இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.
இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.
முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.
பட்டிமன்ற விதிமுறைகள்:
1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.
2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.
http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107
3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.
4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.
8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
நடுவர்?
வனிதா,பட்டி நடுவர் இம்முறை யாரும் நாமினியா வரல இதுவரை...
அப்ப நீங்க கரெக்டா ஆரம்பிச்சுடுவீங்கதானே..திங்களன்று
இல்ல வேற யாரும் ரெடியா இருக்கீங்களா?
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
அன்பு இளவரசி
பூர்ணிமா இம்முறை வர முடியுதான்னு பார்க்குறதா சொல்லி இருக்காங்க. அவங்களுக்காக தான் நான் வெயிட்டிங். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
அப்படியா ..மிக்க மகிழ்ச்சி...
அதான் (கூவல் )சத்தம் கேட்கல..:)
லைன்லபார்த்தேன்..ஒரு நிமிஷம் வரமுடியுமா?
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
அன்பு பட்டிமன்ற தோழிகளே
உங்க எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க ஒரு புத்தம் புது நடுவர் இன்னைக்கு வருகிறார் வருகிறார்... வருகிறார். அவரை வரவேற்க எல்லாரும் தயாரா இருங்க ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா..
பாபு அண்ணாவே வரப் போகிறாரா? :) யாராக இருந்தாலும் மாலை மரியாதையுடன் வரவேற்பு தயாராக உள்ளது.. :)
வனி....
ஆஹா வனி....... ஹாலிடேஸ் முடிஞ்சு புது கிளாஸ்ல புது செக்க்ஷன்ல உட்கார்ந்துகிட்டு இந்த வருஷம் நமக்கு யாரு கிளாஸ்மிஸ்ஸா வரப்போறாங்கற ஆவல் ஏற்படுமே அது போல இருக்கு....... செம்ம சஸ்பென்ஸ் கொடுக்கறீங்க. நாங்களும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறோம்........... வங்க....வாங்க...........
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
பட்டி நடுவர்.......
தளிகா மேடம் வரப்போறாங்களா?
சஸ்பென்ஸ் தாங்கலியே.......
நடுவர் யாரோ?
அடுத்த பட்டியின் நடுவர் யார்? வனிதா சொல்லிடுங்க எதிர்பார்த்திட்டிருக்கோம். நல்ல தலைப்போட அடுத்த பட்டி எப்போ ஆரம்பம்?
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
நடுவர்
சாந்தினி, பிரியா அரசு, பிரியா ஜெயராம், பூங்காற்று... காத்ததும் காத்துட்டீங்க... இன்னும் கொஞ்ச நேரம் தான்... நடுவர் தலைப்போடு வருவார். அண்ணா வரனும்ன்றதுலாம் பேராசைன்னு தான் சொல்லனும் (எனக்கும் அந்த பேராசை வெகு நாட்களா இருக்கு... எப்ப சிக்குவார் பார்ப்போம். நிச்சயம் இப்ப சிக்கல.) ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அன்பு நடுவர்களே
யார் நடுவர்ன்னு தெரியல... அதான் எல்லாரையும் நடுவர்னே கூப்பிட்டேன் ;) கொஞ்சம் வாங்க... கை கொடுக்க. வர திங்கள் பட்டிமண்றம் துவங்கி நடுவர் பணியை செய்ய போறது யாரு??? தாமதிக்காம வாங்க பார்ப்போம். :) உதிதாக பட்டியில் வாதாட துவங்கினவங்களூம் வரலாம்... எல்லாருக்கும் நடுவராகும் தகுதி உண்டு, வாய்ப்பும் உண்டு... வாங்க எல்லாரும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா