பட்டிமன்றம் 64:பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா?அன்பா?

அறுசுவை நட்சத்திரங்களுக்கு அன்பு வணக்கமுங்கோ:)

இந்த பட்டிமன்ற தலைப்பு நம்ம ரம்யாவோடதுதாங்க

( தலைப்புகள்ல லேட்டஸ்டா பதிவானதில இருந்து தலைப்பைத்தேடி

பின்னோட்டம் ஓடலாமின்னு நினைச்சு கடைசில இருந்து

பார்த்தா ,பார்த்தவுடனே கடைசியா இருந்த இந்த முதல் தலைப்பு நச்சுன்னு

ஒட்டிக்கிச்சு…எடுத்துட்டேன்..நன்றி ரம்யா..:)

“பள்ளியிலோ , வீட்டிலோ பிள்ளைகளை அடித்தும் , அதட்டியும் கண்டிப்பது நல்லதா? இல்லை பேசி திருத்த முயல்வது சிறந்ததா ?"

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
அது நல்லவனாவதும்,கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே”

"மாதா,பிதா ,குரு தெய்வம்"..
இப்படியெல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லப்படுகிறது..

அவ்வளவு முதலிடப்படுத்தப்படும் இவர்களில்

அன்னையோ/தந்தையோ/ஆசிரியரோ / அனைவருமோ சேர்ந்து

கடுமை ,கண்டிப்பு கலந்து பிள்ளைகளை வளர்ப்பது சரின்னு நினைக்கிறோமா?

அல்லது

அன்பாக பேசி புரிய வைத்தாலே கடுமை,கண்டிப்பு, போன்றவை

அவசியப்படாதுன்னு நினைக்கிறோமா?

ஒரு கருத்த யுத்தத்துக்கு தயாராகலாமே..

இன்றைய பிள்ளைகள்தானே நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்…..

அந்த நட்சத்திரங்கள் பிரகாசமா ஜொலிக்க
நாம என்ன செய்யலாம்…?

எது சரியான வளர்ப்பா இருக்கமுடியும்? என்ற கேள்விக்கெல்லாம்

நீங்க சரின்னு எதை /என்ன நினைக்கிறீங்களோ அத வந்து வாதங்களாகவும்,பிரதிவாதங்களாகவும் இங்க சொல்லுங்கோ….:)

குச்சிஐஸ்,இலந்தைவடை,பஞ்சுமிட்டாய்,தேன்மிட்டாய்,ஜிகர்தண்டா,ஐஸ்க்ரீம்,சாக்லேட் எல்லாம் இருக்கு..

அவங்கவங்களுக்கு பிடிச்சத எடுத்துக்கிட்டு நம்ம நண்டு,சிண்டு மற்றும் வளரும் இளம் பிள்ளைகளுக்காக ஆரோக்கியமான ,அவசியமான வாதங்கள வைங்க..
ஆவலுடன் காத்திருக்கேன்…

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொருந்தும் பெயரிட்டு அழைப்பது கூடாது.

நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

அன்புடன்
இளவரசி

..//காலேஜ் போனவுடன், பிள்ளை வளர்ப்பு முடியுது, இல்லை கல்யாணம் ஆனவுடன் முடியுதுன்னு தப்பு தப்பா கணக்கு போடாதீங்க நடுவர்ஜி//

அட இது வேறயா எத்தனை பிள்ளைகளை அதுவும் எத்தனை காலம் வரைதான்
வளர்க்கறது கஷ்டம்தான் அம்மா பாடு..
:)

//சொல்லிகிட்டே இருக்கணும், மாற்றம் ஒரு நாள் தானா வரும் , ஆனா சொல்றப்போ ,இதை செய்யாதே, இது உனக்கு ஆகாது என்று சொல்வதை விட ,என்ன மாதிரி சொன்னா சரி ஆவாருன்னு//

கண்டிப்பாய் சொல்லப்படும் நெகடிவ் அப்ரோச்சவிட ,பாசிட்டிவ்வா சொல்லும் அன்பான அப்ரோச் சரின்னு சொல்றாங்க

//எத்தனை வயசு ஆனாலும் நாம் இன்னும் சில விஷயத்தில் ,நம் பெற்றோர் எதிர்பார்ப்பது போல நடந்து கொள்வது இல்லை .நாம் நினைக்கறா மாதிரி தான் நடப்போம்.//

சரியா சொன்னீங்க

//இதுல இந்த லேட்டஸ்ட் நண்டு சிண்டு எல்லாம் என்ன மாதிரி இருப்பாங்க, நீங்க என்னடா என்றால் கண்டிப்பு ,கண்டிப்பு என்று சொல்லி இந்த பிஞ்சு மனசை காயப்படுத்தாதீங்க//

