இனிய செய்தி

இன்று காலை home test செய்த்ததில் நான் தாய்மை அடைந்துள்ளேன் என்று தெரிய வந்தது . கடவுளுக்கு நன்றி.இந்த சந்தோஷத்தை எனக்கு தந்த அறுசுவை தோழிகளுக்கு நன்றி.எனக்கு நீர்கட்டி இருந்தது என்றதும் எங்கள் குடும்பமே ரொம்பவே பயந்து போனோம். ஆனால் அறுசுவை தோழிகளின் மலைவேம்பு பற்றிய ஆலோசனை தான் இன்று இவ்வளவு பெரிய சந்தோசத்தை எனக்கு தந்திருக்கிறது.அனைவருக்கும் நன்றி என்று மட்டும் சொன்னால் அது மிகையாகது.இனி நான் எப்படி இருக்க வேண்டும்?? என்னுடைய தாய் போல நினைத்து உங்களிடம் ஆலோசனை கேட்கின்றேன்.ஆலோசனைகளை எதிர்பார்த்து உங்கள் காயத்ரிகார்த்திகேயன்

மிக்க சந்தோஷம்,வாழ்த்துக்கள் தோழி.நல்லா சாப்பிட்டு,முதல் 3 மாசத்துக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க ,அப்புறம் டாக்டர் ஆலோசனைப்படி வேலைகள் செய்யுங்க.அறுசுவையில் ஏராளமான இழைகள் இதைபத்தி இருக்கு.பார்த்து கவனமா இருங்க தோழி,.முடிந்த அளவு நல்லதே பாருங்கள்,கேளுங்கள்,செய்யுங்கள்.மீண்டும் வாழ்த்துக்கள்

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

ரொம்ப நன்றி Fathimah Sister

congrats.... and takecare ur self and baby... dont take toomuch wait... take more rest.... avoid heat produce foods... drink more water... take tablets correcly.... bye dear..

BE HAPPY MAKE OTHERS HAPPY

வாழ்த்துக்கள் காயத்ரி. உடம்ப நல்ல பாத்துகோங்க. உடம்புக்கு சூடான எதையும் சாப்பிடாதீங்க. அதாது சிக்கன், புளி, எலுமிச்சம் பழம் இதெல்லாம் சாப்பிடாதீங்க. பழம், கீரை நிறைய சாப்பிடுங்க. வெயிட் தூக்காதீங்க காயத்ரி. சந்தோசமா இருங்க. ஒரு மூணு மாசத்துக்கு ரொம்ப careful ஆ இருங்க.

ரொம்ப நன்றி sisters

ஹாய் காயத்ரி.... வாழ்த்துகள்....

எனக்கும் நீர் கட்டி இருக்கு பா.
நான் glucophage மாத்திரை சாப்பிட்டு கொண்டு இருகிரேன்.
மலை வேம்பு எப்படி சாப்பிடனும்??

god with us

எனக்கு மலைவேம்பு சித்தமருத்துவ கடையில் கிடைத்தது, மலை வேம்பு காய்ந்த நிலையில் தான் இருந்தது. மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் காலையில் வெரும் வயிற்றில் இதை குடிக்க வேன்டும் . (ரொம்ப கசப்ப இருக்கும் குழந்தையை நினைத்துட்டே குடித்து விடுங்கள்)50 கிராம் மலைவேம்பை 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு முதல் நாள் இரவே காய்ச்ச வேண்டும் . தண்ணீர் 1/2 டம்ள்ர் வரும் வரை காய்ச்ச வேண்டும். பிறகு அதை வடிகட்டி வைத்து விட வேண்டும் .மறுநாள் காலை மேல் கூறியது போல் வெரும் வயிற்றில் குடிக்க வேண்டும்.(முதல் நாள் மட்டும் நான் காலையில் எழுந்து தான் காய்ச்சினேன்) இப்படி 3 மாதங்கள் குடிக்க வேண்டுமாம் நான் போன மாதம் தான் குடித்தேன். முக்கியமா நல்ல பக்தியோட கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்

எனக்கு Dr இந்த மாதம் நீர்கட்டிகாக treatment ஆரம்பிப்பதாக கூறினார், கடவுளின் கிருபையால் நல்லதே நடக்கிறது. நீர்கட்டிக்கு tablet எடுப்பதால் குழந்தைக்கு எதிர்காலத்தில் பிரட்ச்சனை வரும் என்று படித்த நியாபகம் அதான் நான் மலைவேம்பு குடித்தேன்.

வாழ்த்துக்கள் காயத்ரி உங்க சந்தோஷம் நல்லாவே புரியுது...சந்தோஷமா இருங்க .வாழ்த்துக்கள்

ரொம்ப நன்றி Thalika Sister

மேலும் சில பதிவுகள்