பட்டிமன்ற சிறப்பு இழை - 3

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

கார்த்திகா... இப்போதைக்கு நர்மதா வருவாங்களான்னு தான் பார்த்துட்டு இருக்கோம்... அவங்க பதில் சொன்ன பிறகு தான் தெரியும் :) அவங்க வந்தா இந்த பட்டிக்கு அவங்க நடுவர், அடுத்த பட்டிக்கு நீங்க நடுவர்... அவங்க இப்ப வரலன்னா இந்த பட்டிக்கு நீங்க நடுவர். ஓக்கே? முன் வந்தமைக்கு மிக்க நன்றி கார்த்திகா. :)

நர்மதா... வாங்க... உங்க விருப்பத்தை சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வரும் பட்டிமன்றத்தின் நடுவராக புது முக தோழி கார்த்திகா பொறுப்பெடுக்கிறார். :) வாழ்த்துக்கள் கார்த்திகா. பாராட்டுக்கள். நல்ல தலைப்போடு இந்திய நேரப்படி ஞாயிறு இரவு அல்லது திங்கள் காலை துவங்குங்க. விதிமுறைகளை ஒரு முறைக்கு பல முறை படிச்சுக்கங்க. :) கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா அக்கா. நான் புதுசா நடுவரா இருக்கிறதால சில குறைகள் இருக்கலாம். மன்னிச்சிடுங்க... ஆனா விதி முறைகளை படிச்சுட்டேன்... கலக்க முயற்சிக்கிறேன்... ஆனா அதற்கு தோழிகள் அனைவரின் ஆதரவும் தேவை... தருவாங்கணு நம்பி டபக்குனு களத்துல குதிக்கிறேன்...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

எங்கடா உக்க பதிவை காணோம்னு இருந்தேன்... குட் :) பயப்படாம வாங்க... எந்த குறையும் இருக்காது. நிச்சயம் தோழிகள் ஆதரவு உண்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புதுமுக நடுவர் கார்த்திகா அவர்களை வருக வருக என்று ஆராவாரதோடு தோழிகள் அனைவரும் வரவேர்கிறோம். இப்பொ இருக்கற ட்ரெண்டுக்கு ஏற்பஒரு டெரரான டாபிக்கோட வாங்க கார்த்திகா. ஆவலோட காத்திட்டிருக்கோம்.........

வரும் 20 - 27 நடக்கவிருக்கும் பட்டிமன்றத்துக்கு நடுவர் தேவை :) வாங்க பார்ப்போம் எல்லாரும்... இன்னும் 1 நாள் தான் இருக்கு நடுவே... அதனால் வேகமா வாங்க தோழிகளே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி! அடுத்த பட்டிக்கு நான் நடுவராய் வரலாமா? வேக்கன்ஸி இருக்கா?

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

ஆகா :) இப்படி ஒரு இனிப்பை கொடுத்து வேணுமா வேணாமான்னு கேட்டா எப்புடி?? வேணும் வேணும்... கண்டிப்பா வேணும். அவசியம் இந்த வார பட்டிமன்றத்துக்கு நீங்க தான் நடுவர். வாழ்த்துக்கள். கலக்குங்க. நன்றி பூர்ணிமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழிகளே... உதவி தேவை.

வரும் Sep 3rd - 10th வரை நடக்கும் பட்டிமன்றத்துக்கு நம்ம பூர்ணிமா நடுவரா வர முன் வந்திருக்காங்க.

இப்போ அடுத்த பட்டிமன்றம் Sep 17th - 24th நடக்க போறதுக்கு நடுவர் தேவை. ஏன் இப்பவே கேட்கிறேன்னு நினைக்காதீங்க... என் அம்மா, தங்கை எல்லாம் 15 ஆம் தேதி வருவதால் நிச்சயம் என்னால் நடுவர் யார் என அந்த சமயம் கேட்க இயலாது. பிசியா இருக்கும் அடுத்த சில வாரம். அதனால் இவற்றை இப்பவே முடிவு பண்ணிட்டா பிரெச்சனை இருகாது, தடைபடாதுன்னு பார்க்கிறேன். வாங்க... யார் விரும்பினாலும் முன்வாங்க. பட்டிக்கு கை கொடுக்கும் அன்பு உள்ளங்கள்... வருக வருக.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மக்களே... நீங்க எல்லாம் ரொம்ப லேட் பண்ணீங்க... எனக்கு 2 பட்டிமன்றத்துக்கும் இம்முறை டக்கு டக்குன்னு ஆள் கிடைச்சுட்டாங்க. வனிக்கு ரொம்ப சந்தோஷம். :) அதிர்ஷ்டம் தான்.

Sep 3rd - 10th : பூர்ணிமா

Sep 17th - 24th : லாவண்யா

இன்னும் யாராவது விருப்பம் இருந்தாலும் சொல்லுங்க, அடுத்த அடுத்த பட்டிக்கு ஷெடியூல் போட்டுடலாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்