பட்டிமன்ற சிறப்பு இழை - 3

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

Simple interestஆ? compund interestஆ?

சும்மா ஜோக் ஓகே...

கட்டாயம் நிகிலா...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மக்களே,

நம்ம வனிதாவின் லாப் டாப், எதிர்பாராத விதமாக, உடைஞ்சு போச்சு:(:(:(:(:(:(

எப்ப சரி பண்ண முடியும்னு அவங்களுக்குத் தெரியலை:(:(:(

பட்டிமன்றத்துக்கு நடுவர் தேவை, அது விஷயமாக, இங்கே ஒரு பதிவு போடச் சொல்லி, தகவல் சொன்னாங்க.

யார் வர்றீங்க, இந்த முறை நடுவராக - என்று ஒரு கன்ஃபர்மேஷன் கொடுங்கப்பா!

அன்புடன்

சீதாலஷ்மி

இங்கே இதை போட கூடாது தான் இருந்தாலும்...

என்னங்க வனிதா மேடம் ஏதோ ஒரு பட்டி மன்றம் சொதப்பிடுச்சு என்பதற்காக இப்படியா லேப்டாப்பை எல்லாம் போட்டு உடைக்கிறது? அப்படி பார்த்தால் நான் எத்தனை முறை இந்த லேப்டாப்பை உடைக்கிறது.....

சீக்கிரம் லேப்டாப்பை சரி பண்ணுங்க... இல்லை உங்க விலாசம் கொடுங்க நான் ஒரு லேப்டாப் அனுப்பி வைக்கிறேன்...

இந்த மாதிரி நீங்க வராமல் எல்லாம் இருந்தால் ரொம்ப கஷ்டம் (எனக்கு தான்....)
ப்ளீஸ்... சீக்கிரம் வாங்க... ரொம்ப எல்லாம் எங்களை எல்லாம் சோதிக்க கூடாது பாவம் தானே நாங்க எல்லோரும்???? ப்ளீஸ்... சீக்கிரம் வாங்க...

லேப்டாப் உடைந்த செய்தி இங்கே எட்டியதை போல், இந்த செய்தியும் அங்கே எட்டிவிடும் என்ற நம்பிக்கையில்....

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

//என்னங்க வனிதா மேடம் ஏதோ ஒரு பட்டி மன்றம் சொதப்பிடுச்சு என்பதற்காக இப்படியா லேப்டாப்பை எல்லாம் போட்டு உடைக்கிறது? அப்படி பார்த்தால் நான் எத்தனை முறை இந்த லேப்டாப்பை உடைக்கிறது.....//// சிரிப்பு தாங்கல :-)

வனிதா லேப்டாப் சரி ஆயிடுச்சுன்னு சொல்ல சொன்னாங்க. இருந்தாலும் இன்னமும் உள்ளுக்குள்ள டொர்ருன்னு ஒரு சத்தம் கேக்குதாம :-)
இனிமேல் அறுசுவைக்கு வந்துடுவாங்க, அடுத்த பட்டிக்கு யார் நடுவரா வரீங்க? அப்படியே சொல்லிட்டு போங்க மக்களே...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சீதாலஷ்மி... ஒரு நாள் ஆபீஸ் வந்தீங்க, உங்களை பதிவு போட வெச்சுட்டனா ;) ஹிஹிஹீ. நன்றி சீதாலஷ்மி.

பிந்து... ஆஹா... இன்னும் ஒரு நாள் லேட்டாயிருந்தா புதுசா ஒரு லேப்டாப் கிடைச்சிருக்கும் போலயே ;) வட போச்சே!!!

சுகி... நன்றி சுகி, ஆனாலும் வட போச்சே... சொல்லிருக்கலாம்ல... பிந்து புதுசா வாங்கி அனுப்பி இருப்பாங்க. :)

நடுவரா வர போறது நம்ம பிரேமா தானே??? பிரேமா.... வாங்க இங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வந்திட்டேன் வனி,

வர பட்டிக்கு நான் நடுவரா வரலாமா ன்னு உங்க கிட்ட கேட்கலாம்னு இருந்தேன், அதுக்குள்ள நீங்களே கூப்பிட்டுடீங்க. தலைப்புகள் தான் தேடிட்டு இருக்கேன், எனக்கு ரொம்ப பிடிச்ச தலைப்பு நு பார்த்தால் அதில் ஏற்கனவே பட்டி நடந்து முடிஞ்சிருக்கு.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

தோழிகளே நகைச்சுவையுடன் சேர்த்து சிந்திக்கவும் கூடிய நல்ல தலைப்புகளை எல்லாம் போடுங்கப்பா.

என்ன இவ்ளோ நேரம் யோசிச்சும் ஒன்னும் வரலையா?

கையில் உங்க கம்ப்யுட்டர் மவுசை எடுத்து மண்டையில் தட்டி தட்டி மூளையிடம் கேளுங்க பா.. பிறகு பாருங்க புது புது தலைப்புகள் கொட்டோ கொட்டோன்னு கொட்டும்.
ஹி ஹி ஹி இதை எல்லாம் சீரியஸா எடுத்துக்க புடாது, இது சும்மா காமிடிக்கு.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நன்றி நன்றி நன்றி :) தலைப்பு தானே.. அதுக்க நம்ம மக்கள் பஞ்சமே வைக்க மாட்டாங்க. இன்னும் 3 நாள் இருக்கே... கிடைச்சுடும். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடுத்த பட்டிமன்ற நடுவர் யார்??!! விருப்பம் உள்ளவர்கள் வாங்க... இல்லைன்னா நான் பேரை சொல்லி அழைப்பேன் ;) நோ சொல்ல கூடாது.

வார இறுதி... சீக்கிரம் வாங்க தோழிகளே !!

லாவி... தளிகா... பிந்து... சீதாலஷ்மி... கனிமொழி... பூர்ணிமா... தேன்மொழி... உத்ரா... ரம்யா... கல்பனா... ரூபி... கவிசிவா... பிரியா ஜெயராம்... நிகிலா... ஜைனா... ஜென்னி வினோ... ரேணுகா... சுபா... சுகி... பூங்காற்று... மற்ற தோழிகள்... (இளவரசி ஊருக்கு போறாங்க, பிரேமா இப்ப தான் முடிச்சாங்க... மற்ரவர்கள் பெயர் விட்டிருந்தா மன்னிக்கணும்... நினைவில் நின்றதை தட்டி இருக்கேன்...) யார் வர விரும்பறீங்க... முன் வாருங்கள் தோழிகளே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அடுத்த பட்டிக்கு நான் நடுவரா இருந்து ஆரம்பிக்கறேன்ப்பா..... ரொம்பநாள் ஆயிடுச்சு....:-))

மேலும் சில பதிவுகள்