கண்டிப்பு ,கண்டிப்பா காயங்கள் கொடுக்கும் வேண்டாமேன்னு சொல்றாங்க

//நீங்க யோசிங்க !!45 பேர் படிக்கற இத்த்டுநூண்டு க்ளாசில் எப்படி காலை போல மாலை சுத்தமா வைக்கறது ?? //

அன்பா பிள்ளைகள் கிட்ட தினமும் வரும்போது ஒரு நாப்கின் துணிய டிபன்பாக்சோட சேர்த்து எடுத்து சாப்பிடறப்ப அத விரிச்சு போட்டு அதுல வச்சு சாப்பிட சொல்றது.....என் விடை தவறா?சரியான்னு நாளைக்கு வந்து டீச்சரம்மா சொல்லிடுங்கோ...:)

கலக்கலான கருத்துகுவியல்கள் எல்லாமே அருமை..பாராட்டுக்கள்
இந்தாங்கோ போலோ எல்லாம் வேண்டாமே அதவிட இந்த கடலைமிட்டாய் சாப்பிடுங்கோ... வேணுமின்னா பிள்ளைகளுக்கு காக்காகடி கொடுத்துட்டு சாப்பிடுங்க...

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஷிபா வாங்கோ..:)

இந்தாங்கோ லாலிபாப் ..

//பெற்றோர்கள் கிட்ட எதையும் பகிர்ந்துக்க மாட்டாங்க. நமக்கு தெரியாமலே நிறைய காரியங்களை செய்ய துவங்கிடுவாங்க. நீங்கள் கேட்டால் நான் பன்னவே இல்லனு சாதிப்பாங்க, பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள். நம்மள

எப்படி ஏமாத்தலாம்ங்கிற டெக்னிக்கெல்லாம் கத்துப்பாங்க.//

கண்டிப்பு பொய் சொல்லவும் ஏமாத்தவும் கத்துகொடுக்குதுன்னு சொல்லிட்டீங்க

//பிள்ளைகளை கண்டித்தால் ஒரு போதும் நம் மீது அவர்களுக்கு மரியாதை வராது. நம்ம முன்னாடி நல்லா பேசுவாங்க ஆனா நாம இல்லாதப்ப மரியாதைகுறைவாய் திட்றது, பட்டப்பேர் வைத்து கூப்பிட்றது, இப்படியெல்லாம் அழிசாட்டியம் செய்வாங்க.//

கண்டிப்பால மரியாதையை வாங்க முடியாது..பட்ட பேர் மட்டும்தான் வாங்கமுடியுமின்னு சொல்றாங்க

தொடர்ந்து வந்து கருத்து சொல்லுங்கோ...

புனிதா..!

வாங்க உங்க வரவு மகிழ்ச்சி..இந்தாங்கோ சாக்லேட்

//அன்பா சொன்னா போதும்.சிரிப்புடன் அந்த வேலையை செய்வான்.அதுவே கோவமா சொன்னோம் நமக்கு அடிதான்//

அனுபவம் நல்லா பேசுது.....அது உண்மைய தானே பேசும்

//வாடா செல்லம் நல்லபுள்ள,சமத்து அப்படின்னு சொன்னா மறுபடியும் அத செய்வது இல்லை.இதில் இருந்து என்ன தெரியுது என்றால் அன்பில் சிறந்தது எதுவும் இல்லை.என்னங்க சரி தானே.................//

ஆமா ஆனா இல்லன்னு தான் இப்பசொல்லமுடியுது :(

மாத்தி மாத்தி இது சரியா?இல்ல அது சரியான்னு கேட்டா என்ன சொல்றது...
எந்த பக்கம் ஒகே சொல்றதுன்னு புரியல...

நல்ல கருத்துக்கள் தொடர்ந்து வந்து அனுபவம் சொல்லுங்க

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவரே நீங்க குடுத்த பில்டர் காபி சுப்பர். அதுக்கு பரிசா உங்களுக்கு நல்ல மனம் வீசும் மதுரை மல்லி இந்தாங்க. காபி குடித்த தெம்போடு இதோ என் கருத்துக்கள்

//தண்டனைகள் எங்கே உள்ளனவோ அங்கே தான் தப்புகள் குறைக்கப்படுகின்றன// நம் நாட்டில் எவ்வளளோ சட்டம் உண்டு. அவை அனைத்தும் செய்த தப்புக்கு தண்டனைகள் தர கூடியனவாகவே உள்ளது. அதனால தப்புகள் குறைந்து இல்லாமலா போய் விட்டது. அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்றல்லவா புதுப்புது சிந்தனைகள் வருகின்றது. என்ன கொடுமைங்க இது ?

//கண்டிப்பான முறையில் குழந்தையை வளர்க்கும் போது தான் அது கட்டுக்கோப்பாக இருக்க முடியும்// ம் ம் பல பல புதிய தெரியாத கருத்துக்களை நம் மக்கள் வைக்கின்றனரே. எந்த காலத்துல இருக்கீங்க கொஞ்சம் 2012 க்கு வாங்க. இப்போ உள்ள காலத்துல யாரையும் கண்டிப்போட வளர்த்து கட்டுக்கோப்பா வைக்க முடியாது. சரி நீங்க உங்க பிள்ளைய கண்டிப்பா வளர்குறீங்க ஆனா இப்போ உள்ள cinema உலகம் சும்மா விடுமா உங்க குழந்தைய ? அது தான் சீரழிவுக்கு முதல் காரணம். வேணும்னா சும்மா நீங்க சொல்லலாம் என் பிள்ளைய cinema பார்க்காம வளர்ப்பேன்னு அது முடிமா ? நமக்கே தெரியாத பல தவறான விஷயங்கள் இந்த cinemaa ல காட்டிடுறாங்க. அதுக்கு என்ன பண்ண முடியும் ? அவுங்கள cinema பார்க்காதேன்னு தடை போட்டாலும் முடியாது. இந்த இடத்துல அவுங்க கிட்ட அன்பா கண்ணு இந்து வேணாம் இந்த சேனல் பாருன்னு கார்ட்டூன் or ஏதாவது ஒரு நல்ல ஷோ போட்டு விடலாம். இங்க அன்பு தான் ஜெய்க்கும். அதட்டினா அவன் உங்களுக்கு தெரியாம பார்ப்பான்.

பள்ளியில் - டீச்சர்ஸ் : ஆசிரியர்கள் மேல் மதிப்பு, மரியாதை தான் இருக்க வேண்டுமே தவிர பயம் இல்ல. அவுங்க என்ன பூதமா பார்த்து பயப்பட. மரியாதை வேற பயம் வேற. மரியாதை குடுக்குற ஆசிரியைகளுக்கு மாணவன் கண்டிப்பா பயப்படுவான். ஆனா பயம் குடுக்குற ஆசிரியர்கு கண்டிப்பா மரியாதை குடுக்கவே மாட்டேன். அவுங்க அந்த பக்கம் போனதும் "இதெல்லாம் எதுக்கு தான் நம்ம உய்ர வாங்க பள்ளிக்கு வருதோன்னு" கேவலமாத்தான் பேசுவான். இந்த மாதிரி கேட்ட எண்ணங்கள் அவனுக்கு வருவதற்கு நாமே ஏன் காரணமாக இருக்க வேண்டும் ? அன்பா சொல்லி குடுங்க அவனுக்கே அந்த டீச்சர் பாடத்து மேல ஒரு தனி விருப்பம் வரும். வீட்டு பாடம் செய்ய உட்கார்ந்தா முதல்ல அவுங்க பாடத்தை தான் முடிப்பான். சாக்கு சொல்லி சமாளிச்சுக்கலாம்னு எண்ணமே வராது. அந்த பாடத்துல கண்டிப்பா அவன் அதிக மார்க் தான் வாங்குவான்.

ஆண் பெண் தொடர்பு - இங்க நீங்க கண்டிப்போட சொன்னீங்க கண்டிப்பா தப்பு தான் நடக்கும். ஏன் இப்படி கண்டிக்குறாங்க அத செய்து பார்த்தா தான் என்ன அப்படின்ற எண்ணம் தான் முதல்ல வரும். இது "முள் மேல சேலை விழுந்த மாதிரி" நாம தான் சேலை கிழியாம (பசங்க மனசு கெடாம பக்குவமா சொல்லணும்) எடுக்கணும். அது தான் புத்திசாலி தனம். அத விட்டுட்டு கண்டிப்போட சேலைய மட்டும் உருகுன்னீங்க சேலைக்கு தான் பாதிப்பு.

//இப்படி சிறிய வயதிலேயே இத்தனை கொடூரமானவர்களாக வளர்கிறார்கள் என் நினைக்கும் போது மனம் பதறுகிறது.இப்படிப்பட்டவர்களுக்கு அன்பாக பேசி பேசி சென்றால் நம்மை முட்டாளாக்கி விடுவார்கள்// அவனை கொடூரமானவனாக மாற்றுவது கண்டிப்பு தான் அன்பு அல்ல. MGR படம் ஒன்று பேர் தெரியல அதுல கூட மொத்தம் 4 கைதிகள். ரொம்ப கொடூரமானவுங்க. அவுங்கள MGR தன் அன்பால திருத்துவார். அவ்வளவு கொடூரமான கைதிகளையே அன்பால திருத்த முடயும்னா நம்ம குட்டி பிள்ளைகளிடத்தில் மட்டும் ஏன் அப்படி நடக்க கூடாது ?

