என் தலை முடியால் றொம்ப கஸ்ரபடுகிறேன், உதவுங்கள்

அருசுவை தோழிகளுக்கு வணக்கம். எனக்கு ஒரள்வு நீள்மான முடி 2 நாட்களுக்கு முன்னர் முடியை STEP CUTபண்ணினேன்.இப்போ என்னோட முடி முன்னாடி இருந்த முடியில் 3/4 உள்ளது.நான் ஆசைப் பட்டுதான் முடி கட் பண்ணினான்.ஆசைபட்ட போலவே முடி நல்லா இருக்கு.இருந்தாலும் எனக்கு திருப்தி இல்லாம முடிய பறி கொடுத்த மாதிரியே இருக்கு.மனசு றொம்ப உடைஞ்சுட்டு.வெளிய எங்கேயும் போகவும் பிடிக்கல.
என் தோழிங்க எல்லாரும் முடி நல்லா இருக்கு என்றாங்க.எனக்கு என்னமோ முடி போய்டுதுனு கவலையா இருக்கு. இதால எனக்கு ஒரு WORK உம் பண்ண முடியல.எனக்கு என்னோட முடி LONG வேனும்.மனசால ரொம்ப கஸ்ரபடுகிரேன், தோழிங்களே என்னோட முடி LONG சீக்கிரமா வளர வழி சொல்லுங்க. உங்களைதான் நம்பி உள்ளேன்.இந்த முடி பிரச்சனையால் LIFE HATE ஆக இருக்கு.தயவு செய்து பதில் தாருங்கள்.

அட இதுக்கெல்லாமா வாழ்க்கை வெறுத்துப் போவாங்க குட்டிப் பொண்ணே! நிறைய பேருக்கு உங்கள் கேள்வியைப் பார்த்து கொஞ்சம் கோபம் கூட வந்திருக்கும். எனக்கு கூட கொஞ்சம் கோபம் வந்துச்சு :). பலருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு முன்னால் இதெல்லாம் ஒரு விஷயமா இதுக்குப் போய் வாழ்க்கை வெறுத்துப் போகுமா அப்படீன்னும் நினைக்கத் தோணும். நினைச்சேன் :).

யாருக்குன்னாலும் முடியை கொஞ்சமே கொஞ்சம் வெட்டினாலும் வெட்டிய உடன் முடி நீளம் ரொம்ப குறைஞ்ச மாதிரிதான் தோணும். இரண்டு மூன்று நாளில் அது சரியாயிடும்.

இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு புலம்பாமல் மனம் வெறுத்துப் போகாமல் வாழ்க்கையில் சாதிக்க முனையுங்கள் சஞ்சனா. அப்புறம் இதை நீங்க சின்ன சின்ன சந்தேகங்கள் பகுதியிலேயே கேட்டிருக்கலாம். இதுக்கெல்லாம் தனி இழை தேவையான்னு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் சஞ்சனா;)

டோண்ட் வொர்ரிபா ;) அதனாலென்ன?? ஸ்டெப் கட்டிங்தானே பண்ணியிருக்கீங்க..தூக்கி ஒரு போனி போடுங்க பாக்க அழகா இருக்கும். சின்னதா பட்டர்ஃபளை க்ளிப்போடுங்க இன்னும் அழகா இருக்கும். எல்லாத்தையும் தூக்கி சுத்தி செண்ட்டர் கிளிப் இல்லைனா பட்டர்ஃபைளை க்ளிப் போடுங்க எக்ஸலண்ட்டா இருக்கும். ஃப்ரெஞ்ச் ப்ளாட்டும் போட்டுக்கலாம். இதுக்கு போய் கவலைப்படலாமா? `இதயம்’ ஹீரா மாதிரி காட்டன் சுடி, சாரிக்கு சும்மா அள்ளும் போங்க;)

