மலாய் சட்னி

தேதி: August 8, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 150 கிராம்
காய்ந்த மிளகாய் - 20 அல்லது 25
நல்லெண்ணெய் - 150 மில்லி
உப்பு - ஒரு ஸ்பூன்


 

இஞ்சியை தோல் நீக்கி நைசாக செதுக்கிக்கொள்ளவும். பூண்டை தோல் உரித்து, ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதை முறுகிவிடாமல், ஆனால் வேகும் அளவு பதமாக வதக்கவும்.
செதுக்கி வைத்துள்ள இஞ்சியையும் லேசான முறுகலில் வறுத்து எடுக்கவும்.
காய்ந்த மிளகாயை தீயாத அளவுக்கு வறுத்துக்கொள்ளவும்.
இந்த மூன்றையும் உப்பு சேர்த்து, வாணலியில் உள்ள (பொரித்த) எண்ணெயை ஊற்றி மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இது இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக அருமையான ஒரு சட்னி.


எண்ணெய் கூடுதலாக தேவைப்பட்டால் இட்லி பொடிக்கு ஊற்றுவது போல் அதில் ஊற்றி சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Dear Asma,
அடேயப்பா!!! வித்தியாசமான அருமையான சுவை... இஞ்சி, பூண்டு, நல்லெண்ணெய் என்று உடலுக்கு தீங்கு விளைவிக்காத பொருள்களில் செய்வதால் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதும் கூட... மிக்க நன்றி அஸ்மா...

Vazhga Tamil!!!

சற்று இடைவெளிக்கு பிறகு கருத்துக்களை பரிமாறுகிறோம். உங்களின் பாராட்டினால் மகிழ்வுற்றேன். மிக்க நன்றி!

Very Very Tasty..... Thanks.

செய்து பார்த்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி!

//இது இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக அருமையான ஒரு சட்னி.// அஸ்மா மேடம் உண்மையிலேயே நல்ல டேஸ்ட் அவ்வளவு சூப்பர். எங்க வீட்டுல அடிக்கடி செய்யும் சட்னியா மாறிவிட்டது இந்த மலாய் சட்னி.