//இப்ப என்ன சொன்னாலும், தற்கொலை இல்லைனா கொலைன்னு இந்த சமூகம் செல்ல காரணம் என்ன? தண்டைகள் பள்ளியில் குறைக்கப்பட்டதால் தான்.. ஆசிரியர் திட்டினா ,தெனாவெட்டா, என்ன இப்ப? கையை உயர்த்தி கேக்கின்றனர். நம் காலத்தில் அப்படியா இருந்தது.. காதை திருகி முட்டி போட வைத்தால் எல்லாம் தானாக சரி ஆகிவிடும்// அதெல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா முட்டி போட வைத்து விட்டால் விட்டு விடுவான அந்த ஆசிரியர் பள்ளி முடித்து வெளி வரும் போது ஏதாவது செய்து விடுவான். தற்கொலைக்கு காரணம் மன உளைச்சல். அது வருவது உங்கள் கண்டிப்பால் தானே தவிர அன்பால் அல்ல.

ஏன் எதிரணியினர் கண்டிப்போடு இருந்தால் தான் கட்டுப்பாடு வரும்னு சொல்றாங்க. சரி நம்ம பிள்ளைகளுக்கு பெற்றோர் நாம இருக்கோம். பெற்றோர் இல்லாத எத்தனை பிள்ளைகள் இருக்காங்க அவுங்க எல்லாரும் என்ன தரிகேட்டா அலையுறாங்க ? முதல்ல இந்த குறுகிய மனப்பான்மைய விடுங்க. கண்டிச்சாதான் கட்டுப்பாடா இருப்பான் இல்லைனா கெட்டு போயிடுவான்னு சொல்லாதீங்க.

"அன்பே சிவம்" ன்னு தான் சொல்லி இருக்காங்க. யாரும் கண்டிப்பை கடவுளுக்கு நிகரா வைச்சு சொல்வது இல்ல.

அன்பு மட்டுமே மனிதனை மனிதனாக வாழ வைக்க உதவும்.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

வந்தாச்சா...வணக்கம்..இந்தாங்க தித்திக்கும் திரட்டுப்பால்.:)

//பிள்ளைகளை அடித்துத் துவைத்து உதைத்து வளர்த்தால், அந்தப் பிள்ளை முரடனாகத்தான் வருவான் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், எப்போதும் கொஞ்சிக் கொண்டே இருந்தால், பெரியவனன் ஆனதும் அதையேதான் வெளியிடங்களில் எதிர்பார்ப்பான்.

கிடைக்காதபோது, கோழையாகவும் தாழ்வு மனப்பான்மை உள்ளவனாகவும் வளர்வான்.”//

கண்டிப்பின்மை கோழைத்தனத்தையும்,தாழ்வுமனப்பான்மையையும் வளர்க்கும்ன்னு சொல்றாங்க..

//நடுவரே, ஒரே விஷயத்தை, சரியானபடி தலைப்பிட்டு, வார்த்தைகள், வரிகளுக்கு இடைவெளி கொடுத்து, பதிவிடும்போது அது மனசில் பதிகிறதுதானே.//

பதியாம எப்படி நல்லா பதிஞ்சுடுச்சுங்கோ...:)

நீங்க அவசரமா பதிவிட்டு இருக்கமாட்டீங்களே..வேற யாரும் இந்த பேர்ல போட்டுட்டாங்களான்னு ஒரு குழப்பம்..அப்புறம் அடியில பேரை பார்த்ததும் இதுல ஏதோ உள்குத்து இருக்குன்னு நினைச்சேன்...அது இதுதானா..!!

//பெற்றோர், ஆசிரியரின் கண்டிப்பு என்கிற இடைவெளி பிள்ளைகளுக்கு அவசியம் தேவை. அப்போதுதான் சரி எது தப்பு எது என்பது அவங்க மனசில் பதியும்.//

சரியையும் தப்பையும் இனம்பிரித்து காட்ட கண்டிப்பு அவசியம்மின்னு சொல்றாங்க

மூளையை அயர்ன் செய்து செய்து சூடு தாங்கல....:(

எல்லாரும் ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க...:)

தொடர்ந்து வந்து ப்ஞ்ச் வைக்கும் பாயிண்ட்ஸை பதியுங்கள்...

