பட்டிமன்றம் 64:பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா?அன்பா?

அறுசுவை நட்சத்திரங்களுக்கு அன்பு வணக்கமுங்கோ:)

இந்த பட்டிமன்ற தலைப்பு நம்ம ரம்யாவோடதுதாங்க

( தலைப்புகள்ல லேட்டஸ்டா பதிவானதில இருந்து தலைப்பைத்தேடி

பின்னோட்டம் ஓடலாமின்னு நினைச்சு கடைசில இருந்து

பார்த்தா ,பார்த்தவுடனே கடைசியா இருந்த இந்த முதல் தலைப்பு நச்சுன்னு

ஒட்டிக்கிச்சு…எடுத்துட்டேன்..நன்றி ரம்யா..:)

“பள்ளியிலோ , வீட்டிலோ பிள்ளைகளை அடித்தும் , அதட்டியும் கண்டிப்பது நல்லதா? இல்லை பேசி திருத்த முயல்வது சிறந்ததா ?"

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
அது நல்லவனாவதும்,கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே”

"மாதா,பிதா ,குரு தெய்வம்"..
இப்படியெல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லப்படுகிறது..

அவ்வளவு முதலிடப்படுத்தப்படும் இவர்களில்

அன்னையோ/தந்தையோ/ஆசிரியரோ / அனைவருமோ சேர்ந்து

கடுமை ,கண்டிப்பு கலந்து பிள்ளைகளை வளர்ப்பது சரின்னு நினைக்கிறோமா?

அல்லது

அன்பாக பேசி புரிய வைத்தாலே கடுமை,கண்டிப்பு, போன்றவை

அவசியப்படாதுன்னு நினைக்கிறோமா?

ஒரு கருத்த யுத்தத்துக்கு தயாராகலாமே..

இன்றைய பிள்ளைகள்தானே நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்…..

அந்த நட்சத்திரங்கள் பிரகாசமா ஜொலிக்க
நாம என்ன செய்யலாம்…?

எது சரியான வளர்ப்பா இருக்கமுடியும்? என்ற கேள்விக்கெல்லாம்

நீங்க சரின்னு எதை /என்ன நினைக்கிறீங்களோ அத வந்து வாதங்களாகவும்,பிரதிவாதங்களாகவும் இங்க சொல்லுங்கோ….:)

குச்சிஐஸ்,இலந்தைவடை,பஞ்சுமிட்டாய்,தேன்மிட்டாய்,ஜிகர்தண்டா,ஐஸ்க்ரீம்,சாக்லேட் எல்லாம் இருக்கு..

அவங்கவங்களுக்கு பிடிச்சத எடுத்துக்கிட்டு நம்ம நண்டு,சிண்டு மற்றும் வளரும் இளம் பிள்ளைகளுக்காக ஆரோக்கியமான ,அவசியமான வாதங்கள வைங்க..
ஆவலுடன் காத்திருக்கேன்…

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொருந்தும் பெயரிட்டு அழைப்பது கூடாது.

நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

அன்புடன்
இளவரசி

அன்புள்ள நடுவரே
அஞ்சு வயசில குளிக்க அடம் பிடிச்சா தூ க்கிட்டு போய் குளிக்க வைப்பாங்க .அதுவே பதினைஞ்சு வயசானா ஒன்னும் பண்ண முடியாதுங்கோ
அஞ்சு வயசுல கம்ப்யுட்டர் கேம்ஸ் விளையாடற குழைந்தையை ஒன் அவர் விளையாடின போதும்னு சொல்லி ஆப் பண்ணலாம் .பதினைஞ்சு வயசில ஒன்னும் பண்ண முடியாது தெரியுமா ?
அந்த பதினைஞ்சு வயசில கீழ்படியனுமுன்னா நீங்க பச்சபிள்ளையா இருக்கும் போது அன்பை ஊட்டி ஊட்டி வளத்திருக்கனுமாக்கும் .
கணக்கு வராத குழந்தையை அடியடின்னு அடிச்சா கணக்கு வராது வெறுப்பு தான் வரும் அன்பா கத்துக் கொடுத்தா கணக்குல புலியா ஆய்டுமே
சில வீட்ல அம்மா குழந்தையை அடிச்சா ,அப்பா குழைந்தைக்கு சப்போட் பண்ணுவார் பாருங்க.அப்போ, அந்த குழந்தை அம்மாவை ஒரு லுக் விடும் பாருங்க . . அட அட அடா .அம்மா அப்போ எதிரி ஆயிடுவாள் " இந்த அம்மா வேண்டாம் வேற அம்மா வாங்கு "எதுக்கு இந்த வம்பு எல்லாம் .
(அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா ? கேள்வி வேற பாவம் அந்தக் குழந்தை )
அம்மான்னா அன்பு
அப்பான்னாலும் அன்பு தானுங்க
பிடிவாதம் பிடிச்சா அடிக்கனும்னு அவசியம் இல்ல கண்டுக்காம விட்டாலே போதும்.சிலர் அழுததும் கேட்டதை வாங்கி கொடுத்து விடுவாங்க .அப்போ குழந்தை என்ன நினைக்கும் "அழுதால் கிடைக்கும்"இந்த பார்மூலவுக்கு போய்விடும் .தேவைன்ன வாங்கி கொடுங்க .இல்லன்னா மறுத்திடுங்க.செல்லம் வேறு அன்பு வேறு குழைந்தைக்கு புரிய வைங்க .நீங்களும் புரிஞ்சிக்கூங்க .
நடுவரே எல்லாருக்கும் என்னல்லாமோ கொடுகரிங்க எனக்கு ஐஸ்கிரீம் தாங்க ஹி ஹி அது என் குழந்தைக்கு ரொம்ப பிடிக்கும .ரெண்டு எடுத்துக்கறேன் எனெக்கு ரெண்டு குட்டீஸ்

