Tailoring classes in Bangalore or Hosur

I would like to learn tailoring.
currently i stay in Bangalore.
Can anyone let me know if u know any good tailoring classes in bangalore or Hosur or any online tailoring classes.
Any pointers would be highly appreciated

இன்னொரு இழை ஆரம்பிக்க மனதில்லை.தையல் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை.என் வீட்டின் பக்கத்தில் சொல்லித்தருகிறார்கள்.என் பையனை கூட்டிச்சென்று கத்துக்கலாமா?1 வயது 7 மாதம் நடக்கின்றது.

தையல் டிச்சர் பையனையும் பார்த்துக் கொண்டு கத்துக்குங்கன்னு சொன்னாங்க.பையனை வைத்துக் கொண்டு கத்துக்க முடியுமா.
வீட்டில் பவர் மெஷின் இருக்கு...

அன்பு தோழி. தேவி

இன்னொரு இழை ஆரம்பிக்க மனதில்லை.தையல் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை.என் வீட்டின் பக்கத்தில் சொல்லித்தருகிறார்கள்.என் பையனை கூட்டிச்சென்று கத்துக்கலாமா?1 வயது 7 மாதம் நடக்கின்றது.

தையல் டிச்சர் பையனையும் பார்த்துக் கொண்டு கத்துக்குங்கன்னு சொன்னாங்க.பையனை வைத்துக் கொண்டு கத்துக்க முடியுமா.
வீட்டில் பவர் மெஷின் இருக்கு...

அன்பு தோழி. தேவி

//பையனை கூட்டிச்சென்று கத்துக்கலாமா?// வேண்டாமே! முடிந்தால் வீட்டில் யாருடனாவது குழந்தையை விட்டுவிட்டுப் போகலாம். ஓடித் திரியும் குழந்தையை ஒரு இடத்தில் வைத்திருக்க முடியுமா? நீங்க தையல் பராக்கில் இருக்க குழந்தை எதையாவது ஆபத்தை இழுத்து வைக்கப் போகிறது. குழந்தை மேல் கவனம் இருக்க, உங்களால் தையலில் நிம்மதியாகக் கவனம் செலுத்தவும் முடியாது.

//தையல் டிச்சர் பையனையும் பார்த்துக் கொண்டு கத்துக்குங்கன்னு சொன்னாங்க.// அவங்க தொழில் அவங்களுக்கு. அவங்க, தானே பார்த்துப்பாங்கன்னு சொன்னாங்களா? இல்லைல்ல! அப்படிப் பார்த்துக்கிறதா சொன்னாலும் கூட இது நல்ல யோசனையாத் தெரியல.

//வீட்டில் பவர் மெஷின் இருக்கு.// அதற்கும் தையல் படிக்கப் போறதுக்கும் எதுவும் இல்லையே! நீங்க குழந்தை தூங்கும் போது தைக்கிறது நல்லது. வேலை முடிஞ்சதும் நினைவா பவரை டிஸ்கனெக்ட் பண்ணி ப்ளக் பின்னை குழந்தைக்கு எட்டாத இடத்தில வைச்சுருங்க.

‍- இமா க்றிஸ்

தையல் வகுப்பில் வித‌ விதமான பொத்தான்கள், ஊசிகள், நூல் கண்டுகள், கொக்கிப் பொத்தான்கள், கத்தரிக்கோல்கள், சரிகை, லேஸ்,சம்கி இவற்றில் சிலதாவது அங்கு வரும் பலபேரிடம் இருக்கும் அல்லவா? அவரவர்கள் அவர்க்ளின் வேலையைத் தான் பார்ப்பார்களே
தவிர‌ மற்றதைப் பார்க்க‌ மாட்டார்கள். போதாக் குறைக்கு ஓடுகின்ற‌
மிஷினில் குழந்தை கையை விடவும் வாய்ப்பு உண்டு,
வீட்டில் தையல் வேலை செய்தாலே விவரம் தெரியாத‌ குழந்தைகளை
மிஷினின் அருகில் விடவே கூடாது. இமா அவர்கள் சொன்னதை சற்று
யோசியுங்கள்.
குழந்தையை வீட்டில் விட்டு விட்டுச் செல்வது தான் புத்திசாலிப்
பெண்ணுக்கு அழகு.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

இருவருக்கும் ரொம்ப நன்றி,இதையெல்லாம் யோசித்துதான் இன்னும் சேராமல் இருக்கிறேன்.இன்னும் அதிகமாக சொல்லி புரிய வைத்துருக்கிங்கம்மா...

நாங்க தனியாக தான் இருக்கிறோம்.வீட்டில் கன்சல்ட் பண்ணிட்டு தான்ம்மா சேரணும்மா.