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இது பட்டிமன்றத்துக்காக இல்லை நிஜத்திலும் கண்டிப்பாக இருக்க பழகுங்க.கண்டிப்புன்னா உடனே அடி தடின்னு நெனச்சுக்காதீங்க...கண்டிப்பா வளர்ந்து பழகிய குழந்தை நிச்சயம் பின்னாளில் அப்பா அம்மாவை கோபப்படுத்த கூடாது அவங்க முகம் மாறிட கூடாதுன்னு ஜாக்கிரதையா இருக்கும்.அப்படியே அன்பை மட்டும் பொழிஞ்சு பாருங்க உங்க அன்புக்கு விலையே இல்லாமல் போய்டும்..சுத்தமா மரியாதை கூட தர மாட்டாங்க.
கண்டிப்பு என்றால் சதா இருபத்தி நாலு மணிநேரமும் கண்டிப்பு செய்வது அல்ல..இது கூடாது என்றால் கூடாது ரொம்ப ஆசைபட்டால் சில விஷயங்கள் விட்டு பிடிக்கலாம் ஆனால் ஒரு எல்லைக்கு மேல் போக விடக் கூடாது.கேக்கலையா அதட்டுங்க அதுக்கு மேலயும் கேக்காம இருக்காது..அதன் பிறகு அன்போடு சொல்லுங்க எதனால் அதட்ட்டினேன் என்று..நிச்சயம் புரிஞ்சுக்குவாங்க
உதாரணத்துக்கு விருந்தினர்கள் வீட்டுக்கு வந்து திரும்ப போறாங்க நம்ப பிள்ளை டிவி பாக்குது மும்முறமா.டிவி ஆஃப் பண்ணிட்டு வாங்க பாய் சொல்லுங்கன்னு சொல்லலாம்..கேக்காம இருக்கா கண்ணை உருட்டி காட்டினாலே கண்டிப்பாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் பறந்தடிச்சுட்டு ஓடிவரும்...அன்பை மட்டுமே காட்டுவீங்களா அங்கயே உக்காந்திருக்கும்..இது காலாகாலத்துக்கும் கன்டினியூ பண்ணும்போது தான் எப்படி பெரியவங்களை மதிக்காம நடந்துக்கலாம்னு பழகும்

இளவரசி வரவேற்புக்கு நன்றி;-)..ரொம்ப சந்தோஷம்..ஜாம்பவான்னெல்லாம் சொல்லி என்னை பயமுறுத்திட்டீங்க;-D

நடுவரே மிக்க நன்றி, அடிக்கற சித்திரை மாச வெயிலில் உங்க லஸ்ஸி ஜில்லுனு இதமா இருக்கு...

சரி நம்ம பட்டிக்கு வரேன், ஒரு சின்ன புள்ளைகிட்ட போய் உனக்கு அப்பா அம்மா பிடிக்குமா இல்லை தாத்தா பாட்டி பிடிக்குமான்னு கேளுங்க... அது நிச்சயமா தாத்தா பாட்டி தான் பிடிக்கும்னு சொல்லுவாங்க... காரணம் தாத்தா பாட்டி, அப்பா அம்மா மாதிரி எப்பவும் கண்டிப்பு காட்டாமல் எப்பொழுதும் அன்பா தான் இருபாங்க.. நல்ல கருத்துள்ள நீதிக்கதைகளை சொல்லி குழந்தைகளுக்கு நற்பண்புகளை வளர்க்கிறாங்க... பெற்றோர்களா இருக்கும்போது தன்னோட பிள்ளைகளோட வாழ்கை நல்ல இருக்கணும்னு நினைச்சு கண்டிப்புடன் நடந்துகிரங்க ஆனால் அது பிள்ளைகளை தன்னிடமிருந்து விளக்கி வைகிறது என்பதை அவங்க பொருட்படுத்துவது இல்லை. அப்பறம் அவங்க தாத்தா பாட்டியா ஆகும்போது அன்பு தான் நிலையானதுன்னு பக்குவபட்டிடறாங்க... அது அவர்களுடைய பேரன் பேத்திகளோடு அன்பாக பழக தூண்டுகிறது... தாத்தா பாட்டியிடம் வளர்ந்த பிள்ளைகள் இதுவரை கெட்டு போனதாக நாம் கேள்வி பட்டிருக்க மாட்டோம்.

மிருங்கள் கூட அதுங்க குட்டிகள் வாலு பண்ணும்போது சகிசிட்டு கொஞ்சுமே தவிர கோபப்படாது... நாம் மனிதர்கள் மட்டும் குழந்தைகள் சேட்டை பண்ணால் அடிப்பது, சொல்லி கேட்கலைனால் கண்டிகரதுனு இருக்கோம். நீ சீக்கிரம் ஹோம் வொர்க் முடிச்சிட்டா 1 மணி நேரம் கம்ப்யுடர்ல விளையாடலாம் நு சொல்லுங்க நீங்க சொல்றது முன்னாடியே அவங்களே ஹோம் வொர்க் பண்ண ஆரம்பிச்சிருவாங்க...

