தமிழ் இனி மெல்ல சாகும்

தமிழ் இனி மெல்ல சாகும் என்றான் பாரதி,இது எந்த பாரதியார் பாடல் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்?தெரிஞ்சிக்கலாம்னு தான் கேட்கிறேன்?

கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!

தந்தை அருள் வலியாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

மிக்க நன்றி,இதன் அர்த்தம் எங்கு கிடைக்கும்,எல்லோருக்கும் பயன்படுமே

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

"மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்ற வார்த்தைகளை டி வி நீலகண்டசாஸ்திரி சொன்னார். அதையே தமிழ்த்தாய் என்னும் பாடலில், மிகவும் மனவேதனையுடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் கூறியுள்ளார். பாடல் முழுவதையும் படித்துப் பாராது எம்மவர் சிலர் பாரதி சொன்னார் எனச் சொல்லியும் எழுதியும் வருவது வேதனைக்குரியதே. அப்பாடலில் நீலகண்டசாஸ்திரியை திட்டுவதற்காகவே அவர் அதைக் குறிப்பிடுகிறார். மீண்டும் ஒருமுறை அப்பாடலை வாசித்துப் பாருங்கள் அதன் உண்மை புரியும். 'என்றந்தப் பேதை உரைத்தான்' என நீலகண்ட சாஸ்திரியைத் திட்டியதோடு, தமிழ்த்தாய் ஆ! எனத்தொடங்கி ......... எமக்குச் சொல்வதாக அவர் சொன்னதையும் படித்துப் பாருங்கள்.

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழில் இல்லை

சொல்லவுங் கூடுவதில்லை அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழ்இனிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்தவசையெனக் கெய்திட லாமோ
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை யென்றும் இருப்பேன்.

நாம் வேற்று மொழியில் உள்ள நல்ல கலை நுட்பங்களை தமிழ்மொழியில் சேர்த்து அதை வளப்படுத்த வேண்டும் என்பதே பாரதியாரின் கனவு. அப்படிச் செய்தால் நீலகண்ட சாஸ்திரி சொன்ன பழிச்சொல் நீங்கி என்றும் பூமியில் தமிழ் நிலைத்திருக்கும், என்றே மகாகவி சொன்னார்.

மிக்க நன்றி,இந்த பதிலில் உங்கள் தமிழ் புலமை மட்டுமல்லாது தமிழ் பற்றும் தெரிகிறது,நானும் இதை நிதானமாக படிக்க வேண்டும்.வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த நீங்கள் எப்படி தமிழில் இவ்வளவு தேர்ந்த புலமையுடன் விளங்குகிறீர்கள் ?சும்மா ஒரு ஆர்வம்தான்.பின்னாடி பிள்ளைங்களுக்கு உதவுமே

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்