தோழிகளுக்கு அன்பு வணக்கம்!!!
எல்லாரும் நலமா ???
எனக்கு ஒரு உதவி பண்ணுங்க பா என் தோழி ஒருவருக்கு இரு கர்ப்பப்பைகள் இருக்கு திருமணம் முடிந்து 6 வருடங்கள் ஆய்டுச்சு இன்னும் குழந்தை இல்லை, மதுரை ல எந்த டாக்டர் ட்ட பாக்கலாம்? யாருக்காவது இப்படி இருந்து குழந்தை பிறந்து இருக்கா? ishwarya women care center ல பார்க்கலாம் நு சிலர் சொன்னன்ங்க, அங்க நல்லா பார்க்குறாங்களா? 3,4 தடவை iui பண்ணியாச்சு, ivf பண்ணலாம் நு இருக்கோம், உங்களுக்கு தெரிந்த எதாவது ஒரு வழி சொல்லுங்க,
அபிராமி
//யாருக்காவது இப்படி இருந்து குழந்தை பிறந்து இருக்கா?// வெகு காலம் முன்பாக ஒரு ஆங்கில மாத இதழில் ஒரு பெண்ணுக்கு இரண்டு கருப்பைகள் இருந்ததாக அந்தப் பெண்ணின் படத்தோடு ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அவருக்குக் கடைசிக் குழந்தை கிடைத்த பின்புதான் இரண்டு கருப்பைகள் இருந்ததே தெரியவந்ததாம். தாய், சேய்கள் அனைவரும் ஆரோக்கியமானவர்களாக இருந்ததாகக் கட்டுரை சொல்லிற்று.
உங்கள் மீதிச் சந்தேகங்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை, மன்னிக்க வேண்டும்.
- இமா க்றிஸ்
hai abi
hai abi,nanum ishwariya karutharipu maiyam,patri kelvi pattu irukken pa,enga SONTH kara oruthanga anga than parthu neerkatti eduthu ippa kulanthai iruku,neenga angae parkalam,appuram intha 2 karupa paikum kavalai padatheerkal ,sunnewsla hello dr la itha pathi last week paesinanga,kulanthai pirakkum entru,kavalai padamal treatment edunka,unga pathilaium podunga.takecare!
imma amma
குழந்தை இருப்பதால் உடனே பதில் தர முடியவில்லை,
இம்மா அம்மா, எனக்க பதில் தந்ததற்கு மிகவும் நன்றி, உங்களுக்கு தெரிந்ததை நீங்க சொன்னீங்க, இதுல மன்னிப்பு எல்லாம் எதுக்கு கேக்குறீங்க, ஏதோ உங்கள் ஆசிர்வாதத்தால் என் தோழிக்கு சீக்கிரம் குழந்தை வரம் கிடைத்தால் போதும்.
அன்புடன் அபி
durka
துர்க்கா எனக்கு பதில் தந்ததற்கு ரொம்ப நன்றி பா, 5 வருடங்களாக மருத்துவம் பண்ணி பணம் விரயம் ஆனது தான் மிச்சம், என் தோழிக்கு உடம்பும் வெயிட் போட்டுருச்சு, மிகவும் கவலை படுறாங்க, எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு, ishwarya center பத்தி முழு தகவல் கிடைத்தால் சொல்லுங்க பா,
கோவில் கோவிலா ஏறியும் பாக்குறோம் கடவுள் கருணை காட்டல... :( :( :( பார்ப்போம் என்ன நடக்குதுன்னு !!!
வேற தோழிகள் யாருக்காவது இது பற்றி தெரிந்தால் பதிவிடுங்கள் --
அன்புடன் அபி
அபிராமி
அபிராமி, உங்கள் இழையை இப்போது தான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நீங்கள் இந்த இழையில் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் சொல்ல தெரியவில்லை. எனக்கு தெரிந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தருகிறேன்.