//விருந்தினர்கள் வீட்டுக்கு வந்து திரும்ப போறாங்க நம்ப பிள்ளை டிவி பாக்குது மும்முறமா.டிவி ஆஃப் பண்ணிட்டு வாங்க பாய் சொல்லுங்கன்னு சொல்லலாம்..கேக்காம இருக்கா கண்ணை உருட்டி காட்டினாலே கண்டிப்பாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் பறந்தடிச்சுட்டு ஓடிவரும்...அன்பை மட்டுமே காட்டுவீங்களா அங்கயே உக்காந்திருக்கும்..இது காலாகாலத்துக்கும் கன்டினியூ பண்ணும்போது தான் எப்படி பெரியவங்களை மதிக்காம நடந்துக்கலாம்னு பழகும்//

அப்படி இல்லைங்க... அன்பா வளர்த்தால் அவங்க நம்மளை மதிக்க மாட்டங்கன்னு இல்லை. நாம பிள்ளைகளுக்கு நற்குணங்களை சொல்லி பழக்கணும். வீட்டுக்கு விருந்தாளி யாரும் வந்தா ஆன்டிக்கு வணக்கம் சொல்லணும், அவங்க முனனடி கால்மேல கால்போட்டு உக்காரக்கூடாது, அவங்க கிளம்பும்போது நன்றி, திரும்பவும் வாங்கனு சொல்லனும்னு சொல்லி குடுக்கணும்... அப்படி அவங்க அதை ப்பாலோ பண்ணாலே வந்தவங்க யு ஆர் ஸோ ஸ்வீட் நு பாராட்டுவாங்க... பெரியவர்களே பாராட்டுக்கு மயங்கும்போது சிறு பிள்ளைகள் எம்மாத்திரம், நாம சொல்படி கேட்டு நடப்பாங்க. குழந்தைகள் கிட்ட அன்பால் தான் எதையும் சாதிக்க முடியும்... கண்டிப்புடன் சாதித்தால் அது அவர்கள் மனதினுள் வெறுப்பைதான் தக்கவைக்கும்.

குழந்தைகள் கிட்ட, கண்ணு நீ பக்கத்துக்கு மாமா வீட்டுக்கு போய் அதை இதை எடுத்தால், அப்பறம் அவங்க பாப்பா வந்து உன் சொப்பு எல்லாத்தையும் எடுத்திட்டு போயிரும்னு சொல்லுங்க... அதுக்கப்பறம் நம்ம பிள்ளை அடுத்த வீட்டு பொருளை தொடவே தொடாது...

இந்த காலத்து புள்ளைங்க ரொம்பவே அறிவாளிங்க... எதையுமே நாம அன்பா சொல்லும் விதத்தில் சொன்னால் புரிஞ்சுபாங்க... அதேமாதிரி கண்டிகரோம்னு சொல்லி, அடுத்தவீட்டு பிள்ளையோடு கம்பேர் பண்றது குழந்தைகள் மனசில் பொறாமையாய் தான் வளர்க்கும்... அதுக்குபதில் குட்டி நீ முதல் ரேங்க் வாங்கினா உன்னை தீம் பார்க் கூட்டிட்டு போறேன் , பீச் கூட்டிட்டு போறேன்னு சொல்லிபாருங்க... ஆசையுடன் படிப்பாங்க.

அன்பா வளர்த்த பிள்ளைங்க ஹாஸ்டல்ல தங்கி படிக்கும் சூழ்நிலை வந்தாலும் எப்பவும் ஒரே மாதிரி தான் நடந்துக்கும். ஆனா கண்டிப்புடன் வளர்த்த பிள்ளைங்க ஹாஸ்டல்ல தங்கிப்படிக்கும் நிலை வந்தால், அப்பாட விடுதலை, வீட்ல தான் அப்பா அம்மா டார்சர் இங்கயாவது ப்ரீயா நிம்மதியா இருக்கலாம்னு தான் நினைக்கும், செய்யக்கூடத தவறுகளை எல்லாம் செய்ய தோன்றும்.

ஸோ குழந்தைகளை அன்பால் மட்டுமே வளர்க்க வேண்டும்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நடுவருக்கு வணக்கம்.

திரட்டுப்பாலை சிந்தாம, சிதறாம சாப்பிட்டுட்டேன், சூப்பர் டேஸ்ட்! நன்றி, நன்றி.

கண்டிப்புங்கறது எப்ப வருது?

நாம சொல்றதை பிள்ளைங்க கேக்காத போது,

அவங்க செய்யறது சரியாக வராது என்பதை அவங்களுக்குப் புரிய வைக்க நேரும்போது!

எதுக்கெடுத்தாலும் பிள்ளைங்களை மிரட்டுற, அடிக்கிற ஈகோயிஸ்ட் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் விட்டுடுங்க. இப்ப நம்ம இங்கே பேசறது எப்படி இருந்தால் நல்லது என்பதைப் பற்றித்தான்.

சாதாரணமாக பின்பற்ற வேண்டிய விஷயங்களை திருப்பி திருப்பி சொல்லலாம், அங்கே கண்டிப்பு தேவையில்லை.