அன்பின் நடுவர்க்கு, இப்போ பாருங்கல் நான் அவசரமாக ஹொஸ்பிடல் போக வேண்டியிருந்தது, திரும்பி வரும் போது நேரம் பிள்ளைங்க ஹோம் வெர்க் செய்து ஏனைய கற்றல் வேலைகல் செய்யும் நேரம்,ஆனால் நான் வரும் போது மூத்தவர் கம்ப்யூட்டர் கேமில், மற்ற இருவரும் விளையாடிட்டு இருக்காங்க,என் தங்கை அவங்கள படிக்க வாங்க அப்பிடின்னு அன்பா பாசமா கூப்பிட அவங்களும் “இதோ வாரேன் இதோ வாரேன் “என்று சொல்லிட்டே இருந்திருக்காங்க ,நான் வந்து கம்யூட்டர ஓப் பண்ண பையன் ஒட்டொமெடிக்கா படிக்க வந்துட்டான், அவர் பின்னாடி மற்ற 2பேரும் வந்துட்டாங்க . இப்போ இங்கே அன்பா சொல்லி சொல்லி முடியாத போது எது சரி வந்தது கண்டிப்பு தானே, இது தான் நிஜம் நடுவர் அவர்களே. ‘’காலத்தில் செய்த உதவி சிறிதாயினும் அது ஞாலத்தின் மானப் பெரிது” இது போல கண்டிக்க வேண்டிய வேலையில் நாம் பிள்ளைகளை கண்டித்து வளர்ப்போமேயானால் எதிர் காலத்தில் அந்த அனுபவம் நிச்சயம் அந்தப்பிள்ளைக்கு உதவும், நாம் சொல்கிறோம் தானே எங்க அப்பா அம்மா எங்கள கட்டுப்பாடோட வளர்த்ததால் தான் இன்னிக்கு நாம் ஒழுக்கமா குடும்ப பேர சீரழிக்காம சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்றோம் என்று.
அன்பு என்பது அமுதம் போல அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான், ஒரு உதாரணம் சொல்கிறேன் ‘ஒரு பெண் ஒரு பையனைக் காதலிக்கிறால் என்று வைத்துக் கொள்வோம். அம்மா அப்பா 2 பேரும் இவங்கள கண்டிக்கவே மாட்டாங்க என்ன செய்தாலும் அன்பாகவே பேசித்தான் தீர்ப்பாங்க, இப்போ காதல் விடயம் பெற்றோர் காதுக்கு எட்டுது, அம்மா மகளிடம் அன்பா சொல்றாங்க “ மகளே இது சரிப்பட்டு வராது இத்தோடு இத நிறுத்திக்கோங்க” இந்த அன்பு வார்த்தைகள் மாற்றுமா மகளின் மனதை, இல்லை .மகள் நினைப்பா அம்மா என் மேல ரொம்ப பாசமா இருக்கா நான் என்ன் அசொன்னாலும் கேட்பா இப்ப கூட அதட்ட கூட இல்ல சமாளிச்சுக்கலாம்” இந்த எண்ண் ஓட்டம் ஒடும் கூடவே காதலும் ஓடும். நிலைமை பாரதூரமாக இப்போ அம்மா அப்பா அண்ணா அண்ணி மாமா மாமி சித்தப்பா சித்தி பெரியம்மா பெரியாப்பா இப்பிடி குடும்பமே செர்ந்து திட்டும். இப்போ மகள் நினைப்பா அப்பிடி என்ன தப்பு பண்ணிட்டேனு இப்பிடி குதிக்கிறாங்க அவ ஒரு முடுவெடுப்பா 1_பெற்றோருக்காய் காதலை கைவிடல். 2/ காதலுக்காய் பெற்றோரை கைவிடல் ,3- தற்கொலை / இந்த நிலைமை தேவையா ஆரம்பத்திலே கண்டித்து வழிநடத்தியிருந்தால் இப்பிடி ஒரு நிலைமை வருமா?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நடுவரே தன் பிள்ளை காதலில் இருக்கிறாள் என்று தெரிந்தால் அன்பான பெற்றோராக இருந்தால்... மகளின் வயது காதலுக்கும் கல்யாணத்துக்கும் சரியான வயதாக இருந்தால் காதலிப்பவரின் பின்னணியையும் குணத்தையும் அறிந்து தகுதியானவர் என்றால் ஜாதி மதம் பார்ர்க்காமல் சேர்த்து வைப்பார்கள். பையனின் பின்னணியோ அல்லது குணமோ சரியில்லை என்றால் மகளிடம் புரியும் படி எடுத்துச் சொல்வார்கள். இதில் மகளின் மனம் மாற 80சதவீதம் வாய்ய்ப்பு இருக்கிறது. காதலிக்கும் பருவம் இல்லை என்றாலும் மகளிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி, தற்சமயம் படிப்பில் கவனம் செலுத்து காதலிக்கும் பருவமும் வயதும் வரும் போது இதே காதல் உன் மனதில் இருக்கும் என்றால் அப்போது அதைப் பற்றி பேசலாம் எனச் சொன்னால் பிள்ளை கேட்டுக் கொள்வாள்.மாறாக கண்டிக்கிறேன் என்று தாம் தூம்னு குதித்தால் எரிகிற கொள்ளியில் எண்ணெய் விட்ட கதையாக காதல் தீவிரமாகும். தகுதியற்ற காதலே பெற்றொரை விட பிரதானமாகத் தோன்றும்.
பெரும்பாலும் தன் மகனோ மகளோ காதலிக்கிறார்கள் என்று தெரிந்தாலே பெற்றோருக்குள் ஈகோ தலை தூக்கி விடும். உடனே கண்டிப்பு தண்டிப்பு என பக்குவமற்று கையாண்டால் சிக்கல் இடியாப்ப சிக்கலாகி விடும். ஈகோ எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு அன்பாக அணுகினால் எல்லா சிக்கலும் விலகி விடும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பின் நடுவருக்கு எதிரணி சரியான பொயிண்டை தந்து விட்டடது அதாவது””சில வசதியான வீட்டு புள்ளைங்க தான் அதிகமா தவறான காரியத்தில் ஈடுபடறாங்க... ஏன்னால் அவங்களுக்கு பெத்தவங்க எதையும் எடுத்து சொல்லித்தறது இல்லை, எது கேட்டாலும் உடனே வாங்கிதந்திடறது... ஆனால் பொதுவாகவே வசதி குறைந்த, குடும்ப கஷ்ட நஷ்டம் புரிஞ்சு வளர்ந்த புள்ளைங்க தப்பு பண்றது இல்லை...””’இது ஏன் என்ன காரணம் வசதியான வீட்டில வள்ர்ர பிள்ளை ஆயா கவனிக்குது கேட்டது எல்லம் கிடைக்குது, பையன் தப்பு செய்வான் பழி வேலைக்காரன் பையன் மேல் விழும், அங்கே கண்டிக்க கட்டுப்பாடு போட ஆள் இல்ல, ஆனா ஏழை வீடுப்பிள்ளைகளுக்கு அவங்க அம்மா சொல்லி சொல்லி வளர்பாங்க எங்க சக்திக்கு மீறினத கேட்கக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிடுவாங்க, பசங்களும் புரிஞ்சுக்குவாங்க, இருங்க வேலை அழைக்குது மீண்டும் வர்வேன், அவசரப் பதிவு தறிருந்தால் சொரி.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

வாங்கோ..ப்ரேமா
//சிலசமயங்களில் பிள்ளைகளை கட்டுபடுத்த கண்டிப்பு, கோவம், அடி, உதைனு புள்ளைங்க மேல அனலை தெரிக்கிறோம்... ஆனா செல்லம், அம்மு, புஜ்ஜு, குட்டி நு கொஞ்சி கொஞ்சி குளுமையை பொழிவதால் தான், ஐ லவ் யு மம்மி நு கேட்க முடியும்...//

அடடா கேட்கறப்பவே தேன் வந்து பாயுது போங்க….ஐ லைக் யுவர் பாயிண்ட்ஸ்ங்கோ :)

//எங்க பொண்ணு இந்த 2 வயசுலேயே லேப்டாப் உபயோகிக்கறதை நினைச்சு வறுத்த பட்டாலும், எங்களை விட வேகமா, அக்குவேறு ஆணிவீரா உபயோகிக்கறத பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கு... ஆனா அதுக்காக நாம பெத்தவங்க அப்படியே விட்டுட முடியுமோ... அவ வெளில விளையாண்டது போக கொஞ்ச நேரம் லேப்டாப் கொடுப்போம், மத்த நேரம் எல்லாம் எடுத்து பைக்குள்ள வச்சிருவோம்... இது தான் நாங்கள் குழந்தையை அணுகும் முறை... நீங்க அறுசுவை பார்பிங்க ஆனா புள்ளைங்க விளையாட கூடாது... நீங்க டிவி சீரியல் பார்பிங்க ஆனா அவங்க கார்டூன் சேனல் பார்க்க கூடாது... இது என்ன நியாயம்னு நீங்களே கேளுங்க நடுவரே...//

அதானே எதுக்கு இப்படி ஓரவஞ்சனை…குழந்தைக்கு மட்டும் ரூல்ஸ் போடறது சரியில்லன்னு சொல்றாங்க ப்ரேமா

//அன்பால் தான் அழகான வீட்டை உருவாக்க முடியும்... //

அழகான குடும்பத்துக்கு அன்பு அவசியமுன்னு சொல்றாங்க..

//நடுவரே... தம் கட்டி எழுதியிருக்கேன் அந்த பஞ்சுமிட்டாய மறந்துராதிங்க...//

பிஞ்சுகளுக்காக அழகா தொகுத்து கண்டிப்பணிக்கு பஞ்ச் வைக்கிறீங்க..பஞ்சுமிட்டாய் கொடுக்காம எப்படி?இந்தாங்க ஒரு பெட்டி நிறைய..:)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

//அஞ்சு வயசு குழந்தையை நாம் கண்டிக்கமுடியும் ,அடிக்கமுடியும். .ஆனா எதிரணியினரே மறந்து விடாதிர்கள் .அதே குழந்தைக்கு வயசு பதினைந்தாகும் போது நாம அதை கண்டிக்க முடியாது .ஏன்னா டீனேஜ் அப்படி .
டீனேஜ் குழந்தையை வளர்ப்பது கைப்புள்ளைய வளர்ப்பதை விடவும் கஷ்டமுங்கோ.அங்கெ அன்பு அன்பு ஒன்றே செல்லுபடி ஆகுமுங்கோ ...கண்டித்தால் எதிர்த்து விடுவார்கள் .தடம் மாறி விடக்கூடாதே ,நல்லபடியாக வளர வேண்டுமே என்ற பயம் காரணமாக நாம் அவர்களை அன்போடு மிகுந்த மிகுந்த அன்போடு கவனிக்க வேண்டும் .//

எப்படின்னாலும் ஒரு கட்டத்துல அன்புக்கு தாவிதான் ஆவணுமின்னு சொல்றாங்க

//இப்போ கவனிங்க பதினைஞ்சு வயசு குழந்தையை அன்போடு வளர்க்கும் போது அஞ்சு வயசு குழந்தையை அடிப்பது பாவமில்லையா ?திருப்பி அடிக்க முடியாத பிஞ்சு குழந்தையை நீங்க அடிக்கரிங்கன்ன உங்களுக்கு வெவரம் பத்தலைன்னு தாங்க சொல்லணும்//

கண்டிப்பணி வெவரமா இருங்க……திருப்பி அடிக்கமாட்டாங்கன்னு ஓவரா தண்டிக்கவோ/கண்டிக்கவோ செய்யாதீங்கன்னு சொல்றாங்க

//கணக்கு வராத குழந்தையை அடியடின்னு அடிச்சா கணக்கு வராது வெறுப்பு தான் வரும் அன்பா கத்துக் கொடுத்தா கணக்குல புலியா ஆய்டுமே//

எந்த கணக்குலன்னு சொல்லாம விட்டுட்டீங்களே..;) கணக்குல புலியா மாறணுமா?பூனையா இருக்கணுமான்னு கண்டிப்பு அணி முடிவு பண்ணுங்கோ

//சில வீட்ல அம்மா குழந்தையை அடிச்சா ,அப்பா குழைந்தைக்கு சப்போட் பண்ணுவார் பாருங்க.அப்போ, அந்த குழந்தை அம்மாவை ஒரு லுக் விடும் பாருங்க . . அட அட அடா .அம்மா அப்போ எதிரி ஆயிடுவாள் " இந்த அம்மா வேண்டாம் வேற அம்மா வாங்கு "எதுக்கு இந்த வம்பு எல்லாம் .
(அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா ? கேள்வி வேற பாவம் அந்தக் குழந்தை )
அம்மான்னா அன்பு
அப்பான்னாலும் அன்பு தானுங்க//

அம்மா,அப்பா இரண்டு பேரும் அன்ப காட்டறதில போட்டி போடுங்க தப்பேயில்லன்னு சொல்றாங்க..

//நடுவரே எல்லாருக்கும் என்னல்லாமோ கொடுகரிங்க எனக்கு ஐஸ்கிரீம் தாங்க ஹி ஹி அது என் குழந்தைக்கு ரொம்ப பிடிக்கும .ரெண்டு எடுத்துக்கறேன் எனெக்கு ரெண்டு குட்டீஸ்//

குட்டீஸ்க்குன்னு சொல்லிட்டீங்க இந்தாங்க ஐஸ்க்ரீம் ,ஜெல்லி இதோட நம்ம ஹர்ஷாவோட ஸ்ட்ராபெர்ரிகேக்கும் எடுங்க…சாப்பிடுங்க :)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அ//ன்பா பாசமா கூப்பிட அவங்களும் “இதோ வாரேன் இதோ வாரேன் “என்று சொல்லிட்டே இருந்திருக்காங்க ,நான் வந்து கம்யூட்டர ஓப் பண்ண பையன் ஒட்டொமெடிக்கா படிக்க வந்துட்டான், அவர் பின்னாடி மற்ற 2பேரும் வந்துட்டாங்க . இப்போ இங்கே அன்பா சொல்லி சொல்லி முடியாத போது எது சரி வந்தது கண்டிப்பு தானே, இது தான் நிஜம் நடுவர் அவர்களே//

கோலெடுத்தா எதுவெல்லாமோ ஆடுதாம்….அதுமாதிரி கண்டிப்புங்கற கோலெடுத்தா தான் எல்லாம் வேலையாவுதுன்னு சொல்றீங்க

//அவ ஒரு முடுவெடுப்பா 1_பெற்றோருக்காய் காதலை கைவிடல். 2/ காதலுக்காய் பெற்றோரை கைவிடல் ,3- தற்கொலை / இந்த நிலைமை தேவையா ஆரம்பத்திலே கண்டித்து வழிநடத்தியிருந்தால் இப்பிடி ஒரு நிலைமை வருமா?//

தடம்மாறி போய் காதலிப்பதும்,தவறான முடிவெடுப்பதும் கூட கண்டிப்பில்லா வளர்ப்பினால்தானேன்னு சொல்றாங்க

’//இது ஏன் என்ன காரணம் வசதியான வீட்டில வள்ர்ர பிள்ளை ஆயா கவனிக்குது கேட்டது எல்லம் கிடைக்குது, பையன் தப்பு செய்வான் பழி வேலைக்காரன் பையன் மேல் விழும், அங்கே கண்டிக்க கட்டுப்பாடு போட ஆள் இல்ல, ஆனா ஏழை வீடுப்பிள்ளைகளுக்கு அவங்க அம்மா சொல்லி சொல்லி வளர்பாங்க எங்க சக்திக்கு மீறினத கேட்கக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிடுவாங்க, பசங்களும் புரிஞ்சுக்குவாங்க,//

வசதியுள்ள இடத்தில் கண்டிப்பே இல்ல..கட்டுப்பாடும் இல்ல ..அது தப்பான வழிக்கு கொண்டு செல்லுதுன்னு சொல்றாங்க

பூங்காற்று நீங்களும் ஸ்ட்ரார்ரி கேக் எடுங்க கையில ….கேக் வெட்டறாப்பல வாதங்களால் நல்லா வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுன்னு பேசறீங்க :)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வாங்கோ
:)
//படிப்பில் கவனம் செலுத்து காதலிக்கும் பருவமும் வயதும் வரும் போது இதே காதல் உன் மனதில் இருக்கும் என்றால் அப்போது அதைப் பற்றி பேசலாம் எனச் சொன்னால் பிள்ளை கேட்டுக் கொள்வாள்.மாறாக கண்டிக்கிறேன் என்று தாம் தூம்னு குதித்தால் எரிகிற கொள்ளியில் எண்ணெய் விட்ட கதையாக காதல் தீவிரமாகும். தகுதியற்ற காதலே பெற்றொரை விட பிரதானமாகத் தோன்றும்.//

எரிகிற கொள்ளியில் கண்டிப்புங்கற எண்ணைய விட்டு கஷ்டப்படாதீங்கோன்னு அன்பா சொல்றாங்கோ

//தன் மகனோ மகளோ காதலிக்கிறார்கள் என்று தெரிந்தாலே பெற்றோருக்குள் ஈகோ தலை தூக்கி விடும். உடனே கண்டிப்பு தண்டிப்பு என பக்குவமற்று கையாண்டால் சிக்கல் இடியாப்ப சிக்கலாகி விடும். ஈகோ எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு அன்பாக அணுகினால் எல்லா சிக்கலும் விலகி விடும்.//

