கேரமல் கஸ்டர்ட்(Flan)

தேதி: April 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (8 votes)

 

பால்(whole milk) - ஒரு கப்
சர்க்கரை - கால் கப்
முட்டை - 2
வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி
ஜாதிக்காய்/nutmeg (துருவியது) - கால் தேக்கரண்டி


 

கால் கப் சர்க்கரையில் பாதியளவு எடுத்து, இரண்டு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். சர்க்கரை பாகு, ப்ரவுன் நிறத்துக்கு வரும் வரை கிளறி கேரமல் தயாரித்துக் கொள்ளவும். தீய்ந்து விடாமல் கவனமாக செய்யவும்.
கஸ்டர்ட் செய்ய பயன்படுத்த போகும் அவன் சேஃப் கிண்ணங்களை வெண்ணெய் தடவி தயாராக வைத்துக் கொள்ளவும். அதில் கேரமல் ஊற்றி ஆற விடவும். சிறிது நேரத்தில் கேரமல் நன்கு கெட்டியாகிவிடும்.
மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அடித்து கொண்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின்னர் பாலை சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் வெனிலா எசன்ஸ் மற்றும் ஜாதிக்காய் துருவி சேர்க்கவும்.
கேரமல் ஊற்றி வைத்துள்ள கிண்ணங்களை ஒரு பேக்கிங் ட்ரேயில் வைத்து, பால்-முட்டை கலவையை (முக்கால் பங்கு) ஊற்றவும்.
இப்போது பேக்கிங் ட்ரேயில் கொதிக்கும் நீரை ஒரு இன்ச் அளவு நிரப்பவும்.
அவனை 375 F க்கு முற்சூடு செய்து கொண்டு, 35 முதல் 45 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். டூத் பிக் கொண்டு வெந்ததை உறுதி செய்து கொள்ளவும்.
அரை மணி நேரம் ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் எடுத்து வைக்கவும். அடிப்பகுதி ப்ரவுன் நிறமாகவும், மேற்பகுதி வெளிர் மஞ்சள் நிறத்திலும் அழகான ஃப்ளான் கிடைக்கும்.
இரண்டு மணி நேரங்கள் கழித்து, சர்விங் ப்ளேட்டில் கவிழ்த்து வைக்கவும். கேரமல் உருகி மேலே சிரப் போல கிடைக்கும். சுவையான, எளிதில் செய்யக்கூடிய கேரமல் கஸ்டர்ட் தயார்.

இந்த கஸ்டர்ட் செய்ய, பாலுடன் விப்பிங் க்ரீம் சேர்க்கலாம். ஜாதிக்காய் இல்லையெனில் வெனிலா எசன்ஸ்(அரை தேக்கரண்டி) மட்டும் போதும். விருந்துகளில் பரிமாற முந்தைய நாள் இரவே செய்து ஃப்ரிட்ஜில் வைத்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டெஸர்ட்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்த்ததும் தெரிஞ்சுடுச்சே நீங்கன்னு... (மேட்டு தான் கல்ப்ரிட் ;)) ரொம்ப அழகா செய்து காட்டி இருக்கீங்க. எனக்கும் இது ரொம்ப விருப்பம். ஊருக்கு போய் அவனில் செய்து பார்க்கிறேன், எப்பவும் அடுப்பிலே தான் செய்திருக்கேன். :) உங்க முறையில் முயற்சிக்கிறேன். சூப்பரா இருக்கு ப்ரெசண்டேஷன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரான கஸ்டர்ட்,அழகா வந்திருக்கு,அவனில் செஞ்சதில்லை,ஸ்டீம் பண்ணுவேன்.இப்படியும் செய்யலாம் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன்.

hi
caramel custard parkave romba alaga irukku, sapita innum supera irukkumnu ninaikiren, kandipa try panren, valthukkal.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரொம்மப அழக செய்து இருக்கீங்கா வாழ்த்துக்கள்;).., அவனில் மட்டும் தான் செய்ய முடியுமா????

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

அன்பு, குறிப்பை பார்த்ததும் நீங்க தான்னு பளிச்சுன்னு தெரிஞ்சுடுச்சு. வனிதா சொன்ன மாதிரி கல்ப்ரிட் அந்த மேட் தான் ;)) குட்டி குழந்தைக்கும் புரியும்படியாக அழகான விளக்கங்களோடும், தெளிவான படங்களோடும் நீங்க குறிப்புகள் தருவது உங்க தனிச்சிறப்பு. இதில் ஒரு டவுட்டு பா. பாலில் முட்டை போட்டு அடித்து எசன்ஸ் எல்லாம் கலக்கிட்டு வடி கட்டுவாங்களே. இதில் அப்படி பண்னாம செய்திருக்கீங்க. இப்படியும் செய்யலாமா? கடைசி படம் குறிப்புக்கேற்ற ப்ளேட் கலக்குது அன்பு. வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஷர்ஷா,
கேரமல் கஸ்டர்ட்/ஃப்ளான் ரொம்ப சுலபமா, அருமையா செய்து காண்பித்து இருக்கிங்க! கடைசிப்படம் ப்ரசண்டேஷன் ரொம்ப சூப்பர்ர்ரா, பார்க்கும்போதே ..ம்ம்ம்.. யம்ம்ம்... சொல்லனும்போல இருக்கு! :) வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

ரொம்ப அழகான படங்கள், எளிமையான குறிப்பு. ட்ரை பண்ணி பாக்குறேன். ஒரு டவுட் இது முட்டை சேர்க்காமல் வேற மாதிரி செய்முறை எதுவும் இருக்கா.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

வனிதா,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.இங்கு வந்த பிறகு தான் ஃப்ளான் இருப்பதே தெரியும்.சாப்பிட்டு ரொம்ப பிடிச்சு போச்சு.அதான் சும்மா ட்ரை பண்ணேன். முடியும் போது அவனில் ட்ரை பண்ணுங்க.

