கர்ப்பம் பற்றிய சந்தேகம்

வணக்கம் தோழிகளே! நான் சிந்து. எனக்கு திருமணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது. குழந்தைக்காக காத்திருக்கிறோம். பெப்ரவரி மாசம் நாள் தள்ளி போச்சு. வீட்லயே டெஸ்ட் பண்ணி பாத்ததுல positive நு வந்தது. 40 நாளுக்கு அப்பறம் மறுபடியும் மாத விலக்கு ஆகிட்டேன். டாக்டர் கிட்ட செக் பண்ணினோம், அவங்க early miscarriage நு சொல்லிட்டாங்க. மார்ச் மாதமும் மாத விலக்கு ஆகிட்டேன். போன மாதம் 25 ஆம் தேதி மாத விலக்கு ஆச்சு. இன்னும் 10 நாள் இருக்கு இந்த மாதம் மாத விலக்கு ஆக. ஆனா எனக்கு ரொம்ப அசதியா இருக்கு. breast ம் பெருசான மாதிரி இருக்கு. breast ல வலியும் இருக்கு. நெஞ்சும் கரிச்சுகிட்டே இருக்கு. இது எல்லாம் நான் மசக்கை அகிரதுக்கான அறிகுறியானு சொல்லுங்கள் தோழிகளே. கனவுகளுடன் உங்கள் பதில்களுக்காக காத்திருக்கிறேன்.

எனக்கு தெரிந்த தோழி ஒருவருக்கு இப்படித்தான் இருந்ததது. அவ கன்சீவாகி விட்டா. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடல் நிலை.எதற்கும் மனதைப்போட்டு அலட்டிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருங்கள். நல்ல செய்தி கூற பிரார்த்திக்கின்றேன்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

உங்க பதிலுக்கு மிகவும் நன்றி தோழி. பெப்ரவரி மாதத்தில் நான் அம்மா ஆக போறேன்னு நெனைச்சு ஏமாந்து போயிட்டேன். இன்னும் ஏக்கத்துடனே இருக்கிறேன். எங்க ரெண்டு பேர் வீட்லயும் ரொம்ப எதிர் பாத்துட்டு இருக்காங்க. எங்களுக்குமே ரொம்ப ஆசையா இருக்குங்க. உங்க பதிலை பாத்த உடன் தான் நிம்மதியா இருக்கு.

அனைத்தும் நன்மைக்கே.

சிந்து எனக்கும் நெஞ்சு பெரிதான மாதிரி இருக்கு,வலி இருக்கு,எனக்கு திருமனம் ஆகி 1 வருடம் ஆட்சு,இர்ரெகுலர் ப்ரிஎட்ச் ,ப்ரெக்னன்ட் ஆக போன மாதம் ubinene tabulet after 5 days of periods குடுத்தார்கள்.இப்பொ 29 டேஸ் ஆச்சு..பார்போம்,நான் உங்கலுக்கு நல்லது நடக்க இறைவனை வேண்டுகிரேன்.na innum test pannala,...

ரொம்ப நன்றிங்க. உங்களுக்கு இர்ரெகுலர் period-னா நீங்க இன்னும் ஒரு 10 days கழிச்சு டெஸ்ட் பண்ணி பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு நல்ல ரிசல்ட் தான் வரும். உங்களுக்கு நல்ல ரிசல்ட் வரணும் நு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன். அது வரையிலும் ரொம்ப careful - ஆ இருங்க. வெயிட் ஏதும் தூக்காதீங்க. நல்ல ரெஸ்ட் எடுங்க. அதிகம் குனிந்து எந்த வேலையும் செய்யாதீங்க. இது எல்லாம் நான் முன்னாடி நாள் தாண்டி இருந்த அப்போ எங்க அம்மா சொன்னாங்கங்க,
அப்புறம் சிக்கன், புளி இதெல்லாம் சாப்பிடாதீங்க. ஏன்னா இது எல்லாம் உடம்புக்கு heat நு சொல்லுவாங்க. இந்த டைம் ல உடம்பு heat - ஆக கூடாதுங்க. ரொம்ப careful ஆ இருங்க. சீக்கிரமே ஒரு நல்ல செய்தி சொல்லுங்க. வெயிட் பண்ணிட்டு இருப்பேங்க உங்க பதிலுக்காக.

அனைத்தும் நன்மைக்கே.

நீங்க கவலை படாம இருங்க நல்லதே நடக்கும். உங்களுக்காக நான் கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன். சிந்து

ரொம்ப நன்றிங்க Radha

அனைத்தும் நன்மைக்கே.

தாங்ஸ் சிந்து உங்களுடைய வார்த்தைகள் எனக்கு ஆருதலாக உள்ளது,விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள் ,எனக்கு நல்லது நடந்த ந உங்கலுக்கு தான் முதலில் சொல்லுவேன்,நன்றீ

சரிங்க. கண்டிப்பா சொல்லுங்க. சீக்கிரமே சொல்லுங்க. சந்தோசமா இருங்க. உங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டிகிரேங்க. நானும் இன்னும் ஒரு 20 கழிச்சு சொல்றேங்க.

அனைத்தும் நன்மைக்கே.

எனக்கு 3 நாளா வெள்ளைபடுதல் இருக்கு,அது வேற பயமா இருக்குபா,பார்க்களாம்

வெள்ளைபடுதலும் கர்பத்திர்கான அறிகுறியே. கவலை படாம மனச ரிலாக்ஸ் ஆ வச்சுகோங்க. நல்லதே நடக்கும்.

அனைத்தும் நன்மைக்கே.

மேலும் சில பதிவுகள்