பட்டிமன்ற சிறப்பு இழை - 3

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/10388
http://www.arusuvai.com/tamil/node/19107

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

இன்றைக்கு பட்டி ஆரம்பிக்க வேண்டிய நாள் ஆச்சே.. சரி ஆரம்பிச்சுருப்பாங்கனு நினைச்சு தலைப்பை பார்க்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதீங்க நடுவரே... ஆரம்பிங்க நடுவரே.. ஆரம்பிங்க.............

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

வனி இன்னும் ஒரு 4 பட்டியாவது கடந்தபின் (அதில் நன் கலந்து வாதாடியபின்)தான் பட்டி நடுவரா வரனும்னு இருந்தேன்.......கிண்டல் பண்ணாதீங்க சரியா,அழுதுடுவேன்......இன்று பட்டியில் கலந்துக்க பார்வையிட வந்தேன் ,யாரும் பட்டி துவங்காததால என் கை சும்மா இருக்கலை நானே பட்டியை துவங்கிட்டேன்,தவறுன்னா மன்னிக்கவும்பா......

மக்களே என்னை மன்னிக்கவும். இங்கு கொஞ்சம் வேலை இருந்ததால் சரியான நேரத்தில் ஆரம்பிக்க முடியவில்லை. இப்பொழுது ஆரம்பிக்கலாம் என்று தான் வந்தேன். அதற்குள் பட்டியே தொடங்கி விட்டது :( நன்றி ரேணுகா. சரியான நேரத்தில் பட்டியை ஆரம்பித்ததற்கு :) பட்டியை செவ்வனே நடத்த வாழ்த்துக்கள். முடியும் போது கலந்து கொள்கிறேன். இல்லையென்றால் அடுத்த பட்டிக்கு நடுவராக வரேன் ;)

கார்த்திகா ,
இந்த கடையை பூட்ட இனி தான் போட்டு தயாரிக்கணும்......என்ன இந்த தடவை கடைக்காரர் லேட் அதனால் கடைக்காரரையே மாதிட்டாங்கையா மாத்திட்டாங்க :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவி,
மன்னிக்கனும் லாவி நீங்க வராததால ஏதொவரமுடியாத காரணம்னு நினைத்து துவங்கிட்டேன்.உங்களுக்கு கோவமோ வருத்தமோ இல்லைலப்பா,மன்னிக்கவும்பா.....

எதுக்காக இப்போ நீங்க மன்னிப்பெல்லாம்.......நான் தான் முந்தைய பதிவிலே (சரியா சொல்லலையோ?!) உங்களுக்கு நன்றி சொல்லியிருக்கேனே.........என்னய்யா நீங்க போய் வேலையை பாருங்கையா....(ஸ்லாங் எல்லாம் பட்டியின் எபெக்ட் தான்)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என்னடா நடுவர் மாறி இருக்காங்கன்னு குழப்பத்தில் வந்தேன்... ஏன் இந்த குழப்பம்??!!

அன்பு ரேணு... நீங்க நேரத்துக்கு பட்டியை துவங்கியது மகிச்சியே இருந்தாலும் அதை நடுவரா வர போரதா சொன்னவங்க என்ன ஆனாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டே செய்திருக்கனும்... நான் கோவமா சொல்லல... பட்டி ஆரம்பித்த காலத்தில் நடுவர் விஷயங்களில் இது போல் பிரெச்சனைகள் வந்தது. அது மீண்டும் நடக்காமல் இருக்கவே பட்டியை ஒருவர் கண்ட்ரோலில் வைத்திருப்பது. இது போல் இன்னும் ஒருவரும் நினைத்து ஒரே நேரத்தில் இன்னொரு பட்டி இழை துவங்கி இருந்தால்???!!! இதுவும் மற்ற மன்ற இழைகள் போல் ஆகி விடும், நான் அதை விரும்பவில்லை. கூடவே முன்பு ஒரு நடுவரை முடிவு செய்து அவர் இல்லாமல் வேறு ஒருவர் துவங்கியதால் அது பெரிய பிரெச்சனை ஆனது... அழைக்கப்பட்டவர் தன்னை அவமதித்ததாக கருதினார். இம்முறை லாவண்யாவாக இருந்ததால் சாதாரணமாக எடுத்துக்கொண்டார். வேறு யாராவது கோவித்தால்?? அடுத்த முறை நடுவர் பொறுப்புக்கு அழைத்தாலும் வர மாட்டார்கள். அதனால் இது போல் நடுவராக வர இருந்தவர் என்ன ஆனார் என்று கேட்காமல் துவங்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பட்டிமறத்துக்கு என் சில விதிமுறைகள், வழிமுறைகள் இருக்கு, அதை நான் ஒரு போதும் விட்டுக்கொடுக்க இயலாது என்பதே காரணம். ஆனாலும் பட்டி தடை படாமல் துவங்கியமைக்கு மீண்டு நன்றிகள். இங்கு இதை சொல்ல காரணமே இது மீண்டும் தொடர கூடாது, வேறு யாரும் இதை செய்து விட கூடாது என்பதே... தவறாக நினைக்க வேண்டாம், சாதாரணமாகவே சொல்கிறேன், மனம் வருந்தி இருந்தால் மன்னிக்கவும்.