நூடுல்ஸ் மாறி நானும் உங்க வாதமோதலில் சிக்கிட்டு இருக்கேன்….:(
இந்தாங்கோ ஸ்ட்ராபெர்ரிகேக்…….ஆனா அது சாப்பிட ஸ்ட்ரா எல்லாம் கேக்கப்புடாது இப்பவே சொல்லிட்டேன் ;)

கவி,இந்தமாதிரி சிக்கல்ல மாட்டிவிடுற ஒரு தலைப்பை கொடுத்து சைலண்டா சிக்கவச்சிட்டு வேடிக்கை பார்க்கிற தோழிய எங்கயாச்சும் பார்த்தீங்க..:()

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவரே ம் பட்டி செமையா போகுது போல. எல்லாருக்கும் ஐஸ், மிட்டாய் எல்லாம் தரீங்க எனக்கு ? ம் ம் ம் (அழுகுறேன்)

சரி இப்போ நம்ம விஷயத்துக்கு வரேன்.

காலையில் 5 மணிக்கு எழுந்திருப்பது முதல் இரவு தூங்குவது வரை பட்டியல் போட்டு கண்டிப்போடு பிள்ளைகளிடம் கொடுங்க. அவுங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா ? ஏதோ மிலிட்டரி காம்பஸ்ல இருக்குற மாதிரி இருக்கும். இதையே பிள்ளைகளிடம் அன்பா கண்ணா 5 மணிக்கு எழுந்திரு காகா எல்லாம் எங்க போகுதுன்னு பார்போம் அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லி எழுப்பி ஒரு சின்ன வாக் கூட்டிட்டு போயிட்டு வாங்க அடுத்த நாள்ல இருந்து அவன் உங்கள எழுப்புவன். எந்த ஒரு வேலையும் எதற்காக செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்று சொல்லி புரிய வைத்து செய்ய வையுங்கள் அப்போதுதான் அவர்கள் ஒரு ஈடுபாடோடு செய்வாங்க. அத விட்டுட்டு "அப்பா இப்போ நான் எந்திருக்கல அந்த பிசாசு வந்து உய்ர வாங்கும் இந்த காலைலேயே" அப்படின்னு சொல்லுவாங்க.
example , சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல காலைல ஹீரோவ எழுப்புற காட்சி.

எதிரணி மக்கள் படம் எல்லாம் போட்டு காமிச்சாங்க. நாங்க எத்தனை படத்த சொல்ல? அம்மா அப்பா கண்டிப்பா இருக்குறதால பிள்ளைகள் எவ்வளவு தவறான பாதைகள்ல போறாங்க தெரியுமா ? பாவம்ங்க அவுங்க. பிஞ்சு மனசுலேயே அவுங்க உடைஞ்சு போய்டுவாங்க. இப்போ உள்ள பிள்ளைகள் ரொம்ப சுட்டி மட்டுமல்ல நல்ல புத்திசாலிகளும் கூட. 3 வயசுலேயே அவ்வளவு அறிவா கேள்வி கேட்குறாங்க. ஏன் அவுங்க அன்பா சொன்ன கேட்கமாட்டாங்க அடங்க மாட்டங்கன்னு சொல்றீங்க ? சொல்ற விதமா சொன்னா நல்ல பிள்ளையா கேட்பாங்க. அவுங்க கண்ணாடி மாதிரி. நீங்க அன்பா சொன்ன உங்க கிட்ட தான் தப்பு பண்ணினா கூட சொல்லி மன்னிப்பு கேட்பாங்க. பெற்றோர் அவுங்களுக்கு ஒரு நல்ல தோழன் மாதிரி தெரிவாங்க.

"என் parents போல யாரு மச்சான்
அன்பால என் நெஞ்ச தச்சான்
என் கண்ணில் நீர பொங்க வெச்சான் ...

இப்படி தான் உங்கள உயர்வா நினைப்பாங்க. அத விட்டுட்டு மிலிட்டரி நடத்திநீங்கன்னு வைங்க என்ன சொல்லுவாங்க தெரியுமா ?
---------- இப்படி தான் இருக்கும் அந்த பாடல்.

அன்போடு ஒரு பிள்ளை கிட்ட வேறு ஒருத்தர் பொருளை கேட்க கூடாதுடா குட்டிமா. அது தப்பு. உனக்கு என்ன வேணுமோ அத நானும் அப்பாவும் வங்கி தருவோம் கண்டது வேணும்ன்னு அடம் பிடிக்ககூடாது. அது தப்புன்னு என்னைக்காவது சொல்லி இருக்கீங்களா ? அத விட்டுட்டு கண்டிப்பா சொன்னா தான் அவுங்க கேட்பாங்கன்னு நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க.