நானும் இப்படிதான் முடிய நல்லா வளர்த்துவேன். திடீர்னு தோல் வரைக்கும் வெட்டிருவேன் அதிலேயும் லேயர் கட் பண்ணினா லூஸ் ஹேர் போனி தவிர வேற ஒண்ணுமே பண்ணமுடியாது எல்லா கட்டிங்கும் பண்ணி எல்லா கஷ்டமும் பட்டிருக்கேன்;-) என்ன `பூ’தான் ஆசையா அள்ளி வைக்க முடியாது.. அப்புறம் மடமடன்னு வந்துடும் அப்புறம் அத சீவி சிக்கெடுக்கறதுதான் பெரும்பாடா இருக்கும்;-)) இப்போ நீளமாதான் இருக்கு ஆனால் பாதி முடியதான் காணோம்;( வெட்டவும் முடியாது..வெட்டினா அதைவிட மோசாமாயிடும்னு பாக்கறேன். நீங்க சும்மா தூள் கிளப்புங்க. ஆசையா வெட்டியிருக்கீங்க வளரவரைக்கும் என்னவெல்லாம் செய்யமுடியுமோ செஞ்சுபாத்திருங்க..மொதல்லேயே நீளமா முடி இருக்குன்னா சீக்கிரம் வளர்ந்திடும் டோண்ட்வொரி பி ஹேப்பி;-)

Don't Worry Be Happy.

kavisiva நான் அருசுவைக்கு புதுசு,சரியா விதிமுறைங்க தெரியல இனிம இப்பிடி நடக்காம பாத்துக்கிரன்.என்னில கோவம் வந்துச்சா?sorry பா என்னோட weekness இதுதான் mater சின்னதோ,பெரிதோ மனசு உடைஞ்சுடுவென்.நீங்க கோவ பட்டிங்க BUT NOW நான் இப்போ அருசுவையில எனக்கு ஆறுதல் சொல்ல நீங்க எல்லாம் இருக்கீங்கன்னு happy இருக்கன்.என் அம்மாக்கு நான் முடி வெட்டினதில சரியான கோவம்.இதுல நான் முடி போய்டுதேன்னு feel பண்ண அப்புரம் சொல்லனுமா, இந்த tenson பன்னிட்டன்.இதுதான் அம்மா சொல்லை தட்டாதேங்கிரது.
jayalakshmi maam
எனக்கு 22 age.லண்டன் போக போறன் for study. adjstபண்ணீக்கலாமுன்னுதா இருந்தன் இருந்தாலும் மனசு கேக்கமேட்டேங்குது.உங்கலுக்கு தெரிஞ்ச ஏதும் வழி சொல்லுங்க. 2 பேருக்கும் றொம்ப நன்றீ.

முடி தானே ..வளந்துரும்

றொம்ப நன்றி தாளிகாmaam ,உங்க கூட பேசனுன்னு ரொம்ப ஆசை பதிவு போட்டது happy aaka இருக்கு.

இப்படி சொல்றேனேன்னு நினைக்காதீங்க ஆஃப்டர் ஆல் முடி ,அதுவும் நீங்களா வெட்டுனது, குறிப்பா அழகு படுத்துறதுக்காக வெட்டுனது இருந்தும் ஃபீலிங் அதுவும் வெளிய கூட இறங்காத அளவு ஃபீலிங்க்ஸ்..ஏங்க இப்படியெல்லாம்..இன்னும் காலம் எத்தனையோ கிடக்க்கு..எதையெல்லாம் ஃபேஸ் பண்ண வேண்டி வரும்..முடியாவது ஒண்ணாவது.

sorry thalika

ஏங்க நீங்க லண்டன் போறதா இருந்தா குட்டை முடி தானே சவுகர்யம்... ஈசியா மெயின்டைன் பண்ணலாம்... இதுக்கு போய் ஃபீல் பண்ணலாமா? சந்தோசமா லண்டன் போய் நல்லா படிங்க... வாழ்த்துக்கள்...

நன்றி priya,நீங்க சொல்லுரது சரிதான்,இருந்தாலும் மனசு கேக்கமாட்டேங்குது.முடிய பார்க்கும்போதெல்லாம் feel வருது.thanks ur wishes.

நன்றி priya நீங்க சொல்லுரது சரிதான்,இருந்தாலும் மனசு கேக்கமாட்டேங்குது.முடிய பார்க்கும்போதெல்லாம் feel வருது.

மேலும் சில பதிவுகள்