//யாருக்காவது இப்படி இருந்து குழந்தை பிறந்து இருக்கா? // என் அக்காவுக்கு இரு கர்ப்ப பைகள் தான். 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும், அதன்பிறகு தங்கின கருவை பலமுறை (பல்வித சூழ்நிலை காரணமாக) அழிக்கும்படி ஆனது. 5வது முறையாக தங்கின கருவை எதுவும் செய்ய முடியாததால் பெற்றெடுத்தாள். பெண் குழந்தை. அத்தோடு ஆபரேஷன் செய்துக் கொண்டாள்.இங்கே தோழிகள் குழந்தைகளுக்காக தவம் கிடக்கும் இந்த சமயத்தில் அபார்ஷன் பற்றி சொன்னதற்கு வருத்தப்படுகிறேன். இதில் தனிப்பட்ட முடிவெடுக்க முடியாதே. புகுந்த வீட்டினர் முடிவே இறுதியான முடிவல்லவா? கடவுளின் விளையாட்டே விளையாட்டு தான். போதும் போதுமென்று சொல்பவர்களுக்கு அள்ளி தந்துக் கொண்டே இருக்கிறார். ஒன்றாவது கிடைக்காதா என்று ஏங்குபவரிடம் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கிறார். அத்தனையும் பொறுமையை சோதிக்கவே என்ற மனோபாவத்தில் எடுத்துக் கொள்ள சொல்லுங்கள். அதனால் உங்கள் தோழியிடம் சொல்லுங்கள். இரு கர்ப்ப பைகள் இருந்தால் குழந்தை பிறக்குமா என்ற சந்தேகமெல்லாம் வேண்டாம். உங்கள் தோழி சீக்கிரமே இரு கர்ப்ப பைகளிலும் குழந்தைகளை சுமக்க தான் போகிறார். நம்பிக்கையோடு மனதை சந்தோஷமாக வைத்திருக்க சொல்லுங்கள். உங்கள் தோழிக்காக மட்டுமல்லாமல் அறுசுவையில் குழந்தையின் வரவிற்காக காத்திற்கும் அனைத்து தோழிகளுக்கும் என் உண்மையான பிரார்த்தனைகள் உண்டு.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
kalpana
உங்கள் பதில் எனக்கு மிகவும் ஆறுதல் ஆகவும் சந்தோஷமாகவும் இருந்தது, என் தோழிக்கு உள்ள பிரச்னை முழுசா சொல்லனும்னா அவங்களுக்கு இரு கர்ப்பப்பை, ஆனால் ஒன்றில் குழந்தை தாங்கும் அளவுக்கு சக்தி இல்ல, ரொம்ப சின்னதாக இருக்கு, மற்றொரு கர்ப்பப்பை நோர்மலா இருக்கு ஆனால் அதுக்கு போகும் குழாய் பலவீனமானதாக இருக்கு நு சொன்னங்க, அதை சரி செய்ய முடியுமா?
எனக்கு இப்ப நெறைய நம்பிக்கை வந்துருச்சு அவங்களுக்கும் குழந்தை பிறக்கும் நு... :) :) :)
எனக்காக பதில் தந்தற்கு நன்றி ...,
--
அன்புடன் அபி
நீங்கள் google ல்
நீங்கள் google ல் Dr.chenthamarai Selvi in Palani என்று searchசெய்து பாருங்கள் அதில் Madurai-ல் டாக்டருடைய முகவரி இருக்கும்.மிகவும் கைராசியான டாக்டர். கண்டிப்பாக குழந்தை பேறு கிடைக்கும்.
Kulandhai illai
vanakkam enaku kalyanam age 4 years aguthu pa ennum kulanthai illa enaku irregular period pa sep month 22 date vanthuchu eppo ennum date agala pa na ennum ethanai nall kalechi test pane parkanum pa pls pa yaravathu sollunga
thank u
Thara
Baby kandippa
Baby kandippa pirakkum......en mama ponnu ku reandu karbapai than.....mrg aagi 2 pulla irukku sis....so dont feel sisi