உதாரணம்: சாப்பிட்டுட்டு தட்டை கழுவப் போடு, ஷூஸ் கழட்டினால், ஸ்டாண்டில் எடுத்து வை, சட்டையை அழுக்காக்கிக்காதே. தங்கச்சியோட சண்டை போடாதே.. இப்படியெல்லாம் சொல்வதை அடிக்கடி சொல்லலாம் தப்பில்லை.

ஆனால், கண்டிப்பாக கண்டித்து சொல்ல வேண்டிய விஷயங்கள் இருக்கு, உதாரணமாக - ரோடில் நடந்து வரும்போது அம்மா கையைப் பிடிச்சுட்டுதான் வரணும்.

வாசலில் செருப்பை, ஷூவை, கழட்டிட்டு, மிதியடியில் காலை நல்லாத் துடைச்சுட்டுதான் வரணும்.

சாப்பிடறதுக்கு முன்னால கை கழுவிட்டுதான் உக்காரணும்.

எதுவும் வேணும்னா, உடனே அழ ஆரம்பிக்கக் கூடாது. என்ன வேணும்னு வாய் திறந்து கேக்கணும். .. இப்படி நாம அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டியதை சொல்லியே ஆகணும்.

அப்புறம் - கோபப்பட்டாலோ, அடித்தாலோ பிள்ளைகள் நம்மை வெறுப்பாங்க என்ற வார்த்தையில் எனக்கு நம்பிக்கையில்லை.

தினமும் சமையலுக்கு வெங்காயம் உரிக்கும்போது, “சேட்டை பண்ணினால், கண்ணில் வெங்காயம் பிழிவேன்” என்று சொன்ன அம்மாவை இத்தனை வயதுக்கு அப்புறம் மனசு தேடுகிறது.

கம்ப்யூட்டரில் ஸ்பைடர் சாலிடரும் ஃப்ரீ செல்லும் விளையாடிப் போர் அடித்துப் போயிருக்கையில், ‘ லீவுன்னா சாப்பிட, குளிக்க நேரமில்லாமல் எப்பப் பாத்தாலும் எல்லோருக்கும் கையில் சீட்டுதானா, சீட்டுக்கட்டை அடுப்பில் போட்டால்தான் சரியாக வரும்” என்று திட்டிய அப்பாவின் குரல் காதில் ஒலித்து, ஏங்க வைக்கிறது.

சமீப காலங்களில், சில பல விஷயங்களில் என்னால் சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறியதுண்டு. அப்பல்லாம் மனசில் தோன்றியது என்ன தெரியுமா? இப்ப அம்மா, அப்பா, அத்தை, மாமா இருந்திருந்தால், என்ன செய்யணும், எப்படி செய்யணும் என்று கண்டித்து சொல்லியிருப்பாங்களே, நமக்கு இத்தனை குழப்பம் இருந்திருக்காதே என்றுதான் நினைக்கத் தோன்றியது.

கண்டிப்பு என்பது பிள்ளைகளை நல்லா வளர்க்கறதுக்கு மட்டும் இல்லை, குழந்தைகள் எது நல்லது எது கெட்டது என்று தெரியாமல் திணறும்போது, சரியான டெசிஷன் எடுத்து, சரியான பாதையில் போவதற்கு வழிகாட்டியாகவும் கலங்கரை விளக்கமாகவும் இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

நடுவர் அவர்களே, எதிரணியினர் பிள்ளைகள் பற்றி பேசவில்லை பொம்மைகல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கல். இரு என்றா;ல் இருக்கும் போ என்றால் போகும், இன்னிக்கு குழந்தங்க இப்படியா இருக்காங்க, சொல்வதெற்கெல்லாம் தலையாட்டுவது பொம்மை மட்டும் தான் பிள்ளைங்க அப்படியே எங்க எண்ணங்களை பிரதிபலிக்கிற மாதிரியா இருக்காங்க, நாங்க ஒன்னு சொன்னா அவங்க பத்து சொல்வாங்க .அப்போ அவங்கள சமாளிக்க கண்டிப்பு கட்டாயம் தேவை,
நாங்க மிலிட்டிரி நடத்துறதா எதிரணீ சொல்லுது, நடுவர் அவர்களே நாம் சதாவும் பிள்ளைங்கள கண்டிச்சுக்கொண்டா இருக்கோம். இல்லை அன்பா சொல்வோம் 1முரை 2முறை சொல்லிப்பார்ப்போம் . கொஞ்சம் அதட்டிப்பார்ப்போம் முடியல்லயா சிறு அடியும் கொடுப்போம்.
எதிரணியினரே நீங்கள் சொல்லுங்கல் அன்பா பேசி சமாளிக்க முடியாத போது நீங்கல் கண்டிப்பு காட்டுவதில்லையா? தப்பே செய்யாத பிள்ளைங்க எங்க இருக்காங்க பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து கூடி கூத்தடிக்கிற நேரம் எத்தனையோ முறை சொல்லிப்பார்ப்போம் சும்மா இருங்க ,சும்மா இருங்க. இது வேலைக்கு ஆகுமா? “இப்போ நான் பிரம்பு கொண்டு வரவா எல்லோரும் சும்மா இருப்பீங்களா/ இதுதான் வேலைக்கு ஆகும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

