பட்டிமன்ற சிறப்பு இழை - 3

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

இம்முறை பட்டய கிளப்பின புதுமுகங்கள் யாரும் வருவாங்கன்னு நானும் எதிர்பார்க்கிறேன்..

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வர போகும் திங்கள் துவங்கும் பட்டிக்கு பிந்து (bivi) நடுவராக வர சம்மதித்திருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். :) வாழ்த்துக்கள் பிந்து. யோசிச்சு நல்ல முடிவெடுத்ததுக்காக நன்றிகள் பல. அட்வைசருக்கும் சேர்த்து :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா.... உண்மையாக சொன்னால் எனக்கு argue பண்ண தான் பிடித்திருக்கிறது :) சரி இந்த நடுவர் அனுபவமும் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் :)

BTW, அட்வைசர் என்று நான் சொன்னது, நீங்கள் நினைப்பவர் இல்லை ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹையா புது நடுவரா!!! வாழ்த்துக்கள் பிந்து! வாதங்களில் தூள் கிளப்பும் நீங்க நிச்சயமா நடுவராவும் ஜொலிப்பீங்க. திங்கள் கிழமை தலைப்போட வாங்க. வாதிட நாங்க தயாரா இருக்கோம் :)

நம்ப தோழீஸ் நடுவரை தெளிய வச்சு தெளிய வச்சு கும்முவாங்க. நீங்கதான் நல்லா ஸ்டெடியா இருக்கோணும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவிசிவா! உண்மையில், வனிதா மேடம் கேட்டு எப்படி நோ ன்னு சொல்லறது என்று தான் யெஸ் சொன்னேன் :P

நீங்க நிஜமாகவே வாழ்த்த தானே செய்றீங்க???? :D சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்:) உங்க அட்வைசுக்கு ரொம்ப நன்றி... நல்ல ஸ்டெடியா இருக்கேன்... ஓகே :)

நீங்க எல்லாம் இருக்கும் போது எனக்கு என்ன கவலை :)

ஒரு பத்து தலைப்பை shortlist பண்ணி வச்சிருக்கேன்... அதில் இருந்து ஒன்று தேர்வு செய்ய வேண்டும்...

நன்றி!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நீங்க எனக்காக ஒத்துகிட்டாலும் ஒத்துகிட்டீங்க என்பதில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. நிச்சயம் உங்களால் முடியும் என்று எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. நம்ம சீதாலஷ்மியும் சொன்னாங்க... நிச்சயம் பிந்து வந்தா நல்லா இருக்கும், கேட்டு பாருங்கன்னு. அவங்களை போல ஒரு சீனியரோட நம்பிக்கையை பெறூவது அத்தனை சுலபமில்லை. நீங்க அந்த நம்பிக்கையை ஜெயித்ததில் எனக்கு மகிழ்ச்சி. கலக்குவீங்க.

ரூல்ஸ் ஒரு முறை படிச்சுக்கங்க. தலைப்பை தேர்வு செய்துட்டு ஞாயிறு இரவு அல்லது திங்கள் காலை துவங்குங்க. வந்துருவோம் வாதாட. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிந்து நிஜம்மாவே வாழ்த்து தான் நம்புங்கோ :). தலைப்பை ரெடி பண்ணிட்டு வாங்கோ ஜமாய்ச்சுடலாம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரூல்ஸ் எல்லாம் படிக்கனுமா? இதையெல்லாம் நீங்க சொல்லவே இல்லை :O

என் மேல் நம்பிக்கை வைத்த சீதாலஷ்மி மேடத்திற்கு தேங்க்ஸ்... உங்களுக்கும் தேங்க்ஸ் :)
நீங்க சொல்லும் அளவிற்கு கலக்க முடியுமா இல்லையோ... என்னால் முடிந்த அளவு கட்டாயம் முயற்சி செய்கிறேன் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கவிசிவா, நீங்க சொன்ன வார்த்தை மீற கூடாது... அடுத்த வாரம் எல்லா நாளும் கட்டாயம் கலந்து கொண்டே ஆகனும் :P

தலைப்பு பற்றி தான் யோசிச்சிட்டு இருக்கேன் :)

நன்றி..

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்து தலைப்பு interest ஆ போடுங்க சரியா

மேலும் சில பதிவுகள்