அன்பு தோழி. தேவி

அம்மாடி குழந்தைய வச்சுக்கொண்டு தையலா.உங்களுக்கு பதில் கிடத்திருந்தாலும் என் அனுபவத்தை சொல்லாமல் போக விரும்பவில்லை.நான் பிள்ளைகள் தூங்கிய பிறகு இரவு நிறைய லைட் போட்டு ஹாலில் வைத்து தைப்பேன்.அதுவும் மெஷின் வெளியில் எடுப்பதில்லை. எல்லாம் ஸ்டோர் ரூம் ல் உயரத்தில் இருக்கும்.
தேவைப்பட்டதை ஒன்று ஒன்றாக எடுத்து வருவேன் உதாரணம் நூல் முடிஞ்சா உயரத்தில ஏறி நூல் ஐ எடுத்து கோத்து விட்டு அங்கயே வைத்து விடுவேன்.ஒரு பட்டன் எடுத்து வருவேன் தைத்து முடிய இன்னொரு தடைவை போய் எடுத்து வருவேன்.அந்த ஒரு தையல் ஊசியை எடுத்த இடத்தில் வைக்கும்போது கவனமா உடைஞ்சு விழுந்திருக்கா என்பதெல்லாம் பாத்தே வைப்பேன்.

ஒரு நாள் தங்கூசி நூல் சட்டைக்கு வைத்து தைக்க வேண்டி இருந்தது மெஷின் இல்லாமல் தைக்க முடியவில்லை.
என் கணவர் நான் குழந்தைகளை அரை மணிநேரம் பாத்து கொள்கிறேன் நீ ரூம் ஐ பூட்டீட்டு தை என்றதும் நானும் போய் தைக்க தொடங்கினேன்.5 நிமிசத்தில் பாக்க முடியவில்லை தண்ணி வேணும் ,குக்கி வேணும்,தலையை பிய்க்கிறா,என் தோளில ஏறுறாள் எண்டெல்லாம் சத்தம். வந்து சமாதானம் செய்து விட்டு போன் ம் வர மெஷின் எடுத்து வைச்சதை மறந்தே போனேன்.

2 நிமிஷத்தில் 2 பேரும் ரூம் க்கு ஓடினால் மெஷின் ஊசி பட்டன் சின்ன சின்ன மணிகள் எல்லாம் சிதறி போட்டுட்டு அதுக்குள்ள துள்ளி குதிச்சு
விளாடினம்.

2 வயசு குட்டி ஊசிதான் கைல வச்சிருக்கிறா.அவோக்கு வாய்க்குள்ள வைக்கிற பழக்கம் வேற இருக்கு.

எதுவும் ஆகவில்லை ஆயினும் 2 பேரும் அந்த அன்று பட்ட துன்பம் ,பதட்டம் ஸ்ஸ்ஸ்ஸ்பபாடா.

மிக மிக மிக ஆபத்தான சாமான்கள் தையல் பொருட்கள்.ஸ்கூல் போகட்டும் பொறுமையாக இருங்கள்.

ரொம்ப நன்றிப்பா.இரண்டு பசங்க.பெரியவன் ஸ்கூல் போறான்.சின்னவன் ஸ்கூல் போனதும் வேலைக்குப் போலாம்ன்னு இருந்தேன்.

நீங்க சொல்வதை கேட்கும் போது எனக்கும் ஒருவித பதற்றம் வருது.பொறுமையாக இருக்கிறேன்.

அன்பு தோழி. தேவி

//சின்னவன் ஸ்கூல் போனதும் வேலைக்குப் போலாம்ன்னு இருந்தேன்.// அது தாராளமாகப் போகலாம். பிரச்சினை இல்லை. எத்தனையோ பேர், வீட்ல குழந்தைகளை வைச்சிட்டு வேலைக்குப் போறாங்க. எங்கம்மா எங்களை விட்டுட்டு போனங்க. நானும் வேலைக்குப் போய்ருக்கேன். அது வேற இது வேற.

தையற் போருட்கள் எல்லாமே குட்டி குட்டியாக இருக்கும். வாய்ல, மூக்குல, காதுல போட்டுட்டா பிரச்சினை என்கிறோம். ஊசியால கண்ல குத்திட்டா வேற வினையே வேணாம். இதுக்குப் பயந்துட்டு வேலைக்குப் போகாம இருக்கச் சொல்லல உங்களை.

பையனுக்கு இப்ப உள்ள வயசை வைச்சு எங்க அபிப்பிராயத்தைச் சொன்னோம். இன்னும் 2 வருஷம் கழிச்சு கேட்டிருந்திங்கன்னா எங்க பதில் வேறாக இருக்கும். அதையே 4 வருஷம் கழிச்சு கேட்டிருந்தீங்கன்னா, இன்னும் வேற விதமா பதில் கிடைச்சிருக்கும். :-)

‍- இமா க்றிஸ்

உங்களுடைய பதிலுக்கு நன்றி ம்மா.வீட்டில் டைம் வேஷ்ட் ஆகுற மாதிரி பிலீங்.அதன்ம்மா ஏதாவது கிளாஷ் போலாம்னு.

என் கணவன் வீட்டில் இருக்கும்போது பார்த்துக்கிறேன்னு சொன்னாங்க.2 மணி நேரம்.ஷிப்ட் தான் அவுங்க ஒர்க்.தையல் டிச்சரும் டைமிங் இல்லைன்னு சொன்னாங்க.என்ன பண்ணலாம்னு யோசிக்கனும்....

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்