு மாலைக்குள் சொல்லட்டும்.அப்படி இல்லன்னா நாளைக்கு ஆரம்பிக்கறேன்.
பிள்ளைகளுக்கு எக்சாம் டைம்.அதனால உடனுக்குடன் பதில் பதிவு போடுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும்..அட்ஜஸ்ட் பண்ணிக்கமுடியும்னா எனக்கு ஓகேதான்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு இளவரசி... அடடா... ஆபத்பாண்டவன்... நீங்க தான் :) ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி இளவரசி :) நீங்க முடியும் போது பதிவிடுங்க, ஒரு பிரெச்சனையும் இல்லை... உங்க தீர்ப்புக்காகவே நாங்க காத்திருக்கோம்... அது கிடைக்க நாங்க கொடுத்து வெச்சிருக்க வேண்டாமா... வாங்க வாங்க. வாழ்த்துக்கள். :) மிக்க நன்றி இளவரசி.

கவிசிவா... எனக்கும் தெஇர்யும் நீங்க இப்போ பிசி என்று... யாரும் இல்லையே என்று தான் முடியும் போதாவது பதிவு போடுவீங்கன்னு அழைத்தேன்... இப்போ கவலை இல்லை... இளவரசி வந்துட்டாங்களே :) நானும் இந்த 10 நாள் ஊரில் இல்லை... அதனால் தான் இன்றே நடுவர் பிடிக்க டென்ஷன். அவர் ஊரில் இருந்து வந்திருக்கார், நானும் அவரோடு ஊருக்கு போவேன், அங்க என்னால் இண்டெர்னெட் எல்லாம் பயன்படுத்த இயலாது. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆபத்பாந்தவியா வந்து கை கொடுத்தீங்க இளவரசி! நன்றி தோழியே! முடியும் போது கண்டிப்பா கலந்துக்குவேன். ஆனால் உங்கள் கவிதை போன்ற வாதங்களை மிஸ் பண்ணுவோமே :(. தீர்ப்பில் அதை சரி கட்டிடுவீங்கன்னு தெரியும்.

புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி வனி! அண்ணாவோடவும் குழந்தைகளோடவும் நல்லா என்ஜாய் பண்ணுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி: சாரிப்பா , இவ்வளவு கூவியும் நான் வராததுக்கு , இப்போ தான் பார்த்தேன்.
ரெண்டு மூணு நாளா தான் பழைய பட்டி வாதங்களை படிச்சுட்டு வரேன்.
அதெல்லாம் பார்த்து நிஜமாகவே உதறுது. தீர்ப்பு எல்லாம் எவ்வளவு ஆராய்ந்து கொடுத்திருக்கீங்க !!:-) . அதுக்கு முன்னாடி நம்ம வாதமே இன்னும் மெருகேத்தனும் போல் இருக்கு, அப்புறம் தான் நடுவர் எல்லாம்.
இன்னும் சிறிது நாள் ஆகணும் , முக்கியமா இந்த மே லீவுல விருந்தாளி படையெடுப்பா இருக்கும். சோ ,வெளியில் போக வர வேண்டி இருக்கும்.
நெக்ஸ்ட் மாதம் ட்ரை பன்றேன்பா.
கூப்பிட்டதுக்கு நன்றிகள் ..

கவிசிவா : நன்றிப்பா என்னையும் கண்சிடர் பண்ணியதுக்கு !!

இளவரசி : வாங்கப்பா ,எனக்கு ரொம்ப மகிழ்ச்சி நீங்க நடுவரா வரதுல, உங்க பழைய பட்டி பொசசிவ்ன்ஸ் பற்றி படிச்சேன், கலக்கிட்டீங்க.என்ன ஓர் விளக்கம் பா , அருமையான கவிதை நடை !!:-), நிறைய தெரிசுகிட்டேன்., நன்றிகள் .

நீங்க இரண்டு பேரும் என் மேல இந்தளவு நம்பிக்கை வைத்து நடுவர் பொறுப்பை ஏற்க சொன்னதற்கு மிக நன்றி. ஆனால் ஒவ்வொரு பட்டியிலும் தீர்ப்புக்களை படிக்கும் போதுதான் தெரிகின்றது அது எவ்வளவு பொறுப்புடன் செய்ய வேண்டிய பணி என்பது, அதற்கு இன்னும் கொஞ்சம் நான் பக்குவப்பட வேண்டும் என நினைக்கிறேன் வாதம் செய்வது போல் அல்ல பட்டியில் நடுவராய் இருப்பது, அத்தோடு நேரமும் சிக்கல்தான் ,உஅடனுக்குடன் பதிவிடுவதும் கஷ்டம், இப்போது கூட இதை பதிவிட்டுக்கொண்டிருக்கும் போது பிள்ளைகல் வீட்டை இரண்டாக்கிக்கொண்டிருக்கிறார்கல். இன்னொரு நாளில் முயற்சிக்கிறேண், மீண்டும் உங்கள் அழைப்புக்கு நன்றி கூறி விடை பெற்கிறேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பரவாயில்லைங்கோ... ஆனா நீங்கலாம் நடுவரா வராம நாங்கலாம் விடமாட்டோங்கோ ;) கொஞ்ச நாள் இப்படி எஞ்சாய் பண்ணுங்கோ... அப்பறம் விடமாட்டோம். ஒரு முறை வந்துட்டா திரும்ப அந்த இடத்தில் உட்கார நிச்சயம் உங்களுக்கே பிடிக்கும். எங்களுக்கு உங்க எல்லார் மேலையும் ரொம்ப நம்பிக்கை இருக்கு... ஆனா நீங்க தைரியமா வராததால விட்டுடுறோம் :) இன்னும் சில நாட்களில் உங்களுக்கு தானா தைரியம் வரும் :) அதுக்காக காத்திருக்கோம். மிக்க நன்றி இருவருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு மக்களே... இங்கே தோழிகள் கேட்டுக்கொண்டபடி 40வது பட்டியில் இருந்து இன்று முடிந்த பட்டிவரை தீர்ப்பும், அதன் லின்க்’ம் கொடுத்திருக்கிறேன். நேரம் போதாத காரணத்தால் மீதம் உள்ள பட்டிமன்ற தகவல்களை சிறு இடைவெளிக்கு பின் கொடுக்கிறேன்.

வரப்போகும் பட்டிக்கு நடுவர் தேவை... விருப்பம் உள்ளவர்கள் தெரியப்படுத்தும்படி அன்போடு கேட்டுக்கறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

க்ரேட் வொர்க் வனி ..ஒவ்வொண்ணா தேடி எடுத்து லிங்க் கொடுக்கறது ன்றது ஐ அப்ரிசியேட் யூ..வனி...

அடுத்தபட்டிக்கு கவிசிவா,சீதாம்மா,உதிரா,ப்ரியா,ஜெனி,ப்ரேமா,பூங்காற்று,சாந்தினி,தளிகா,
கல்பனா,ராதாம்மா,இன்னும் பெயர் விடுபட்ட எல்லா தோழிகளும் வந்து சம்மதம் சொல்லுங்கோ..

வனி, தளிகா ரொம்பநாளா அப்ட்டியில் பதிவு கொடுக்கிறாங்க ஒரு தலைப்புக்கு நடுவரா இருந்தா எப்படி இருக்குமின்னு பார்க்க ஆவல்...நீங்க என்ன நினைக்கிறீங்க..?

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்