எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்

அறுசுவை தோழர் மற்றும் தோழிகள் அனைவருக்கும் சௌமியன் நின் வணக்கம். கடந்த திங்கள் கிழமை அன்று காலை எட்டு மணி பத்து நிமிடத்தில் மூன்று கிலோ எடை உடன் சுக பிரசவத்தில் பாப்பா பிறந்து உள்ளார். எனது மனைவி மற்றும் பாப்பா இருவரும் நலம் .இன்று மருத்துவமனை இல் இருந்து இல்லம் வந்தார்கள்.அவர்களது அம்மா இல்லத்தில் காரைக்குடி அருகில் தேவகோட்டை எனும் ஊரில் உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சி உடன் பதிவு இடுகிறேன்.தங்கள் ஆலோசனைகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு இந்த தருணத்தில் எங்களது நன்றிகள் .எனது மனைவிக்கு தாய்பால் நன்கு சுரக்க எடுக்க வேண்டிய உணவுகள் மற்றும் எங்க பாப்பாக்கு அழகான பெயர் சொல்லுங்கள் மற்றும் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் வேண்டும் உங்கள் தோழர் சௌமியன்
இந்த நல்ல தளத்தை நடத்தும் அறுசுவை பாபு சாருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்...

vazhthukal...mikka magizhchi..sorry tanglishla type panradhuku...romba romba santhosham...kuttyum ammavum nalamudan irukka iraivanai pirarthikiren..

இதுவும் கடந்துப் போகும்.

congratulation to you. convey my wishes to your wife.regards.g.gomathi.

கயல்விழி
தேன்மொழி
பவித்திர

unmai pesuvathu

-

unmai pesuvathu

வாழ்த்துக்கள் பல.முதல் இரண்டு மாதங்கள் தாய் பத்திய சாப்பாடு சாப்பிடவேண்டும்.

பத்திய சாப்பாடு :
தேங்காய் கூடாது. உருளை, காளிபிலோவேர், பிரொக்கோலி போன்ற காஸ் உருவாக்கும் வஸ்துக்களை தவிர்க்கவும்.நன்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடவும்.
மிளகு காரம் சேர்க்கலாம். மிளகாய், மிளகாய் பொடி கூடாது.கத்திரிக்காய், புடலங்காய் , மாங்காய், அவரைக்காய் , பாதாம், பயத்தம் பருப்பு சேர்த்து கொள்ளவும்.
Kavitha

இளவரசி, மகாராணி மற்றும் மகாராஜாவுக்கு என் குடும்பம் சார்பாக மனதார வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்

ஜென்னிவினோ

Dare To Paly With Life

உங்களுக்கும்,உங்கள் மனைவிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.குழந்தை என்றும் நலமுடன்,வளமான வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

வாழ்த்துக்கள் சௌமியன் அண்ணா....குழந்தையும் தாயும் நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்....மத்தவங்க சொன்னதோடு சுரைக்காயும் சேர்த்து கொள்ளலாம்...

செளமியன் அண்ணா வாழ்த்துக்கள். அண்ணியும், குட்டி தேவதையையும் எந்த குறையும் இல்லாமல் நலமுடன் இருக்க ப்ராத்திக்கிறேன். 2 பேரையும் நல்லா பார்த்துக்கோங்க.

எங்கள் குட்டி இளவரசிக்கு வாழ்த்துக்கள் மற்றும் எனது மனைவிக்கான ஆலோசனைகள் சொன்ன அனைத்து அறுசுவை தோழிகள் மற்றும் தோழர்களுக்கு உங்கள் சௌமியனின் மனம் நிறைந்த நன்றிகள் .பெயர் முதல் எழுத்து அ, இ, உ என்று ஆரம்பிக்க வேண்டும்.அறிந்தவர்கள் பதிவு இடுங்கள் .

மேலும் சில பதிவுகள்