//அன்பை மட்டுமே காட்டி வளர்ப்பவங்களோ காலா காலத்துக்கும் பிள்ளை சொன்ன பேச்சை கேட்பதே இல்லைன்னு புலம்பிட்டே இருப்பாங்க.// எதிரணி மக்கள் ஏன் இப்படி உலகம் தெரியாதவங்களா இருக்காங்க ? இப்போ உள்ள பிள்ளைகளை அன்பால மட்டுமே கட்டிபோட முடியும். இல்லைனா தான் அவுங்க உங்கள விட்டு மீறி போய்டுவாங்க. நாம சொல்லாமலேயே நம்மள பத்தி தெரிஞ்சு நடந்துபாங்க. இது என் பெற்றோர்க்கு கஷ்டம் தரக்கூடிய விஷயம்ன்னு அவுங்களே செய்ய மாட்டங்க. அத விட்டுட்டு கண்டிப்பா கஞ்சி போட்ட டிரஸ் போட்ட போலீஸ் மாதிரி நடந்தீங்கன்னு வைங்க அதுக்கு வேற என்ன வேலை எத செய்தாலும் கத்திகிட்டே தான் இருக்கும். நாம நம்ம வேலைய செய்வோம்னு தான் நினைப்பாங்க.

தற்கொலை பத்தி சொன்னாங்க. தற்கொலைக்கான முதல் காரணம்னு சொல்றது எது தெரியுமா மெண்டல் டார்ச்சர் தானம். இது எதனால் வருது. அன்பில்லாம கண்டிப்பு கண்டிப்பு அப்படின்ற இடத்துல தானே வரும். நமக்கு எப்படி 1000 பிரச்சனை இருக்கோ அது போல தானே அவுங்களுக்கும். சின்ன பிள்ளை அதுக்கு என்ன பிரச்சனை இருக்க போகுதுன்னு நாமலா சொல்ல கூடாது. இருக்குற பிரச்சனைல நாமளும் நம்ம பங்குக்கு கண்டிப்புன்ற எண்ணெய் ஊற்றி எரிய விடாம அன்புன்ற மழை பெய்து அனைத்து அவுங்கள குளிர விடலாம்ல. யோசிங்க மக்களே யோசிங்க. sunrise இருந்தா குடிச்சிட்டு முழிச்சுகோங்க இது இல்லைனா வேற டீ அல்லது காபி போட்டு குடிச்சிட்டு முழிச்சுகோங்க .

ஜென்னிவினோ

Dare To Paly With Life

அன்பான நடுவருக்கு...

என் இனிய காலை வணக்கங்கள்...

எதிரணியினர் சொன்னாங்க... வசதியான புள்ளைங்க ஆயா வளர்ப்பில் வளருது, கேட்டது எல்லாம் கிடைக்குது கண்டிபே இல்லை அதனாலதான் கெட்டு போகராங்கன்னு...
அங்க கண்டிப்பு இல்லைனரதவிட தாய் தந்தையின் அன்பு சுத்தமா இல்லீங்கோ.. ஆயிரம் தான் ஆயா வளர்த்தாலும் பெத்தவங்க பாசத்துக்கு ஈடாகுமோ.. ஆயா புள்ளைங்க அழுவாம பார்துக்குவாங்களே தவிர, நல்லது கெட்டது நம்ம குடும்ப பெருமை எல்லாம் சொல்லி தர மாட்டாங்கோ... ஆயாகிட்ட குழந்தை சாக்லேட் கேட்டால் உடனே எடுத்து தந்திருவாங்க... ஆனா இல்லடா செல்லம் சாக்லேட் சாப்டா பாப்பாக்கு பல்லுல ஊ வந்து கடிக்கும் பாபாக்கு ரொம்ப வலிக்கும்லன்னு அன்பா சொல்லி வேற ஏதும் மாத்தி தர மாட்டாங்க...