ரீம்,
நான் ஸ்டீம் பண்ணதில்லை ரீம்.கஸ்டர்ட் கப்களில் செய்வதால் சர்வ் பண்ண அழகா இருக்கும்(தனித்தனியே கட் பண்ணி கொடுக்க வேண்டாம்) என்பதும் ஒரு காரணம்.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

சுமி,
கண்டிப்பா செய்து பாருங்க.ரொம்ப சுவையா இருக்கும்.அப்புறம் அடிக்கடி செய்ய ஆரம்பிச்சுடுவீங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

விமலகீதா,
ப்ரஷர் குக்கரில் ஸ்டீம் பண்ணலாம்.20 முதல் 30 நிமிடங்களில் வெந்துவிடும்.ஆனால் தனித்தனி கப்களுக்கு பதில் ஒரு பெரிய கப்பில் ஊற்றி ஸ்டீம் பண்ணுங்க.இம்முறையில் செய்து பார்த்து சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

கல்ப்ஸ்,
வடிகட்ட வேண்டிய அவசியம் இல்லை. நான் வடிகட்டாமல் தான் செய்தேன். நல்லா வந்தது.முட்டை அடிக்கும் போது சரியா கரையலனு நீங்க நினைத்தால் பிளென்டரில் முட்டையை அடிச்சுக்கோங்க.அப்போது முட்டை நன்றாக கரைந்துவிடும்.பின்னர் பால்,எசன்ஸ் சேர்த்துக்கலாம்.வேறு டவுட் இருந்தாலும் கேளுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

சுஸ்ரீ,
உங்க பதிவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சுஸ்ரீ.உங்க குட்டீஸ்க்கு செய்து கொடுங்க.

அனு,
இதில் முட்டை சேர்க்காமலும் செய்யலாம்.செய்முறை கொஞ்சம் விளக்கமாக இருப்பதால் இங்கேயே தர முடியவில்லை.தனியே ஒரு குறிப்பாக கொடுத்துட்டேன்.
http://arusuvai.com/tamil/node/22468 இந்த லின்க்கில் பாருங்க

வர வர அறுசுவையில் உள்ள பல பேருடன் எனக்கு டெலிபதி வொர்க் அவுட் ஆகுதுன்னு தான் சொல்லணும். நான் நினச்சேன் நீங்க செய்துத்துட்டீங்க. மேஷரிங் கப், பவுள்ஸ், செர்விங் டிஷ் எல்லாமே அழகு! செய்முறை விளக்கம் அருமை, படங்கள் எப்பவும் போல பளிச் பளிச். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு ஹர்ஷா,

குறிப்பில் மட்டுமல்லாமல், பின்னூட்டங்களிலும் தெளிவான விளக்கங்கள் கொடுத்திருக்கீங்க.

முட்டை சேர்க்காமல் செய்து பார்க்கிறேன்.

டபிள் கலராக வந்திருப்பது பார்க்கறதுக்கே சூப்பராக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கேரமல் கஸ்டர்ட்ஸ் செம கலக்கல் கலரும் கடைசி படமும் பார்க்கவே சாப்பிட தூண்டுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

செய்முறை விளக்கம், படங்கள் எல்லாமே அருமை. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

ப்ளீச் படங்களுடன் கேரமல் கஸ்டர்ட் கேக் மாதிரி பார்க்க சூப்பரா இருக்கு. தெளிவா புரியும் படி சொல்லி இருக்கீங்க. ஹர்ஷா எக்லெஸ் கேரமல் கஸ்டர்ட் அவன்ல வைக்க வேண்டாமா?

லாவண்யா,
பவுல்ஸ்,மெஷரிங் கப்ஸ்,ப்ளேட் எல்லாம் புதுசு கண்ணா புதுசு!!! கவனித்து குறிப்பிட்டதற்கு நன்றி.சீக்கிரம் உங்க கஸ்டர்ட் குறிப்பையும் அனுப்புங்க.பதிவுக்கு மிக்க நன்றி லாண்யா. ;-) (இந்த பேரும் ஸ்டைலா தான் இருக்கு!)

சீதாலக்‌ஷ்மி அம்மா,
கண்டிப்பா முட்டை இல்லாமல் செய்து பாருங்க.இந்த ஃப்ளான் “சீம் பால்” டேஸ்ட் வரும்.குறிப்பு மற்றும் பின்னூட்டங்கள் படித்து,மென்ஷன் பண்ணதுக்கு ரொம்ப நன்றிங்க.பணியின் இடையிலும் வந்து பதிவிட்டது பார்த்து மகிழ்ச்சி.

ஸ்வர்ணா,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி ஸ்வர்ணா.

இமா,
உங்க பதிவு பார்த்து மிக்க சந்தோஷம். உங்க பாராட்டுக்களுக்கு ரொம்ப நன்றி.

வினோஜா,
’எக்லெஸ் கேரமல் கஸ்டர்ட்’ அவனில் வைக்க தேவையில்லை வினோஜா. கஸ்டர்ட் பவுடரை பாலுடன் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறும் போதே திக்காக ஐஸ்க்ரீம் பதத்தில் வந்துடும்.அதனுடன் அகர் அகர் சேர்த்தால் கெட்டியாகி ஃப்ளான் போல் கிடைக்கும்.ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.இங்குள்ள பேக்கரிகளில் (சதுர வடிவ) ஃப்ளான் மீது சாக்லேட் கேக் வைத்து தருவாங்க.ரொம்ப நல்லா இருக்கும். உங்க பதிவுக்கு மிக்க நன்றி வினோஜா.