எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்

அறுசுவை தோழர் மற்றும் தோழிகள் அனைவருக்கும் சௌமியன் நின் வணக்கம். கடந்த திங்கள் கிழமை அன்று காலை எட்டு மணி பத்து நிமிடத்தில் மூன்று கிலோ எடை உடன் சுக பிரசவத்தில் பாப்பா பிறந்து உள்ளார். எனது மனைவி மற்றும் பாப்பா இருவரும் நலம் .இன்று மருத்துவமனை இல் இருந்து இல்லம் வந்தார்கள்.அவர்களது அம்மா இல்லத்தில் காரைக்குடி அருகில் தேவகோட்டை எனும் ஊரில் உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சி உடன் பதிவு இடுகிறேன்.தங்கள் ஆலோசனைகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு இந்த தருணத்தில் எங்களது நன்றிகள் .எனது மனைவிக்கு தாய்பால் நன்கு சுரக்க எடுக்க வேண்டிய உணவுகள் மற்றும் எங்க பாப்பாக்கு அழகான பெயர் சொல்லுங்கள் மற்றும் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் வேண்டும் உங்கள் தோழர் சௌமியன்
இந்த நல்ல தளத்தை நடத்தும் அறுசுவை பாபு சாருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்...

சௌமியன்,

உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் புத்தம்புது வரவு, செல்ல மகள் வாழ்வில் எல்லா நலமுடன், நீண்ட ஆயுளுடனும், வளமான வாழ்வு வாழ இறைவனை மனதார வேண்டி வாழ்த்துகிறேன்.

அன்புடன்
சுஸ்ரீ

வாழ்த்துக்கள்.... மகளை நன்கு படிக்க வையுங்கள் அண்ணா........ இ-ல் தொடங்கும் பெயர் இலக்கியா....... ஒரு சின்ன ஆலோசனை.. தமிழ் பெயராக வையுங்கள்.... பெயர் சூட்டியதும் என்ன பெயரென்று சொல்லுங்கள்...

அகல்யா, அகிலா, இந்து, இந்துமதி, இலக்கியா, இனியா, உமா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மிகவும் சந்தோசமான தகவல்.. வாழ்த்துக்கள்
ஆராதனா
ஆனந்திதா
அனன்யா
அவந்திகா
அனுஜா
அம்ரிதா
அபூர்வா

இனியா
இன்பா
இதயா
இளையா

உஷா
உமையாள்
உத்ரா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

செளமியன் அண்ணா வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க மனைவிக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க குட்டி செல்லத்துக்கு என்னுடைய வரவேற்ப்பும் வாழ்த்துக்களும்.

அனன்யா, அமிர்தா, அக்ஷயா, அஸ்வினி, அக்ஷரா, அபிதா

இனியா, இலக்கியா

அஞ்சனா, அக்ஷிதா, அஷ்வந்திகா, அக்ஷியா, அத்விகா, அகிலா, அமலா, அமர்த்தா, அஜந்தா, அம்ரிதா, அல்கா, இளமதி, இந்திராணி, இந்திரா, இஷானி, இந்துவதனி, இந்திரஜா, இந்துஜா, இலா, உதயசந்திரிகா, உதயா...

சௌமியன் அண்ணா உங்களுக்கும் உங்க மனைவிக்கும் வாழ்த்துக்கள். குட்டி தேவதை எல்லா வளமும் பெற்று ஆரோக்கியமாக வாழ என் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் மற்றும் ஆலோசனைகள் சொன்ன அனைத்து தோழர் மற்றும் தோழிகள் எல்லாருக்கும் எனது நன்றிகள் .பாப்பாவுக்கு அனுஷா என பெயர் வைக்க முடிவு செய்து உள்ளோம்.பெயரின் அர்த்தம் ஒரு அழகான காலை , ஒற்றுமை ,குழுவை நடத்தும் தலைமை பண்பு கொண்டவர் என வருகிறது .தோழமை உடன் சௌமியன்

அண்ணா ரொம்ப நாளுக்கு பின்னர் தளத்துக்கு வந்ததால் இன்று ,இப்பொழுது தான் பதிவு பார்த்தேன் ,மிக்க மகிழ்ச்சி அண்ணா ,வாழ்த்துக்கள் ,உங்கள் மனைவியிடம் இன்று தான் பேசினேன் ,இன்னொருமுறை வாழ்த்தினேன் என்று சொல்லுங்கள் ,உங்கள் மகள் நன்றாக நல்ல நலமுடன்,வளமுடன், அறிவில் சிறந்து விளங்கவும் ஆண்டவனை வேண்டுகிறேன்.அண்ணி அவர்களுக்கு பால் சுறா செய்து தர சொல்லுங்கள் ,பூண்டு,கீரை வகைகள் நிறைய சேர்த்து கொள்ள சொல்லுங்கள்.

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ஹாய் சௌமியன் அண்ணா.........இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். உங்கள் மனைவிக்கும், குட்டி பாப்பா அனுஷாவிற்கும் நல்வாழ்த்துக்கள்.

சாதத்தின் அளவை கொஞ்சம் குறைத்து அதற்கு சமமாக கீரை, காய்கறிகள், மீன் போன்றவைகளை அதிகமாக சாப்பிடனும்.

முடிந்தவரை கான்ஸ்டிபேஷன் ஆகாமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்கனும். அப்போதான் குழந்தைக்கு தண்ணீர் கிடைக்கும் & வயறும் ஃப்ரீயா இருக்கும்.

வாழ்த்துக்கள்....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்