எங்க பக்கத்துக்கு ரூம் காரங்க விடுமுறைக்கு அவங்க குடும்பத்தை 1 மாதம் இங்க கூட்டிட்டு வந்திருந்தாங்க... ரெண்டு பிள்ளைங்க, ரெண்டும் வேற வேற ரகம். ஒன்னு சாப்பாடு மட்டும் தான் சாப்பிடும், இன்னொன்னு காய் மட்டும் தான் சாப்பிடும்... தினமும் சாப்பிடும் வேளையில் எல்லாம் அவங்க அப்பா எம்டன் மகன் எம்டனா மாரிருவாறு... குழந்தைங்க அழும்போது நாம நிம்மதியா சாப்பிட முடியும்... என் கணவர் அதுங்களை சாப்பிட வைக்க ஒரு வழிகண்டுபுடிசாங்க... சோறு, காய், அப்பளம் நு சொல்லுவாங்க... சோறு சொல்லும்போது சோறு சாப்டனும், காய் சொல்லும்போது காய் சாப்பிடனும், அப்பளம் சொல்லும்போது அப்பளம் சாப்பிடனும்... அதுக்கப்பறம் அந்த குழந்தைன்களே இந்த பாட்டை படிச்சிட்டே அழகா சாப்பிட ஆரம்பிச்சிடுச்சுங்க... இதுல பயன் தான் நிறைய அடி வாங்குவான், பொண்ணுகிட்ட ரொம்ப அன்பா பழகுவாங்க... அனால் அதுல பயன் தான் ரொம்ப முரடு, அடி வாங்கி வாங்கி உடம்பு மரத்து போச்சு... பொண்ணு சொல்றதை நல்ல கேட்டுக்கும்... இதுலையே உங்களுக்கு புரியலையா அன்பு தான் முக்கியம்னு.

அப்பறம் காதலிக்கற மகனையோ மகளையோ கண்டிக்கலைனால் விஷயம் படு டேஞ்சர் ஆகிடுமாம்... காதலிக்கும் பிள்ளைய கண்டிச்சு பாருங்க... அவங்க காதல் திருட்டுதனா போகுமே தவிர காதலை விட்டு விட மாட்டாங்க...
எங்க அப்பா அம்மா எங்களோட பள்ளி மேல் பருவத்திலேயே சொல்லி வளர்த்தாங்க... இங்க பாருடா அம்மு... காதல் பண்றது ஒன்னும் தப்பு இல்லை, ஆனா நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கு... நீங்க சின்னவங்க உங்களை விட பெத்தவங்க எங்களுக்கு உங்க மேல அக்கறையும், பாசமும், நீ எப்பவும் நல்ல இருக்கனும்கற ஆசையும் அதிகம் இருக்கு... அப்படியே நீங்க காதலித்தாலும், அம்மா அப்பா கிட்ட சொல்லுங்க நல்ல பயன், நீங்க நல்ல இருபிங்கனால் நாங்க திருமணம் செஞ்சு வைக்கிறோம் நு சொனாங்க... அது எங்க மனசில் ஆழமா பதிஞ்சிடுச்சு... எனக்கு யார்மேலயும் காதல் வரலை, வந்தால் கண்டிப்பா அப்பா அம்மா கிட்ட சொல்லி இருப்பேன்... என் சகோதரி ஒருத்தரை காதலிச்சாங்க அப்பா அம்மா கிட்ட சொன்னாங்க, விசாரிச்சோம் நல்ல குடும்பம் ரெண்டு வீட்டின் சம்மதத்தோடு ஜாம் ஜாம் நு திருமணம் ஆகி இப்போ இன்னும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க... இப்ப சொல்லுங்க நடுவரே... இங்க கண்டிப்பு வென்றதா இல்லை அன்பு வென்றதா?

குழந்தைங்க அதை உடைச்சிடாங்க, இதை உடைசிடாங்கன்னு அடிக்கறது எவ்ளோ பெரிய கொடுமை, அது சின்ன குழந்தை அதுக்கு எதுவும் தெரியது... பெரியவங்க நாம தான் நம்ம பொருட்களை பத்திரமா வாசிக்கணும். எங்க வீட்டில் வாங்கற எந்த டாய்சும் 2 நாளைக்கு மேல உருப்படியா இருக்காது, அதுங்க விளையாடும்போது தூகிபோடும், உடைக்கும், அது தான் குழந்தை குணம். ஒரு முறை எங்க வாலு என் மொபைல் போன எடுத்து தண்ணீர்ல போட்டுருச்சு... வசவு யாருக்கு எனக்கு தாங்க... அது குழந்தை அவ எடுக்கற மாதிரி ப்போன வச்சது உன் தப்புன்னு...

இன்னொரு முக்கியமான விஷயம், வெளிநாடுகளில் நம் பிள்ளைகளை நாம் அடிச்சா கூட ஜெயில் தாங்கோ... ரொம்ப கண்டிசிங்கனாலும் இந்த காலத்து புள்ளைங்க எங்க அப்பா அம்மா எங்களை அடிகராங்கனு போலீஸ் ல கம்ப்ளைன்ட் பண்ணிரும்... கண்டிப்பு அணிகாரங்களா உஷார்.

அதுமட்டும் இல்லைங்கோ பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ ரொம்ப கண்டிப்பான வாத்தியாருக்கு தான்ங்க நிறைய பட்டபெயர் வக்கிறாங்க நம்ம மாணவர்கள். அன்பான வாத்தியாருக்கு சல்யுட் மட்டுமே வக்கிறாங்க

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்