பட்டிமன்ற சிறப்பு இழை - 3

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

வாங்க தோழிகளே, யாரவது சீக்கிரமா வந்து பட்டியை ஆரம்பிங்க... வாதம் பண்ண வாய் நமநமகுது... நடுவரே நீங்க எங்க இருக்கீங்க? விரசா ஒரு நல்ல தலைப்பை போடுங்க... வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

எனக்கும் தளிகா வர வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களா இருக்கு :) வர சம்மதிச்சா பெரிய மகிழ்ச்சி எல்லாருக்கும் நிச்சயம் இருக்கும்.

தளிகா... என்ன சொல்றீங்க??? வாங்க இந்த பக்கம்...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் தோழிகளே, என்னை யாரும் மறக்கலைதானே?நீண்ட இடைவேளைக்குப்பின் பட்டி நடுவராக நான் வரலாமா?உங்கள் விருப்பமிருந்தால்...,வரும்வாரம்(திங்கள்) நடுவராக வர எனக்கு இயலும்..

ரேணு... அதெப்படி மறப்போம்.... :) வருகைக்கு மிக்க நன்றி ரேணு. தாராளமா வாங்க... தளிகாவுக்கு ஏற்கனவே அழைப்பு முன் வைத்தமையால், அவங்க முடிவு தான் வேணும். அவங்க வருவதாக இருந்தால் நீங்க அடுத்த பட்டிக்கு நடுவர், அவங்க உங்களை இருக்க சொல்லிட்டா... இந்த பட்டிக்கே நீங்க தான் நடுவர் :) யார் வந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஏன் வரலாமான்னு கேட்டுடீங்க??? எப்போதும் பட்டிக்கு நடுவரா வர எல்லாரும் முன் வரணும் என்பதே எங்கள் ஆசையும் கூட. முன் வந்தமைக்கு நன்றி ரேணு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நலமா...
உங்கள் பதிலுக்கு நன்றி வனி,தளிகா அவர்கள் வந்தால் மகிழ்ச்சியே.:), அப்படி போட்டதால்தான் வனியின் பதில் உடனே வந்தது,,,, (சும்மா சொன்னேன்பா)

இன்று நம் நேரம் 5 மணி வரை பாருங்க... தளிகா இந்த அழைப்பை காணலன்னா நீங்க துவங்கிடுங்க இந்த முறை :)

எனக்காக காத்திருக்க வேண்டாம்... நான் இன்று இரவே மாலே கிளம்புகிறேன். நான் மீண்டும் அறுசுவை பார்வையிட பதிவிட எப்படியும் 1 வாரம் ஆகும். அதனால் எந்த பிரெச்சனையுமின்றி பட்டியை கொண்டு போக வேண்டியது உங்க பொறுப்பு.... எந்த உதவி வேண்டுமானாலும், சந்தேகம்னாலும் நம்ம சீதாலஷ்மியை பிடிச்சுக்கங்க. நான் வரும் வரை பட்டிக்கு அவங்க தான் பொறுப்பு ;)

பட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நீங்கள் சொன்னதுபோலவே செய்கிறேன்....ஆனால் எனது இந்தபட்டியில் ரொம்பநாள்கு பிறகு உங்க வாதங்கள்,கருத்துகள் கிடைக்கும்னு நினைத்தேன்....முடிந்தவரை பதிவிடுங்கள் பிளீஸ்..

முடிந்தவரை வர பார்ப்பேன், ஆனால் வருகிறேன் என்று சொல்லி வர முடியாமல் போனால் நல்லா இருக்காது. அதனால் தான் சிரமம் என்பதை இப்பவே சொல்லிட்டேன். :) பாருங்க... புது முகங்கள் பட்ட கிளப்புவாங்க... உங்களுக்கு எங்க நியாபகமே வராது ;) உங்க அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி ரேணு. அங்கு போய் பார்த்தால் தான் என் நிலை தெரியும் ;) வீடு ஒரு வாரம் ஆளில்லை என்றாலே தலை கீழா இருக்கும்... இப்போ நான் வந்து 2 மாசம் ஆகுது... நினைச்சாலே பயமா தான் இருக்கு. ஆனா உங்களூக்காக நிச்சயம் ஒரு பதிவானாலும் நல்லா போட முயற்சிப்பேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி வனி, வீட்டின் நிலையை நன்கு அறிவேன் வனி, முடிந்தவரை வாருங்கள்பா,(குட்டி கையில் உள்ளான் பதிவிட சிரமமாக உள்ளது),கண்டிப்பா முயற்சியுங்கள்....

உங்களின் ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சிங்க....

(நான் நினைக்கிறேன்....தளிகா அறுசுவைய பார்வையிடமுடியாத அளவு அலுவலில் இருக்காங்கன்னு)

ஜோரா ஆரம்பியுங்கோ.....எங்கள் எல்லாருடைய ஆதரவும் ,பதிவும் கண்டிப்பா இருக்கும்..

உங்க தலைப்புக்கு நாங்க வெயிட் பண்றோம்

வாழ்த்துக்கள்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்