பட்டி மன்றம் - 63 எப்படிப்பட்ட பேச்சு சிறந்தது

அன்பு தோழிகளே !!!!!!!

நெடு நாட்களுக்கு பின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்த ஒரு சந்தர்பத்தை அமைத்துக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் பட்டி தொடங்குகிறது.

பட்டியின் தலைப்பு :

/இன்றைய சுழலுக்கு மனதில் இருப்பதை அப்படியே பட்டென்று வெளிப்படையாக கூறும் குணம் ஏற்றதா? அ சிறந்ததா ? /
( எ கா : எல்லா சமயத்திலும் வெளிபடையாக பேச முடிவதில்லையே ? .அதனால் எத்தனை பிரச்சனைகளை நாம் சந்தித்து இருப்போம் ?.சுற்றத்தை இழக்க நேரிடாதா ? )
அல்லது

/மனதில் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசும் குணம் ஏற்றதா? அ சிறந்ததா ? /
( எ கா : கோவமாக வீடு திரும்பும் வரும் போது வயதான பெற்றோர்
ஏதாவது பேசினால் பட்டென முகத்தை காட்ட முடியுமோ ? அதிகாரியை பிடிக்காவிட்டால் அதை சொல்லத் தான் முடியுமா? இடம் பொருள் ஏவல் என்பது பின் எதற்கு?

என்ன தோழிகளே .. வாதத்திற்கு தயாரா? இன்றைய கால கட்டத்தை யதார்த்தமாக யோசித்து அணியை தேர்வு செய்யுங்கள்.
இந்த தலைப்பை கொடுத்த வனிதாவிற்கு நன்றி. சிறு மாற்றத்தோடு தலைப்பை கொடுத்துள்ளேன்.
யார் அங்கே ..... கலை கட்டட்டும் விவாத மேடை ..

பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
6.நடுவரின் தீர்ப்பே இறுதியானது.அதை பற்றிய விமர்சனம் வேண்டாம்.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)

அன்பு நடுவர் ரம்யாவுக்கு காலை வணக்கம். எப்பொழுதும் மனதில் பட்டதை நாம் பேசிவிட முடியாது. இடம், பொருள், ஏவல் அறிந்து தான் பேச வேண்டும். அதனால “மனதில் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசும் குணம் தான் ஏற்றது” அணிக்கு வாதாட வந்துருக்கேன்!!!

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

பட்டி நடுவருக்கு முதற்க்கண் வணக்கமுங்க!

உங்க தலைமையில் பட்டியில் வாதாட கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுடுவேனா? தோ வந்துட்டேன்.....ஆனா டவுட்............வரக்கூடாது தான் ஆனா வந்திடுச்சி......மனதில் பட்டதை நாசூக்காக சொல்வது வெளிப்படையாக சொல்வது அணியில் சேருமா இல்லை உல் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் அணியா?

கோச்சிக்காம சொன்னீங்கன்னா அணியை தேர்ந்தேடுத்துடுவேன்!

பட்டி வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவருக்கு வந்தனங்கள். /மனதில் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசும் குணம் ஏற்றது என்பதில் வாதிடச் முடிவு செய்திருக்கேன். அது காலத்திற்குப் பொருத்தமாய் இருக்கிற்து . பின்னர் வாதங்களோடு வருகிறேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நாசுக்காக சொல்வது என்பது மனதில் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசுவதில் தான் வரும்.ஏனெனில் நாசுக்கா பேசுவது என்பதே வார்த்தைகளை வடிக்கட்டி சொல்ல வேண்டிய சுழலில் தள்ளிவிடும்.மேலும் நம் மனதில் அச்சம்வத்திர்காக வரும் கோபம் , வருத்தம், அழுகை என எந்தவித உணர்ச்சி தோன்றினாலும், அதை மறைத்து வெளிப்படுத்த வேண்டிய நிலையும் ஏற்படும்.பட்டென மனதில் இருப்பது வார்த்தையாகவும், உணர்ச்சியாகவும் வெளி வராத அனைத்துமே உள் ஒன்று வைத்து வெளி ஒன்று வெளிப்படுத்துவதற்கு தான் சமம்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உடனுக்குடன் (தெளிவாக) பதில் கொடுத்த நடுவருக்கு மிக்க நன்றி! டவுட் கிளியர்....சோ அணியும் ரெடி. நான் " வெளிப்படையாக பேசுவதே சிறந்தது" என்ற அணியில் வாதிட உள்ளேன். வாதத்துடன் வருகிறேன்!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அடடா... நான் கொடுத்த தலைப்பா!!! மிக்க நன்றி நடுவரே. :) அதை விட மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு பின் உங்களை சந்திப்பது, அதுவும் பட்டியின் நடுவராக சந்திப்பது :) பேரானந்தம். வாழ்த்துக்கள்.... :)

நம்ம அணியை கேட்கனுமா??? “பூசி மொழுகி, பாலிஷா பேசுறது தான் எப்பவும் சரிவரும்”

ஒரே ஒரு சாம்பிளோட என் வாதத்தை துவங்குறேன்...