//வளர்ந்து பழகிய குழந்தை நிச்சயம் பின்னாளில் அப்பா அம்மாவை கோபப்படுத்த கூடாது அவங்க முகம் மாறிட கூடாதுன்னு ஜாக்கிரதையா இருக்கும்.அப்படியே அன்பை மட்டும் பொழிஞ்சு பாருங்க உங்க அன்புக்கு விலையே இல்லாமல் போய்டும்..சுத்தமா மரியாதை கூட தர மாட்டாங்க.//

கண்டிப்பான குழந்தை பெற்றோரை திருப்திபடுத்த முயற்சி பண்ணும்
அன்பு மட்டும்னா மரியாதை தர யோசிக்குமின்னு சொல்றாங்க

//விருந்தினர்கள் வீட்டுக்கு வந்து திரும்ப போறாங்க நம்ப பிள்ளை டிவி பாக்குது மும்முறமா.டிவி ஆஃப் பண்ணிட்டு வாங்க பாய் சொல்லுங்கன்னு சொல்லலாம்..கேக்காம இருக்கா கண்ணை உருட்டி காட்டினாலே கண்டிப்பாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் பறந்தடிச்சுட்டு ஓடிவரும்...அன்பை மட்டுமே காட்டுவீங்களா அங்கயே உக்காந்திருக்கும்..இது காலாகாலத்துக்கும் கன்டினியூ பண்ணும்போது தான் எப்படி பெரியவங்களை மதிக்காம நடந்துக்கலாம்னு பழகும்//

சில விஷயங்கள் அவசியமின்னு படும்போது மன்சில படும்படி கண்டிப்பு காட்டணுமின்னு சொல்லீட்டிங்க

இந்தாங்கோ மைசூர்பாக்...
உங்க ரெசிபிபடி செஞ்சது.. நல்ல சுவை எடுத்துக்கோங்க..:)
பயப்படறவங்களா நீங்க பட்டய கிளப்புறீங்க ;)

தொடர்ந்து வாங்க

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சீத்தாம்மா அருமை அருமை..கேளுங்க எதிரணியினரே தெரிஞ்சுக்குங்க .
நூற்றுக்கு நூறு உண்மை.எங்கள் வீட்டில் என் கணவர் பிள்ளைகளை அளவுக்கு மீறி கொஞ்சுவார் எதுவாவது வம்பு பண்ணினால் அம்மாவை கூப்பிடவா என்று பயமுறுத்துவார்;-)..ஆனால் பாருங்க அவர் ஒரு விஷயத்தை நாலு முறை சொன்னாலும் காது கேட்காதது போல் இருப்பாங்க நான் சொன்னால் அடுத்த நொடி அந்த விஷயம் நிறைவேறிடும்.
என் நெருங்கிய உறவினரது அம்மா அவருடைய சிறு வயதில் உயிரே போனாலும் பைய்யன் எதை சொல்கிறானோ அதான் நடக்க வேண்டும் என்று அவர் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தும் அன்பை பொழிந்தும் வளர்த்தார்..அவர் அப்பாவோ கண்டிப்பானவர் பின்னி பெடலெடுத்துடுவார்..ஆனால் பாருங்களேன் இன்று அவருக்கு அம்மாவை காட்டிலும் அப்பா என்றால் கொள்ளை பிரியம் திருமணமாகியும் குழந்தைகள் இருந்தும் நாடு விட்டு நாடு வந்தும் தவறாமல் அடிக்கடி ஃபோன் போட்டு தினசரி அப்பா மூனு வேளை சாப்பிட்ட சாப்பாடு வரை கேட்பது எனக்கு பெரும் அதிசயம்..இப்போ சொல்லுங்க எதிரணியினரே கண்டிப்பாக இருந்து அப்பா அம்மாவை வெறுத்த யாரையாவது காட்டுங்களேன்..உங்கள் கண் முன்னே கண்டிப்பா அன்பை மட்டுமே காட்டியும் பெற்றோரை தவிக்க விட்ட பிள்ளைகளை தான் பாத்திருப்பீங்க.
என் சிறு வயதில் பல பல கட்டங்களில் செம்மையா திட்டு விழுந்திருக்கிறது ஆனால் அன்று புரிந்ததே இல்லை எதற்கு என்று இன்று நல்லாவே புரியுது..தாய் தந்தையர் கண்டிப்பது நம்ம நல்ல வளமான எதிர்காலத்துக்கு தான்

மேலும் சில பதிவுகள்