க்ரீன் குருமா

தேதி: April 17, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (8 votes)

 

பச்சை பட்டாணி - கால் கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
பீன்ஸ் - 5
தக்காளி - ஒன்று
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 4
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
சோம்பு - கால் தேக்கரண்டி
கசகசா - கால் தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
தாளிக்க :
கடுகு - கால் தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை


 

அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பீன்ஸ், மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைபருப்பு தாளிக்கவும்.
அதில் கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்க்கவும்
பின்பு அதில் பட்டாணி, பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
அரைத்த மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நெய் தோசையுடன் பரிமாற க்ரீன் குருமா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பிரியா,
மொறு மொறு தோசையுடன் க்ரீன் குர்மா சூப்பரா இருக்கு.படங்களும் பளிச்சுனு வந்திருக்கு.கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கிறேன்.தொடர்ந்து குறிப்புகள் கொடுங்க.வாழ்த்துக்கள்.

Priya kuruma pakkupotha nallairuku.antha moru moru dosaioda enaku kudthuduga.

Be simple be sample

ப்ரியா, க்ரீன் குருமா பார்க்கும் போதே பச்சை பச்சேல்னு கலக்கலா இருக்கு. நிச்சயம் ஒரு நாள் செய்துடுவோம். படங்களும், அளித்த விதமும் மிகவும் அழகு. கடைசி ப்ளேட் எனக்கு தானே? ;) வாழ்த்துக்கள் ப்ரியா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் பிரியா கிரீன் குருமா சூப்பரா இருக்கு இன்னைக்கு நைட் நான் இதை ட்ரை பண்றேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

கடைசி படத்தில் குருமாவைவிட தோசை கலக்கல். நானும் இதே முறையில்தன் செய்வேன். வாழ்த்துக்கள்!

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

நல்லா கலர்ஃபுல் குருமா :) சூப்பரா இருக்கு கடைசி படமும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கல்ர்ஃபுல் குருமா அருமையா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ப்ரியா எப்படிங்க இவ்வளவு சிம்பிளா சூப்பர் குறிப்பு கொடுத்து இருக்கீங்க நிச்சயம் நான் ட்ரை பண்ணுவேங்க. அதுவும் அந்த தோசையோட பார்க்க சாப்பிட ஆசையா இருக்கு.

Thanks for the simple steps.. the kuruma is very tasty.....

வாழ்த்துக்கள்.

ஈசியான சூப் ரெசிபி குடுதிருகிங்க... பார்கவே நாக்கு ஊருது, நிச்சயம் செய்திடவேண்டியது தான்.

ஒரு சின்ன சந்தேகம், இந்த கிரீன் குருமா சப்பாத்திக்கு செட் ஆகுமா?

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்