ஒருவர் நான் வெளிய கிளம்பும் போது கையில் இருந்த டீயை என் மேல தெரியாம ஊத்திட்டாருன்னு வைங்க... உடனே உள்ளுக்குள் என்ன தோணும்??? “எருமை மாடு..”னு தோணும் எனக்கு... ;) [நாகரீகமா இல்லைன்னு கோவிக்காதீங்க... உணமையை சொல்றேன். பாருங்க மனதில் பட்டதை சொன்னா நாகரீகமே இல்லாம இருக்கு.]

ஆனா அதை டக்குன்னு பேசிடாம அவரை ஒருமுறை பார்த்தா... ச வயசானவர்... பாவம் தெரியாம பண்ணிட்டது அவர் முகத்திலேயே தெரியுது... இருந்தாலும் உள்ளுக்குள் வந்த கோவம் போகல, ஆனாலும் வெளிய காட்டிக்க முடியுமா??? அவர் சரிமானு சொன்னா பொய்யா முகத்தில் கோவத்தை மறைத்து “பரவாயில்லைங்க”னுடு போவேன். இது தான் நடைமுறையில் சாத்தியம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டியை உடனே துவக்கிய அன்பு நடுவருக்கும் இனிய தோழிகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.. :)

சந்தேகமே இல்லாமல் வெளிப்படையாகப் பேசுவது தான் சிறந்தது.. அணித் தேர்வு மட்டுமே இப்போது.. பிறகு வாதங்களுடன் வருகிறேன்..

நடுவருக்கும், அறுசுவைத் தோழிகளுக்கும் வணக்கம்!!
நடுவரே!!
வெளிப்படையாக பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு மனிதனின் உண்மை முகம் இதில்தான் வெளிப்படும். ஒருவருடைய கேரக்டரை அறிந்து நம் வாழ்க்கையில் இணைக்க உதவும்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் எப்படி சரியானவர்களாக இருக்க முடியும்? நம்மிடம் நம்மை பற்றி ஆஹா!! ஓஹோ!! என்று புகழ்ந்து பேசிவிட்டு, மற்றவரிடம் போய் நம்மை மட்டமாக பேசுவதை எப்படி ஏற்றுகொள்ள முடியும்? மாறாக நம்மிடமே நம்முடைய குறைகளை சொல்லி விட்டால் அவர் மேல் மதிப்பு ஏற்படுமே!!

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

ஹல்லோ பட்டி பிரண்ட்ஸ் ,

நடுவர் தோழி ரம்யாவுக்கும், சிறப்பான தலைப்பை கொடுத்த தோழி வநிதாவுக்கும் வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள்.

பட்டி என்ன தலைப்பா இருக்கும்னு யோசிச்சதுக்கு , விருந்து வைக்கறா மாதிரி அருமையான தலைப்பையே கொடுத்துருக்கீங்க.

இப்போ காலத்துக்கு எந்த மாதிரி இருக்கறது நல்லது என்பதை கூட அவரவர் விருப்பம் பொறுத்தே அமையும் இல்லையா ?

நாசுக்கா இருக்கறது மத்தவங்களுக்கு வேணா நல்லது என்றாலும், வெளிப்படையா பேசுவது நமக்கு எப்பவும் நல்லது

சோ நாம வெள்ளந்தியா இருக்கற வெளிப்படை கட்சிங்கோ

அப்புறம் வரேன் வாதங்களோட

நடுவரே,

மனதில் இருப்பதை அப்படியே பட்டென்று வெளிப்படையாக கூறும் குணமே ஏற்றது சிறந்தது என்று ஒட்டு போடுகிறேன். முடிந்தால் முடியும் போது வாதங்களோடு வருகிறேன்.

தோழி ரம்யா,
இது 63வது பட்டிமன்றம் என்று நினைக்கிறேன். 66 என்று பதிவாகியுள்ளது.

மேலும் சில பதிவுகள்