தங்க வளையல் 21 கேரட் / 22 கேரட் 916’ல்,எது வாங்குவது?

தோழிகளே..தங்க வளையல் 21 கேரட் /22 கேரட் 916’ல் எது வாங்குவது ?நான் 3 முறை என் வளையலை 916’இல் மாற்றிவிட்டேன் 1 வருடத்திற்குள்ளேயே சீக்கிரம் உடைந்துவிடுகிரது.அடிக்கடி மாற்றுவதால் கிராம் அளவு குறைகிரது..நஷ்டம் தான்.

பொதுவாகவே 916ல் வாங்குவது தான் நல்லது,தரமானது’னு சொல்ராங்க..

ஆனா, ஒரு அக்கா சொல்ராங்க ”கையில் போடும் வளையலை 21 கேரட்”ல் வாங்கினால் சீக்கிரமா உடையாது’னு..”

இதை பற்றீ தெரிந்த தோழிகளூம்,அனுபவமுள்ளவர்கலும் சொல்லுங்கப்பா.. எது நீண்ட நாள் உடையாமல் நீடிக்கும்???

தோழிகளூம்,அனுபவமுள்ளவங்கலும் சொல்லுங்க..
21ct /22ct, 916 எது வாங்கலாம்? தங்க வளையலில், எது நீடித்து கையில் உடையாமல் இருக்கும் ?

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

நீங்க எப்போதும் கையில் போட்டே இருக்கும் வளையலில்,அதிகம் டிசைன் இல்லாத,கம்பிவேலைபாடு இல்லாத வளையலா செலக்ட் பண்ணுங்க.கொஞ்சம் கெட்டியான வளையலாக இருந்தால் உடையாது.சவுதியில் வளையல்பெரும்பாலும் 21கேரட் தான்.

என் அனுபவத்தில், எனக்கு 916 அ விட 21 காரட் வளையல் நல்ல உழைக்குது, 916 சீக்கிரம் உடைந்சிடுது. எந்த வளையல் ஆனாலும் உள்பக்கம் அரக்கு அல்லது பிளாஸ்டிக் வளையம் கண்டிப்பா போடணும், அப்ப தான் ரொம்ப நாள் தாங்கும்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நன்றி, ரீம் & பிரேமா ஹரிபாஸ்கர்.

white gold பற்றியும் சொலலுங்கபா..அது 21காரட்டா/22 கேரட்டா...அது கலர் மங்கிடுமா தொடர்ந்து யூஸ் பன்னுனா...யாராவது போட்டுருக்கிங்களா white gold’ல் வளையலா ?

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

பிரேமா ஹரிபாஸ்கர் ,
//உள்பக்கம் அரக்கு அல்லது பிளாஸ்டிக் வளையம் கண்டிப்பா போடணும்,//
இது என்னபா நீங்க சொல்ரீங்க? பிளீஸ் கொஞ்சம் தெளிவுபடுத்தவும்.

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

நம்ம பழைய காலத்தில் வளையல் செய்தபின் அதன் உள்விளிம்பு முழுதும் அரக்கு ஊத்துவாங்க. அது வளையலை ஸ்ட்ராங்கா வச்சிருக்கும்... ரெகுலர் யூஸ் பண்ணும்போது கூட வளையல் நெளியாது... இப்ப லேடஸ்டா வளையல் க்கு அரக்கை விட பிளாஸ்டிக் வளையம் தான் போடுறாங்க. நம்ம வாங்கும் நகை கடைலயே வச்சிருக்காங்க... வளையல் வாங்கினதும் அவங்களே அந்த பிளாஸ்டிக் உள்ப்பக்கம் மாட்டி விட்டடறாங்க... நான் 4 வருசமா வளையல் ரெகுலரா யூஸ் பண்றேன், ஆனா இது வர சின்னதா கூட நெளியலை.

வைட் கோல்ட் ரெகுலர் யூஸ் பண்ண கலர் போய்டும், அப்பறம் அதோட அழகே குறைஞ்ச மாதிரி ஆகிடும்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பிரேமா ஹரிபாஸ்கர், உங்க தெளீவான விளக்கத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றிபா..

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

மேலும் சில பதிவுகள்