வயிறு நிறையவில்ல மனம் நிறைந்தது

எப்பொழுது டிபன் பாக்ஸ் திறந்தாலும் கோர்ட்னி , மார்க் இருவரும் இன்று என்ன சாப்பாடு என்று கேட்டுக்கொண்டு என் ஆபீசுக்கு வந்துவிடுவார்கள். இன்று பொங்கல் தேங்காய் சட்னி கொண்டு வந்து இருந்தேன்.

இன்னொரு அமெரிக்க பெண்மணிக்கும் சேர்த்து மொத்தம் மூன்று பேருக்கு
எல்லாவற்றையும் கொடுத்து விட்டேன். இந்த சாஸ் எப்படி பண்ணே என்று கேட்டார்கள். :) மிகவும் நன்றாக இருக்கு என்று கூறி சாப்பிட்டார்கள். நன் காலை மற்றும் மதிய உணவுக்கும் சேர்த்து கொண்டு வந்த உணவு காலையே காலி ஆகிவிட்டது.

நம் சாப்பாட்டை இங்கு உள்ளவர்கள் ரசித்து சாப்பிடுகிறார்கள். நம் உணவை பற்றி நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது. உங்கள் கிட்டே சொல்லி சந்தோஷ பட்டு கொள்கிறேன்.

நமது சாப்பாட்டை நினைத்தாலே சுவை இனிக்கும். நம் சாப்பாட்டுக்கு ஈடு இணையே இல்லை

மேலும் சில பதிவுகள்