நான் 5 மாத கர்ப்பம் . ultra sound scan செய்தோம் . எல்லாம் நோர்மல் என்று வந்து உள்ளது . இப்பொது Triple test (Blood test) செய்து உள்ளார்கள் .. இது வழமையாக செய்யப்படும் டெஸ்ட் தானா ? கட்டாயம் செய்ய வேண்டுமா ? பயமாக உள்ளது . யாருக்காவது இந்த டெஸ்ட் இல் பொசிடிவ் வந்துள்ளதா ? இதில் ஏதாவது ரிஸ்க் வந்தால் அது என் குழந்தையை பாதிக்குமா ? இந்த statistical analysis எவளவு தூரம் உண்மை? தோழிகளே pls help me.....
ஆமாம் தோழி.எனக்கு
ஆமாம் தோழி.எனக்கு செய்தார்கள்.முழு விபரமும் சரியாக நினைவில்லை.ஆனால் முக்கியமானது நினைவிருக்கு.அது பொதுவாக மேலைத்தேய நாடுகளில் செய்யப்படும் சாதரண சோதனைதான். குருதியில் செய்யப்படுவது.குழந்தைக்கு ஏதாவது குறைபாடுகள் உள்ளதா என கண்டறிய செய்யப்படுவது.டவுன் சின்ட்ரோம் போன்றவை உள்ளதா என கண்டறிய செய்வது.பொதுவாக 34 வயதிற்கு மேல் குழந்தை உண்டானால் இந்த றிஸ்க் ஆரம்பமாகும். இது பொசிற்றிவ் ஆக வந்தால் அடுத்த கட்டமாக ஒரு test செய்வார்கள்.அதன் பெயர் சரியாக நினைவில்லை.அதாவது குழந்தையை சுற்றி அதிர்ச்சி வாங்கியாக செயற்படும் அம்னியன் பாய்பொருளை எடுத்து செய்வது.அதுவும் பொசிற்றிவ்வாக வந்தால் தான் பிரச்சனை.எனக்குமுதலாவது பொசிர்றிவ்வாக வந்தது. ஆனால் அல்கம்துலில்லா எல்லாப் புகழும் இறைவனுக்கே.இரண்டாவது நோமல் என வந்தது. எனவே தோழியே பயப்படாதீர்கள்.இறைவனை பிரார்த்தியுங்கள்.நல்லதே நடக்கும்.ஆனால் இந்த test எல்லாம் விரும்பினால்தான் எனது டாக்ரர் செய்ய சொன்னார்கட்டாயப்படுத்தவில்லை. எனினும் நாங்கள் செய்தோம் இது கொஞ்சம் expensive
எல்லாப் புகழும் இறைவனுக்கே
ரொம்ப நன்றி பதில் போட்டதுக்கு
ரொம்ப நன்றி பதில் போட்டதுக்கு .... :)