லாவி... இந்த வாரம் வர முடியலயா? பரவாயில்லைங்க... அடுத்த வாரம் நடுவரா வந்துடுங்க. எனக்கும் ஒரு நடுவர் தேடும் வேலை மிச்சம். ஆனா நேரத்துக்கு வாங்க. கோவிக்காமல் கேஷுவலாக எடுத்துக்கொண்டமைக்கு நன்றிகள் பல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதலில் நீங்க என்னை மன்னிக்கணும். எல்லா குழப்பத்துக்கும் காரணம் நான் சரியான நேரத்தில் பட்டியை துவக்காதனால் தான்.....

நேர மாற்றத்தால் முன்னமே தொடங்காமல் என்னுடைய ஞாயிறு இரவு (அதாவது உங்களுக்கு திங்கள் காலை) தொடங்கலாம் என்று வந்தேன். அதுவும் இல்லாமல் சில நேரங்களில் பட்டி திங்கள் காலை பத்து மணிக்கு கூட தொடங்கியிருக்கிறதல்லவா அதனால் சாதரணமாகவே எடுத்துக் கொண்டேன். கண்டிப்பாக அடுத்த முறை நேரமே ஆரம்பித்து விடுவேன் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனி நிங்கள் சொல்வது முழுக்க உண்மையே... நானும் இதை யோசித்தேன்...பட்டி விதிகளை யாருக்காகவும் மாற்றமுடியாது என்பதில் எனக்கும் உடன்பாடே....நீங்கள் சுட்டிக்காட்டியதை நான் கண்டிப்பா கோவமா எடுத்துக்கலைப்பா,மீண்டும் இப்படி நடவாது.....நன்றிகள் பல வனி,
லாவி மீண்டும் மன்னிப்பு கேட்கிறென்.எதுக்குன்னு கேட்காதீங்க, நேர வித்யாசத்தால் தாமதமானதை நீங்கள் வர இயலையோன்னு நினைத்துவிட்டேன்.ம்ன்னியுங்கள்,வனி சொன்னதுபோல நன்றிகள் பல கோவப்படாமல் இருந்ததற்கு.(கொஞ்சம் அவசரப்பட்டுட்டனோ....:-()

என்ன தோழிகளே பட்டி ஆரமித்து மூன்று நாள் ஆகிவிட்டது இரன்டு பக்கம் கூட தான்டவில்லை. வாதாட ஆள் இல்லய்யா? அல்லது டாப்பிக் சரியில்லையா?இவ்வலவு அமைதியா இருக்கே.......

லாவி... இம்முறை வந்து துவங்கிடுங்க. இப்படி ஒரு ஸ்பெஷல் பட்டியை நீங்க நடுவரா இருந்து நடத்த தான் போன பட்டிமன்றம் மிஸ் ஆனதோ என்னவோ :) வாழ்த்துக்கள்.

தோழிகளே... அவங்க யூ எஸ் நேரப்படி வருவதால் கொஞ்சம் தாமதமானாலும் கோவிக்காம எல்லாரும் பங்கெடுத்துக்கங்க. :) நன்றிகள் இப்போதே. போன வார பட்டிமன்றம் போல் தூங்க விட்டுடாதீங்கன்னு அன்போடு கேட்டுக்கறேன். இம்முறை பெரிய தலைகள், புதிய முகங்கள் எல்லாரும் அவசியம் பங்கெடுக்கனும். ஓக்கே?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்