கொஞ்சம் இந்த பக்கம் வாருங்கள் உதவுங்கள் தோழிகளே

என்னை பழைய தோழிகளுக்கு நினைவிருக்கும் நான் மெர்ஜி என் அப்பாவிற்கு இடுப்பில் எலும்பு உடைந்து இருக்கு நேற்று தான் மலேசியாவில் இருந்து இந்தியா வந்தார் டாக்ட்ரிடம் காட்டியதற்கு ஆபரேசன் செய்ய சொல்றாங்களாம் நான் இப்போ சவுதியில் இருக்கேன் ரொம்ப கவலையா இருக்கு பா கும்பகோனம் சுகம் ஹாஸ்பிடலில் காட்டுறாங்க வேர நல்ல ஹாஸ்பிடல் இருக்கிறதா பனமும் பிரச்சனையாக இருக்கு எல்லோரும் கொஞ்சம் சிக்கலில் இருக்கிறோம் குறைவான செலவில் நல்ல ஆஸ்பிடல் தெரிந்தவங்க சொல்லுங்கப்பா உடன் பதில் தேவை

மெர்ஜானா... எலும்பு பொருத்தவரைக்கும் எனக்கு தெரிந்து சென்னைல மியாட் ஹாஸ்பிடல் நல்லா இருக்கும்.. கோயம்புத்தூரில் கங்கா ஹாஸ்பிடல் நல்லா இருக்கும்.. இது ரெண்டுல கம்பேர் பண்ணினா மியாட் தான் பெஸ்ட்.. போன மாதம் தான் என் மாமியாருக்கு கால் மூட்டு ஆபரேஷன் பண்ணினோம்.. ரெண்டு காலுமே பண்ணி இருக்காங்க.. இப்போ நல்லா இருக்காங்க... எங்களுக்கு இந்த ரெண்டு ஹாஸ்பிடல் தான் தெரிஞ்சவங்க சொன்னாங்க.. இது ரெண்டுல நாங்க சென்னை தேர்ந்தெடுத்து போனோம்.. கங்கா கம்பேர் பண்ணும்போது மியாட் கொஞ்சம் காஸ்ட்லி தான்.. ஆனா ரிசல்ட் நல்லா இருக்கு.. அதுபோலவே ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன ஹாஸ்பிடல்.. அவங்க ரூல்ஸ் எல்லாம் கொஞ்சம் எரிச்சலாதான் இருக்கும்.. ஆனா ட்ரீட்மெண்ட் ரொம்ப நல்லா இருக்கும்.. எனக்கு தெரிந்து இது ரெண்டுதான்..

வித்யா பிரவீன்குமார்... :)

மெர்சானா, உங்கள் தந்தையின் உடல் பழையபடி சீக்கிரம் குணமாக என் ஆழ்ந்த பிரார்த்தனைகள் உண்டு. எனக்கு இது குறித்து தகவல் தெரிந்தால் நிச்சயம் இங்கே பதிவு போடுகிறேன். கவலைப்படாதீர்கள். கடவுளிடம் பாரத்தை இறக்குங்கள். அவர் நிச்சயம் கருணை காட்டுவார்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மெர்சானா உங்களின் தந்தை சீக்கிரமே குணமாக இறைவனை பிரார்த்திக்கின்றேன். இறைவன் உங்களுக்கு சிறந்த வழியைக் காட்டுவான்.பிரார்த்தனை செய்யுங்கள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

மெர்ஜானா கவலை படாதீங்க.

இடுப்பு என்றால் அப்ப்லோ அல்லது மியாட்.
ஆனால் செலவு அதிகமாக தான் ஆகும் 3 லிருந்து 4 லட்சம் செலவாகும்.

வேற யாரிடமாவது வேற ஹாஸ்பிட்டல் இருக்கான்னு கேட்டு சொல்கிறேன்.

ம்ம் கோடம்பாக்கத்தில் விஜயா ஹாஸ்பிட்டலும் இருக்கு,
உங்கள் வாப்பா சீக்கரம் குணமடைய என் துஆக்கள்.

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்