இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.
இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.
முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.
பட்டிமன்ற விதிமுறைகள்:
1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.
2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.
http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107
3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.
4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.
8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
அடுத்த நடுவர் ரேணு
வருக வருக... மிக்க மகிழிச்சி. வாழ்த்துக்களும் கூட. :) ஆரம்பிங்க. ஞாயிறு இரவு அல்லது திங்கள் காலை.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி,
வனி, இந்த இழையின் ஆரம்பத்தில்,பட்டி விவரங்கள் 67 உடன் நிற்கிறது. கொஞ்சம் கவனிங்களேன்,தோழிகளை தலைப்புகள் கொடுக்க சொல்லுங்கள். மேலும் இந்த பட்டி எப்படிப்போகனும்? அதாவது சீரியஸ் டாபிக்கா?அல்லது சிரிப்பு டாபிக்கா? இஷ்டம் என்ன?
நடுவர் தேவை
தோழீஸ் ஆகஸ்ட் 6 ம் தேதி ஆரம்பிக்கும் பட்டிமன்றத்துக்கு நடுவர் தேவை. ஏற்கெனவே ஒரு பட்டிமன்றத்திலாவது வாதங்கள் செய்திருக்க வேண்டும். பதிவு தமிழில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. மேலும் விதிமுறைகள் இதே பக்கத்தின் மேலே தலைப்பில் இருக்கிறது. திங்கட்கிழமை ஆரம்பித்து அடுத்த திங்கள் கிழமை முடிக்க வேண்டும். விருப்பமுள்ள தோழிகள் சீக்கிரமா வாங்க. வந்து விருப்பத்தை இங்கே சொல்லுங்க. எத்தனை பேர் வந்தாலும் சந்தோஷம்தான்.. அடுத்தடுத்த பட்டிமன்றங்களுக்கும் நடுவர் தேவைப் படறாங்களே :) கூவ விட்டுறாதீங்க கண்ணுங்களா!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவிசிவா....
கவிசிவா, நீங்க ஏன் நடுவரா இருக்க கூடாது???
எப்படி நம்ம ஐடியா? :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
கவிசிவா
கவிசிவா, நீங்க முன்பு பல முறை நடுவரா இருந்திருப்பது தெரியும் ஆனால் இப்போது recent pastல் நடுவரா வரவில்லை தானே, அது தான் கேட்டேன்...
ஆனாலும் இது என்ன அதிகபிரசங்கிதனம் என்று நினைக்காமல் மன்னித்து அருளுங்கள் ;-)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
நர்மதா செல்வராஜ்
பட்டிமன்றத்துக்கு இம்முறை நடுவராக வர விரும்புறீங்களா? நீங்க நடுவராக வருவதானால் தோழிகள் கொடுத்த தலைப்பை தான் தேர்வு செய்ய வேண்டும். நடுவராக வருபவர் சொந்த தலைப்பை தேர்வு செய்ய கூடாது, தான் தலைப்புகள் இழையில் கொடுத்த தலைப்பையும் தேர்வு செய்ய கூடாது. மற்ற தோழிகள் கொடுத்ததையே தேர்வு செய்ய வேண்டும்.
தெளிவா இருக்கா? வர விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பிந்து, நர்மதா
நன்றி பிந்து. புதியவர்களும் நடுவராக இருந்து கலக்க வேண்டும் என்பதே நம் விருப்பம் :). யாரும் முன்வராத சமயத்தில் கண்டிப்பாக நடுவராக வருவேன் :). அதுக்காக இந்த வாரம் நடுவராக வரச் சொல்லிடாதீங்க கண்ணுங்களா. வழக்கம் போல் 7ம் தேதி முதல் நான்கு அல்லது ஐந்து நாட்கள் சிங்கப்பூர் பயணம் :(.
நர்மதா ந்நிங்கள் நடுவராக வர விரும்பினால் இங்கே தெரிவியுங்கள் ப்ளீஸ்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவிசிவா, பிந்து
ஓ... நீங்க ஒரு பதிவு போட்டிருக்கீங்களா?? நான் இப்ப தான் பார்க்கிறேன். நான் வழக்கம் போல தலைப்புகள் எல்லாம் எடிட் பண்ணிட்டு அங்க இருந்தே நர்மதா அரட்டையில் கேட்ட பதிவுக்கும் பதில் போட்டுட்டு போயிட்டேன். பிசியா மேடம்???
பிந்து.... கவிசிவாவை இந்த கேள்விலாம் கேட்க கூடாது.... ஆள் இல்லாதப்ப பட்டிக்கு கை கொடுக்கும் பெரிய தலைகளில் கவிசிவாவும் ஒருவர். ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கவிசிவா, வனிதா
கவிசிவா, உங்கள் விருப்பம் நிறைவேறட்டும் :)
ஆனால் அது என்ன சிங்கப்பூரில் இருந்து பட்டி மன்றத்தில் கலந்து கொள்ள கூடாதுன்னு ஏதாவது ரூல் இருக்கா என்ன? :P
வனிதா, இனிமேல் கேள்வி எல்லாம் கேட்கவே மாட்டேன்... Question வேணும்னா கேட்கிறேன்... சரி சரி திட்டாதீங்க... :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பட்டி
நான் கடைசியா நடந்து முடிஞ்ச பட்டி ல தான் கலந்துக் கிட்டேன்... நல்லா போகுது... நான் நடுவரா இருந்து பாக்கலாமானு யோசிக்கிறேன்.... வேற யாராவது விரும்பினா அவங்களே நடுவரா இருங்க... இல்லைனா நான் வரேன்.... தலைப்பு எல்லாம் ஒரு தடவை பாத்துட்டுருக்கேன்... நல்லா யோசிக்கிறாங்க பா தலைப்பை.....
நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை
நட்புடன்
கார்த்திகா ராம்குமார்